மே, ஜுன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான PLI / RPLI தவணைத் தொகையை தாமதக் கட்டணமின்றி ஆகஸ்ட் 21 வரை செலுத்தலாம் என PLI இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மே 26ல் Super Blood Moon வானியல் நிகழ்வு தோன்றும்...
மே 26ம் தேதி நிகழும் சந்திரகிரகணம் - சிவப்பு நிறத்தில் தோன்றப்போகும் நிலவு...
வருகிற 26 ஆம் தேதி நிகழும் சந்திரகிரணத்தின் போது, நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும்.
சூரிய குடும்பத்தில் உள்ள பூமி, சூரியனை சுற்றி வருவதோடு, தன்னைத்தானேயும் சுற்றி வருகிறது. பூமியின் துணைக் கோளான சந்திரன், பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது, சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, வருகிற 26 ஆம் தேதி நிகழும் சந்திரகிரகணம் மிக சிறப்பானது.
அதாவது, நீள்வட்டபாதையில் பூமியை சுற்றும் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும்போது, இந்த சந்திரகிரகணம் நிகழ்கிறது. அப்போது, சந்திரன் மீது சூரியனின் கதிர்கள் விழுவதை பூமி முற்றிலுமாக தடுக்கிறது. இதனால் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இது வானியல் விஞ்ஞானிகளால் Super Blood Moon என அழைக்கப்படுகிறது.
இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த சந்திரகிரகணம் சுமார் 3 மணி நேரம் நடைபெறுகிறது. முழு சந்திர கிரகணம் சுமார் 15 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், இரவு 7.19 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி பகலிலேய முழு சந்திரகிரகணம் நடைபெறுவதால், அதை முழுமையாக பார்க்க முடியாது.
எனினும், வடகிழக்கு மாநிலங்களில் மாலையில், சந்திரகிரகணம் நிறைவடையும் நேரத்தில் இதை பார்க்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானில் தோன்றும் அதிசய நிகழ்வை பெரும்பாலான இந்திய மக்கள் பார்க்க முடியாதது என்பது வருத்தமான செய்தியாகும்.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை அகற்றியது சத்தீஸ்கர் அரசு...
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை அகற்றியது சத்தீஸ்கர் அரசு.
தற்போது அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் படத்துடன் வழங்கப்படுகிறது தடுப்பூசி சான்றிதழ்.
அச்சமின்மையே ஆரோக்கியம்! - இன்று ஒரு சிறு கதை...
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.
என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசிச்சார்.
பீர்பாலை பார்த்தார்.
பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.
மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
*அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
*கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.
*அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
👉 *பயம் ஒரு பெரிய நோய்.
*நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.
👉 அச்சமின்மையே ஆரோக்கியம்!
மே 24-ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
மே 24-ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
DIPR-P.N NO.06-Hon'ble CM Statement-Lockdown-Date 22.05.2021
தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமல்.
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.
பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.
காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.
அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி.
இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க அனுமதி.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும்.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
>>> செய்திக் குறிப்பு எண்: 06, நாள்: 22-05-2021...
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணத்தை வழங்க 1030 கோடி ஒதுக்கீடு...
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணத்தை வழங்க 1030 கோடி ஒதுக்கீடு... கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் தொடர்பாக 1800 425 3993 என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...