கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு (நாளிதழ் செய்தி)...

 


புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு  (நாளிதழ் செய்தி)...

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு புதிதாக 1,575 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நான்கு மாதங்களுக்கு முந்தைய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தாமதமாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர் பதவிகளுக்கு 1,575 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, தேர்தலுக்கு முன், பிப்.,1ல் கையெழுத்தானது.ஆனால், அதை பள்ளி கல்வி செயலகம், நான்கு மாதங்களாக கோப்பிலேயே வைத்து, நேற்று திடீரென வெளியிட்டுள்ளது.

பிப்., 1 அரசாணையில், பள்ளி கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலர் தீரஜ்குமார் கையெழுத்திட்டுள்ளார். இந்த அரசாணையின்படி, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தேவைக்கு அதிகமானவை என்ற வகையில், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அந்த இடங்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க தேவைப்படும் முதுநிலை ஆசிரியர் இடங்களாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த 1,575 இடங்களில் 50 சதவீதமான 787 இடங்கள், தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், மீதமுள்ள இடங்கள் புதிய பட்டதாரிகள் வழியாகவும் நிரப்பப்படும் என, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


 

>>> அரசாணை (நிலை) எண்:18, நாள்: 01-02-2021... ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...

 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...




அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை நிலை எண்:18, நாள்: 01-02-2021 வெளியீடு...


>>> அரசாணை நிலை எண்:18, நாள்: 01-02-2021 & மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் (பாட வாரியாக)...


10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் என கல்வித்துறை அறிவிப்பு...

 


10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் (Nominal Roll) திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் என கல்வித்துறை அறிவிப்பு...


10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 - 17-ம் தேதிக்குள்ளாக https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம்- தேர்வுத்துறை அறிவிப்பு.


>>> திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை, நாள்: 11-06-2021...


ஓட்டுநர் உரிமம் பெற புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது...

 அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


RTO அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.


புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்.


புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது...




பணியிட மாறுதல் கோரி யாரும் வரவேண்டாம் - முதலமைச்சர் உத்தரவின் படி ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்படும் - மருத்துவத் துறை பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி...

 பணியிட மாறுதல் கோரி யாரும் வரவேண்டாம் - முதலமைச்சர் உத்தரவின் படி ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்படும் - மருத்துவத் துறை பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி...




EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்ய தேவையான விவரங்கள்...

Details required to prepare  Transfer Certificate for students on EMIS website...


>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்ய தேவையான விவரங்கள்...




*🟢🔵தற்போது EMIS TC  Generate  செய்வதில்   சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த கல்வி ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.*

🔹🔸மாணவர்கள் தகவல்களை தயார் நிலையில் வைத்து இருக்கவும்......

முறையான அறிவிப்பு வந்த உடன் EMIS TC Generate செய்யலாம்..

1. LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரும் மாணவர்களுக்கு தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குதல் வேண்டும்.

2. முதலில் students - students list வாயிலாக மாணவர்களின் சுயவிவரப் படிவத்தில் (students profile) ஏற்கனவே தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவனின் விவரங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து save செய்திடல் வேண்டும்.

3. அதனைத் தொடர்ந்து students students TC Details வாயிலாக மாற்றுச் சான்றிதழுக்கு தேவையான விவரங்களை மாணவனின் பெயருக்கு எதிராக இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து. பூர்த்தி செய்தல் வேண்டும்.

இப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். *Personal mark of identification_ சார்ந்த மாணவனின் இரு அங்க அடையாளங்களில் ஒவ்வொன்றை 50 எழுத்துக்களுக்குள் பிழையின்றி பூர்த்தி செய்தல் வேண்டும். 

 Student is promoted to the next class_ 10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு மட்டும் Refer Marksheet எனவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு Yes/No/No-discontinued என்பதில் பொருத்தமான ஒன்றையும் தேர்வு செய்தல் வேண்டும்.

'School recognition number_அரசு உதவி பெறும் பள்ளிகள்சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அங்கீகார எண்ணைப்பூர்த்தி செய்தல் வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தவும். (Ex: ந.க.எண் - R.C Number) *Caste/ community/ religion_அரசின் வழிகாட்டுதல் படி மாணவர்களின் மதம்/ இனம் சார்ந்த விபரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடாமல், Refer community certificate / leave bank/ No caste( communilty) என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தல் வேண்டும்.

"TC application date & issue date தற்போது எந்த தேதியில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரிவிண்ணப்பம் அளித்துள்ளாரோ/ தாங்கள் எந்த தேதியில் மாற்று சான்றிதழ்கள் வழங்க இருக்கிறீர்களோ அதனை குறிப்பிடுதல் வேண்டும்.

4. அதனைத்தொடர்ந்து மேற்கண்டவாறு பூர்த்திசெய்து விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளதை உறுதி செய்த பின் save என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.

5. அவ்வாறு save செய்த பின்பு, என்பதை தேர்வு செய்து மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்தல் வேண்டும். தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு (highest class) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் terminal class என்பதையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் தேர்வு செய்தல் வேண்டும். அதனை தேர்வு செய்து save செய்தபின், சார்ந்த மாணவனது விவரங்கள் commonpoolக்கு சென்றுவிடும் தங்கள் பள்ளியில் students listல் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.

6.அதேசமயம் students- students TC details - current student listல் இடம் பெற்றிருந்த மாணவனின் விவரங்களும் past students listக்கு சென்றுவிடும்.

7. தற்போது past students listல் இடம்பெற்றுள்ள சார்ந்த மாணவனது பெயருக்கு எதிரே உள்ள pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மாற்றுச் சான்றிதழை நகலெடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

8. Pdf வடிவில் பதிவிறக்கம் செய்த பின்பு மாற்றுச் சான்றிதழில் பிழைகள் கண்டறியப்படின், past students listல் சார்ந்த மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து திருத்தங்களை செய்தபின், மீண்டும் pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

9. Student TC detailsல் இடம்பெறும் save optionயை மொத்தமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்த இயலும். முதல் முறையில் அங்க அடையாள விபரம் முதல் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் தேதி வரையிலான விவரங்களை பதிவு செய்து save செய்தபின், திருத்தங்கள் கண்டறியப்படும் போது மேலும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.

10. மாணவனின் பெயரில் 'ஸ்ரீ' என்ற வடமொழி எழுத்து இடம்பெறும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியின் மாற்று சான்றிதழ் புத்தகத்திலிருந்து மாற்று சான்றிதழ் வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அம்மாணவருக்கு எமிஸ் தளத்தில் மாற்றுச் சான்றிதழ் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தபின் common poolக்கு அனுப்புதல் வேண்டும் என அனைத்துவகை பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கப்படுகிறது.
நன்றி .....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...