கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் தேர்வு - சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி...

 மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு  விவகாரத்தில் சட்டப்பேரவை கூடிய பிறகு முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.


சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (மே 25) செய்தியாளர்களைச் சந்தித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


"பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் நீட்  எதிர்ப்பே நமது கொள்கை. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது போல எப்போதுமே நாம் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்தான். கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.


நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை  எப்போது கூடுகிறதோ அப்போது இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை வழக்கமான தேர்வு முறையே பின்பற்றப்படும். தேர்வு நேரக் குறைப்பு, விரிவான பதில் அளிப்பு ஆகியவை மாற்றப்படாது. இதையேதான் மத்திய அரசுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எனினும், தேர்வுகளைப் பாதுகாப்புடன் நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு.


பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.


இறந்த ஆசிரியருக்கும் களப்பணி - கொரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு...

 வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:


500 ஆசிரியர்கள் உயிரிழப்பு


மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் கரோனா பரவும்.



 

கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஆசிரியர்கள் மருத்துவமற்ற பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும்.



 

தவிர்க்க இயலாத சூழலில் ஆசிரியர்களுக்கு களப்பணி வழங்கப்பட்டால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது. ஆசிரியர்களை நேரடி களப்பணியாளர்களாக நியமிக்கும் முன்பாக, அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அரசாணை வெளியிட வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.



இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட களப்பணியை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் களப்பணி அல்லாத இதர பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.



இறந்த ஆசிரியைக்கு பணியாணை


ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை மணிமேகலை நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட, பணியாணை வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



மே-2021 மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்டக் கருவூலர் அறிவிப்பு...

 


கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலரின் உத்தரவுப் படி மே-2021 மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்டக் கருவூலர் அறிவிப்பு...


>>> திருவள்ளூர் மாவட்டக் கருவூலர் அறிவிப்பு...


>>>  திருப்பூர் மாவட்டக் கருவூலர் அறிவிப்பு...


>>> படிவம்...






BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...

 



BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...



🎥 BRIDGE COURSE VIDEOS 🎥
   
   அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 25.05.2021 வரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 160 வீடியோக்களையும் 2 முதல் 9 வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் தலைப்பிற்கு உண்டான வீடியோ பாடம் வரும்.

தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...

தொகுப்பு.

G.கார்த்திகேயன்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அழிஞ்சிவாக்கம்,
கடம்பத்தூர் ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

👇👇👇👇👇👇👇👇👇👇


















பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு குறித்து அதிகாரிகள் விளக்கம்...

 பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு குறித்து அதிகாரிகள் விளக்கம்...




பிளஸ் 2 தேர்வு எப்போது? மாணவியின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வி அமைச்சர்...

 


12ம் பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள் - தமிழக அரசின் அறிக்கையில் தகவல்...

 


12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா அல்லது முக்கியப் பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்யாமல், தற்போதைய நடைமுறையிலேயே தேர்வு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பான கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தமிழக அரசு தனது கருத்துகளை அனுப்பியுள்ளது. அதில், கொரோனா கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...