கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவு...



 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவு...


தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரியவும் அவர்கள் தேவையான போக்குவரத்து வசதிகளை நடைமுறைப்படுத்தவும் மற்றும் தேர்ச்சி விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/ இ1/ 2020, நாள்: 11-06-2021...


>>> பள்ளிக்கல்வி ஆணையரின்  செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/ இ1/ 2020, நாள்: 11-06-2021...


11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், தற்போது மாணவர் சேர்க்கை இல்லை -பள்ளிக்கல்வி துறை அமைச்சர்...

 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், தற்போது மாணவர் சேர்க்கை இல்லை...


பத்தாம் வகுப்பு சான்றிதழில் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும். மதிப்பெண்கள் இருக்காது.


 - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...






இன்றைய (14-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 14, 2021



 

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.


பரணி : சிக்கல்கள் குறையும்.


கிருத்திகை : வசதிகள் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 14, 2021



மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்துப்பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 14, 2021



மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.


திருவாதிரை : நன்மையான நாள்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 14, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளவும். தந்திரமான செயல்களின் மூலம் மனதில் இருக்கக்கூடிய விருப்பங்களை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்



புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : தற்பெருமையை தவிர்க்கவும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 14, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.


உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 14, 2021



நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெற்று மனம் மகிழ்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : புத்துணர்ச்சி உண்டாகும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 14, 2021



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


சுவாதி : லாபம் மேம்படும்.


விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 14, 2021



செய்கின்ற காரியங்களின் தன்மைகளை அறிந்து செய்வது நம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மேற்கொள்ளும் சிறு தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 14, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தானியம் சார்ந்த வியாபாரத்தில் புதிய கொள்முதல்களில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் கூறும் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 14, 2021



வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : தெளிவு பிறக்கும்.


திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.


அவிட்டம் : இலக்குகள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 14, 2021



கால் பாதங்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : இன்னல்கள் குறையும்.


சதயம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 14, 2021



உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்



பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



G.O.No.2379 - 24 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...



சென்னை ஆட்சியராக ஜெயராணி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்.


புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்.


விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்.


விழுப்புரம் ஆட்சியராக மோகன், வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம்.


நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்...



>>> Click here to Download G.O.Rt.No.2379, Dated : 13-06-2021...




உபரி பணியிடங்களில் பணி செய்யும் ஆசிரியர்களின் பணி நிரவல் - உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணையில் வழங்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் கல்வித்துறை பின்பற்ற வேண்டிய கால அட்டவணை...

 


தமிழ்நாடு அரசு நிதி உதவிபெறும் ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நியமனங்கள் மற்றும் உபரி பணியிடங்களில் பணி செய்யும் ஆசிரியர்களின் பணி நிரவல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 31.03.2021 அன்று மாண்புமிகு டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பாணையில் வழங்கப்பட்ட நெறிமுறைகள்...






பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி...

 


கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான நிர்வாக பணிகளை துவங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.


கொரோனா பெருந்தொற்றால், தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.முதல் அலையின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதனால், மே 24 முதல் முழு ஊரடங்கு அமலானது. அந்த மூன்று வார ஊரடங்கு நாளை முடிகிறது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.


அத்துடன், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி, புதிய கல்வி ஆண்டுக்கான பணிகளை, தமிழக பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித்துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.அதனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நிர்வாக பணிகளை துவங்குவதற்கு, ஊரடங்கில் அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர, வாகன போக்கு வரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.



அரசு அனுமதி

மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள், தங்களின் நிர்வாக பணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதன்படி, நாளை முதல், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினமும் பள்ளிக்கு வந்து, நிர்வாக பணிகளை பார்க்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளும், தங்கள் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் தாளாளர்களை, தினமும் பணிக்கு வந்து, பணிகளை துவங்க அறிவுறுத்தியுள்ளன.இதன் காரணமாக, தங்களுக்கான கல்வி எதிர்காலம் என்னாகுமோ என, அச்சத்தில் இருந்த மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


புதிய விடிவு

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இன்னும் சில தினங்களில் புதிய மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா அச்சம் மற்றும் கோடை விடுமுறையால், வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்களும், புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.


இதன் காரணமாக, கற்பித்தல் பணியும் இல்லாமல், மாத சம்பளமும் இல்லாமல் தவித்து வந்த, லட்சக்கணக்கான தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களும், புதிய விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 


இந்நிலையில், உயர் கல்விக்கான எதிர்காலம் குறித்து, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள், மிகப்பெரிய அளவில் உருவாகின்றன. எப்போதெல்லாம் சவால்களும், பிரச்னைகளும் வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும்.'டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக் செயின், சோலார் எனர்ஜி, 5ஜி' தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என, அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.


மாணவர்கள் உயர் கல்வியை படிக்கும்போதே, தொழில்நுட்ப அறிவையும், இதர திறன்களையும் வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் உயரிய இடத்தை அடைய முடியும்.




உற்சாகம்

இன்றைய பெருந்தொற்று காலத்தை முறையாக பயன்படுத்தி, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் துறை சார்ந்த நிபுணர்களிடம், 'ஆன்லைன்' வழியாக மாணவர்கள் கலந்துரையாட, கல்லுாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.



வரும் காலங்களில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்பதால், மாணவர்கள் கவலைகள் இன்றி, புதிய கல்வி ஆண்டு பணிகளை உற்சாகமாக துவங்க வேண்டும்.நிலைமை விரைவில் சீராகி, மீண்டும் வகுப்பறைகளில், நேரடியாக கல்வி கற்கும் நிலை வரும் என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் 'அப்துல் கலாம்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு...

 சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் 'அப்துல் கலாம்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...