கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அமைச்சரவையில் 07-07-2021 அன்று புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்...

 


Newly appointed Ministers and their Departments in the Union Cabinet on 07-07-2021...

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳


பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவையில்  இன்று புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள்...

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻



1️⃣ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு. தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒதுக்கீடு



2️⃣ மத்திய கேபினட் அமைச்சராக பதவியேற்ற மன்ஷுக் மாண்டவ்யாவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு


*மன்ஷுக் மாண்டவ்யாவுக்கு கூடுதலாக ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கீடு


3️⃣ ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை  மத்திய அமைச்சர் மாண்புமிகு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு ஒதுக்கீடு


4️⃣ மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜவுளித்துறை ஒதுக்கீடு


5️⃣ உள்துறை அமைச்சர் மாண்புமிகு. அமித் ஷா அவர்களுக்கு கூடுதலாக கூட்டுறவுத்துறை இலாகா  பொறுப்பு


>>> மத்திய அமைச்சரவையில் 07-07-2021 அன்று புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்...


இன்றைய (08-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 08, 2021



இளைய உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு மேம்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 08, 2021



பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரோகிணி : தாமதங்கள் குறையும்.


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 08, 2021



தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.


புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 08, 2021



அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புதிய உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : மேன்மையான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 08, 2021



பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : லாபம் அதிகரிக்கும்.


பூரம் : முயற்சிகள் சாதகமாகும்.


உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 08, 2021



அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : காலதாமதங்கள் குறையும்.


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 08, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் தன உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆதரவான நாள்.


சுவாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 08, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 08, 2021



காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மூலம் : தனவரவுகள் உண்டாகும்.


பூராடம் : அனுசரித்து செல்லவும்.


உத்திராடம் : லாபகரமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூலை 08, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே புரிதல் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


திருவோணம் : பரிசுகள் கிடைக்கும்.


அவிட்டம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 08, 2021



புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : தடைகள் குறையும்.


சதயம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


பூரட்டாதி : மேன்மையான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 08, 2021



மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கௌரவ பதவிகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். திடமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்...



💥 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.


💥 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .


💥 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு ,  அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.  


💥 உரையாடிய  விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


💥 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும்  வழங்கிட வேண்டும். 


💥 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.


💥 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், 


 💥 மேற்கண்டவாறு  இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும்  கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும் 


 💥 மேலும், இயக்குனர் அவர்களுடைய  அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர்களும், உடனே தொடர் நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் புதிய நடைமுறைகள் – ஆணையர் சுற்றறிக்கை...

 


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். 



பள்ளிகள் திறப்பு:

கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா 3 ஆம் அலைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையான ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


இந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட தகவல்களை, கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (EMIS) யின் இணையதளம் வழியாக கையாளப்பட வேண்டும். அதாவது, அரசு பள்ளி மாணவர்கள் எந்தவொரு நேரத்திலும் பாடங்களை கற்றுக்கொள்ளும் படி, TN-DIKSHA என்ற டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பாடப்புத்தகங்களை பெறுதல், கற்பித்தல் தகவல்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான பங்களிப்புகள், பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆசிரியர்களுக்கான பேஸ்புக் ஒர்க்பிளேஸ், கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 



அதனால் அரசு அறிவுரையின் படி, EMIS இணையதளத்தை அனைத்து மாவட்ட கல்வித்துறைகளும் புதுப்பிக்க வேண்டும். வரும் நாட்களில் பள்ளிகள் குறித்த ஏதேனும் புகார்கள், தகவல்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோருவதை தவிர்த்து அவற்றை EMIS இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும் துறை சார்ந்த வழிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கல்வியின் முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும். அது போல நடப்பு 2021-22 கல்வியாண்டில், 1 முதல் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2 ஆம் பருவ பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான தரவுகளை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> கல்வியியல்  மேலாண்மை தகவல் முறைமை தரவுகள் (EMIS) புதுப்பித்தல்,  2021-2022 -ஆம் கல்வியாண்டிற்கு 1-7 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகம் தேவைப்பட்டியல் கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கடிதம்...


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகள் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு ஆங்கில வழி பிரிவுகள் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:030942/W4/இ1/2021,  நாள்: 07.07.2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:030942/W4/இ1/2021,  நாள்: 07.07.2021...




மத்திய அரசின் முக்கியமான துறை அமைச்சர்கள் பதவி விலகல் - அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...

