கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTO அலுவலகம் செல்லாமல் Online மூலமாக Driving Learner License பெற விண்ணப்பிப்பது எவ்வாறு...?

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களும் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற நேரடியாக சென்று காத்திருக்க தேவையில்லை.


ஆன்லைன் மூலமாகவே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் காணலாம். தேவையான ஆவணங்கள் குறித்த விவரம், பிறந்த தேதி சான்று, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சுய அறிவிப்பு படிவம், புகைப்படம் ஆகியவை ஆகும்.


விண்ணப்பிக்கும் முறை:


தமிழக அரசின் www.parivahan.gov.in என்ற இணையதளத்தை open செய்ய வேண்டும்.


பின்னர் வலைத்தளத்தில் வலது பக்கம் மூலையில் “சாரதி” (Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்” (Driving Licence Related Service) கிளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஸ்கிரினின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்” (Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் கிளிக் செய்ய வேண்டும். அதில் நிறைய சேவைகள் இருக்கும்.


புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் விண்ணப்பத்திற்குத் தேவையான ஃபார்ம் வரும்.


அதில் (Applicant does not hold Driving/ Learner Licence) இதற்கு முன் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் கற்றுநர் உரிமம் இல்லை என்ற ஆப்ஷன் தேர்வு செய்து சப்மிட் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.


இப்பொழுது உங்கள் தனி நபர் விவரங்களை கற்றுநர் உரிமம் ஃபார்ம்  இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இதில் கியர் வாகனத்திற்கு கற்றுநர் உரிமம் அல்லது கியர் இல்லா வாகனத்திற்கான கற்றுநர் உரிமம் என்பதைக் கவனமாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் உங்கள் ஸ்கேன் செய்த தனிப்பட்ட மூன்று அடையாள சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கடைசியாக சப்மிட் கிளிக் செய்து உங்கள் ஃபார்ம் சமர்ப்பிக்க வேண்டும்.


அதன் பின்னர் உங்களுக்கு ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதனை Print எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும், உங்களுக்கான குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் வந்துள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.


இதில் உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 எ ஆகியவற்றை பிரிண்ட் செய்து பின்னர் கட்டணத்தை செலுத்தி உங்கள் கற்றுநர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.


இதே முறையில் 30 நாட்களுக்கு பின்னர் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.


கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி நிரல் புதிய கால அட்டவணை...

 


Kalvi TV Broadcast - Program New Schedule ...


கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி நிரல் புதிய கால அட்டவணை...


>>> Click here to Download Kalvi TV Broadcast - Program New Schedule ...


EMIS Important News - முதல் வகுப்பு மாணவர்களுக்கு வலைதளத்தில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்...



 EMIS Important News - முதல் வகுப்பு மாணவர்களுக்கு வலைதளத்தில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளும் பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்...


1. உங்கள் பள்ளி  முதல் வகுப்பு மாணவர்களுக்கு  புதிதாக பதிவு மேற்கொள்ளும் முன் அந்த மாணவன் வேறு எங்கும் இதற்கு முன் படிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.


2. அந்த மாணவன் ஏற்கனவே வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் LKG,UKG படிந்திருந்தால் அந்த மாணவனுக்கு emis id இருக்கும்.


3.அந்த மாணவனை emis- students admission- search செய்து admit செய்து கொள்ளவும்.


4.இந்த வருடம் புதிய மாணவர்களை emis தளத்தில் சேர்க்கும் போது  student type 1.regular students & 2.migrant students என வரும்.


5. Regular students என்றால் மாணவன் தமிழ்நாட்டில் வசிப்பவன்.


6. Migrant student என்றால் மாணவன் இதற்கு முன் வேறு மாநிலத்தில் படித்துவிட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான் என அர்த்தம்.


(பெற்றோர்கள் வேலை காரணமாக வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்திருக்கலாம் அல்லது தமிழக பெற்றோர்கள் வேலை காரணமாக இதற்கு முன் வேறு மாநிலத்திலும் தற்போது தம் சொந்த மாநிலத்திற்கு வந்திருக்கலாம்)


7. Migrant student முதல் வகுப்பு மட்டுமின்றி வேறு எந்த வகுப்பாக இருந்தாலும் புதிய பதிவை மேற்கொள்ளலாம்.


அவசரம் வேண்டாம்  கவனமாக பதிவு செய்யவும்.

வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு...

 வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியீடு...


ONLINE: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பெற்றோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!


இந்தியாவில் CORONA  பேரலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ONLINE  வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ONLINE  கல்வியில் பெற்றோர்களுக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு March  மாதம் முதல் CORONA  நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ONLINE  வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் ONLINE  கல்வியில், அவர்களது பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதாவது ONLINE  கல்வியில் மாணவர்களின் பெற்றோர்களின் பங்கு குறித்த வழிகாட்டுதல்களை அந்தந்த மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாநில கல்வித்துறைக்கும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடு தான் முதல் பள்ளி. பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்.


அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ONLINE  கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறை(POSITIVE)யான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழி நடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் – B.Ed./B.Ed.(Spl.Edn.)/M.Ed./M.Ed.(Spl.Edn.) Degree Examinations, June/July 2021 – Time Table - PDF...

 


 TNTEU– B.Ed./B.Ed.(Spl.Edn.)/M.Ed./M.Ed.(Spl.Edn.) Degree Examinations, June/July 2021 – Time Table - PDF...


>>> Click here to Download Time Table...



இன்றைய (20-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஜூன் 20, 2021



 

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : வருமானம் அதிகரிக்கும்.


கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 20, 2021



சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 20, 2021



உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூன் 20, 2021



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நன்மையளிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூசம் : மேன்மையான நாள்.


ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 20, 2021



உடலளவிலும், மனதளவிலும் புதுவிதமான பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : தன்னம்பிக்கையான நாள்.


பூரம் : லாபம் உண்டாகும்.


உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 20, 2021



ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : தனவரவுகள் கிடைக்கும்.


அஸ்தம் : கவலைகள் குறையும்.


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 20, 2021



வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : முன்னேற்றமான நாள்.


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


விசாகம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 20, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பங்காளி வகை உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : பொறுமை வேண்டும்.


கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 20, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், முடிவுகளும் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : மேன்மை உண்டாகும்.


பூராடம் : தீர்வு கிடைக்கும்.


உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 20, 2021



தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வு ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்களும், அதற்கான உதவிகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



உத்திராடம் : திருப்தியான நாள்.


திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.


அவிட்டம் : உயர்வு உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 20, 2021



எந்தவொரு செயலையும் மனதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம்: தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : இடமாற்றங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 20, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளினால் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் காலதாமதம் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் மீது உங்களது எண்ணங்களை திணிப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...