கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த ஆண்டுக்கான நீட் (NEET) தேர்வை ரத்துசெய்து தேர்வுக்கான அறிவிப்பைத் திரும்பப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்...

 இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்துசெய்து தேர்வுக்கான அறிவிப்பைத் திரும்பப் பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்...






EER Format... (Elementary Education Register)



EER (Elementary Education Register) 

  1. School Habitaion wise formats (Primary )
  2. School Consolidation formats (Primary)
  3. School Habitaion wise formats (Upper Primary)


EER படிவத்தில் (primary) hapitation wise விபரங்கள் 

1. மக்கள் தொகை (ஆண்,பெண்)


2.Child population 0 to 3, 3 to 5 பிரித்து எழுத வேண்டும்.


Upper primary level


school age population 15+ to 19 மற்றும் 15 to19.


School going children

15 to 19 மற்றும் 15 to19 ITI ,  Diploma, Catering படிப்பில்  சேர்ந்தவர் விபரம் கேட்கப் பட்டுள்ளது.


Drop out, never enroll details கேட்க பட்டுள்ளது.


 இததகவல்களை பூர்த்தி செய்து வைத்து EMIS வலைத்தளத்தில் EER format upload செய்த பின் entry செய்ய வேண்டும். 


தற்போது மேற்கண்ட விபரங்களை பள்ளியில் பூர்த்தி செய்து வைத்திருக்க வேண்டும்.


>>> Click here to Download EER Format...




இன்றைய (13-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 13, 2021



உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பரணி : புரிதல் ஏற்படும்.


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 13, 2021



தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.


ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 13, 2021



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை மற்றும் அதை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 13, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 13, 2021



வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் கிடைக்கும் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 13, 2021



உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 13, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், ஆதரவுகளும் கிடைக்கும். தன, தான்ய விருத்திக்கான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : அபிவிருத்தியான நாள்.


விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 13, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.


அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.


கேட்டை : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 13, 2021



விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூராடம் : புரிதல் மேம்படும்.


உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 13, 2021



குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 13, 2021



வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.


சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 13, 2021



உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரேவதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...









 ”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021ன் படி 

 பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.


>>> செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களின் ( DEO PA's) - அலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் as on 07-07-2021)...

 


தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்களின் ( DEO PA's) - அலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் as on 07-07-2021)...


>>> Click here to Download All DEO PAs Cell Phone Numbers...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நாட்டின் முதல், Digital Universityல் படிக்க, மாணவர்கள் இடையே அதிக ஆர்வம்...

 


கேரளாவில் உள்ள, நாட்டின் முதல், ‘டிஜிட்டல்’ பல்கலையில் படிக்க, மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலை துவக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மையம், டிஜிட்டல் பல்கலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த பல்கலையின் முதல் கல்வியாண்டு துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


மொத்தமுள்ள 30  இடங்களுக்கு, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வேலை பார்த்து கொண்டே ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு இங்கு வழங்கப்படுகிறது. இது, தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.  AI (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும் இங்கு நடத்தப்பட உள்ளன.


தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் திருத்தி அமைப்பு...



 தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து துணைத் தலைவர், உறுப்பினர் செயலர் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பைமுதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல், மன்றத்தின் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமலும், உயர்கல்வி மன்றம் திருத்தி அமைக்கப்படாமலும் இருப்பதால் அதை திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 


அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சரும், துணைத் தலைவராக பேராசிரியர் ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமியும், பணி வழி உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இந்தகுழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராமசாமி, அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர்.  இவர் அறிஞர் அண்ணா விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். மேலும், கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, இதே பதவியில் பேராசிரியர் ராமசாமியை நியமித்தார். அந்த பதவியில் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அவர் நீடித்தார். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதும் பல்வேறு விருதுகளும் பெற்றவர்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...