 முக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் போக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் கங்வார் மற்றும் பலர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஐந்து மாநிலங்களுக்கான முக்கியமான தேர்தல்களுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தில் மாற்றியமைக்கப் போவதால் பல மத்திய அமைச்சர்கள் புதிய மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள். கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உடல்நலக் காரணங்களால் தனது பதவியில் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தார். அவர் ராஜினாமா செய்துள்ளார், இனி அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளனர். மோடி கேபினட் மறுசீரமைப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மந்திரி டெபஸ்ரீ சவுத்ரிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு முக்கியமான நிறுவன பதவி வழங்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த பா.ஜ.க அமைச்சரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு கேபினட் அமைச்சருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம், கிராமப் புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார்.


மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த், ‘சட்டம் மற்றும் நீதி, தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளார். அதேபோல, ஹர்ஷவர்த்தன், பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரும் மூன்று துறைகளுக்கு அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல, மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருந்த அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்ஷிம்ரத் கவுர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, அனைத்து அமைச்சர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.


கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருந்துவருகிறது. எனவே, மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆளுநர்கள் நியமனம் இருந்தது.


இந்தநிலையில், இன்று மாலை 6 மணிக்கு புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. புதிய மற்றும் ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என 43 பேர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், சந்தோஷ் காங்வர், டேபாஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


அமைச்சரவையிலிருந்து விலகியவர்கள்:


 ஹர்ஷ் வர்தன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 


ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப அமைச்சர்


 ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வி அமைச்சர்


 பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்


 சந்தோஷ் கங்வார், தொழிலாளர் அமைச்சர் 


சதானந்த கவுடா, வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சர் 


பாபுல் சுப்ரியோ, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் கல்வி, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் 


சஞ்சய் தோத்ரே சாஹேப் பாட்டீல் டான்வே, மாநில நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் 


ரத்தன் லால் கட்டாரியா, ஜல் சக்தி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்


 பிரதாப் சாரங்கி, கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் எம்.எஸ்.எம்.இ. 


டெபஸ்ரீ சதுரி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் மாநில அமைச்சர் 


தவர்சந்த் கெஹ்லோட், மத்திய அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்


 பிரதமர் நரேந்திர மோடி, 2019 ல் பாஜகவின் வெற்றியின் பின்னர் புதன்கிழமை முதல் பெரிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் புதிய அமைச்சர்கள் குழுவைப் பெற உள்ளார்.


அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்பவர்கள் பட்டியல்...


43 அமைச்சர்களின் பெயர் பட்டியல்..


1) ஜோதிராதித்ய சிந்தியா


2)சோனோவால்


3) நாராயண் தாட்டு ரானே


4) கிஷன் ரெட்டி


5) ராமச்சந்திர பிரசாத் சிங்


6) அஸ்வினி வைஷ்ணவ்


7) கிரண் ரிஜிஜூ


8) பசுபதி குமார் பாரஸ்


9) ராஜ்குமார் சிங்


10) ஹர்தீப்சிங் புரி


11) மன்சுக் மாண்டாவியா


12) பூபேந்தர்


13) புருஷோத்தம் ரூபாலா


14) அனுராக் தாக்கூர்


15) பங்கஜ் சவுத்ரி


16) அனுப்ரியா சிங் படேல்


17) சத்யபால்சிங் பாகல்


18) ராஜீவ் சந்திரசேகர்


19) சோபா


20) பானுபிரதாப் சிங் வர்மா


21) தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்


23) எல்.முருகன்


24) மீனாட்சி லேகி


25) அன்னபூர்ணாதேவி


26) நாராயணசுவாமி


27) கவுசல் கிஷோர்


28) அஜய் பட்


29) பி.எல்.வர்மா


30) அஜய்குமார்


31) சவுகான் தேவ்சிங்


32) பக்வந்த் கவுபா


33) கபில் மோரேஷ்வர் படேல்


34) பிரதிமா பவுதிக்


35) சுப்ஹஸ் சர்கார்


36) பக்வத் கிஷன்ராவ் காரத்


37) ராஜ்குமார் ரஞ்சன் சிங்


38) பாரதி பிரவின் பவார்


39) பிஷ்வேஸ்வர்


40) சாந்தனு தாக்கூர்


41) முஞ்சப்பரா மகேந்திர பாய்


42) ஜான் பர்லா


43) நிதிஷ் பிரமானிக்









தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களை நியமித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐ.லியோனி மேடைப் பேச்சாளராகவும், நகைச்சுவை பட்டிமன்ற  நடுவராக அறியப்பட்டுவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டிற்கான  கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி வெளியீடு எண்: 400, நாள்: 07-07-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...