கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து 2 நாட்களில் முடிவு -அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...

 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...



+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & Toll Free Number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

 


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க Mail Id & Toll Free Number பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...


tnschooledu21@gmail.com ,

தொலைபேசி உதவி எண்: 14417


இந்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தங்களுடைய கருத்துகளை இரண்டு நாட்களுக்கு பதிவிடலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை...



 தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மருத்துவ குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.




முதல்வர் ஆலோசனை:


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசு நோய் பரவலின் காரணத்தை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. மாவட்டங்கள் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறார்கள். தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்துள்ளது.




இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு 490 என்ற அளவில் உள்ளது.




இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினரை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர். ஜூன் 7ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் 4 நாட்களில் கொரோனா எந்த அளவுக்கு குறையும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து இந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொது வருங்கால வைப்பு நிதி & பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - வட்டி வீதம்...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொது வருங்கால வைப்பு நிதி & பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - வட்டி வீதம்...


TAMILNADU GOVERNMENT EMPLOYEES - GPF & CPS - RATES OF INTEREST  (With G.O.No. & Date)

From 01.04.1956 to Up-to-Date (30.06.2021)...




>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொது வருங்கால வைப்பு நிதி & பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - வட்டி வீதம் (அரசாணை எண் மற்றும் தேதியுடன்)...





கொரோனா தடுப்பூசிகள் - ஒரு ஒப்பீடு ( COVID 19 - Vaccines Comparison)...

 



>>> கொரோனா தடுப்பூசிகள் - ஒரு ஒப்பீடு ( COVID 19 - Vaccines Comparison) - PDF FILE...


கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்...

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது.


GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது  உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை   வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.






ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு - TNPSC யிடம் ஒப்படைப்பு (நாளிதழ் செய்தி)...


ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.


குவிந்த வழக்குகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன.


இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.


இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.


பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.


குளறுபடியான வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை; போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.


ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.


உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது. அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


கலைப்பதே சரி

உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது. அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி: தினமலர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...