கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே நேரத்தில் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சித்த மாணவர்கள்: முடங்கியது நீட் வலைதளம்...

 


மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சித்ததால், நீட் தேர்வு இணையதளம் சற்று நேரம் முடங்கியது. 


நாடு முழுவதும் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. இருப்பினும், ஒரே நேரத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் சற்று நேரம் neet.nta.nic.in தளம் முடங்கியது. தற்போது அந்த தளம் மீண்டும் செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் முக்கிய ஆலோசனை...



 தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். சமீபத்தில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.


இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கருத்தை கேட்டறிய உள்ளார் பள்ளிக்கல்வித்துறை செயலாளர். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதா என ஆலோசனை நடைபெற உள்ளது.


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஜூலை 16ஆம் தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி இன்னும் திறக்கவில்லை என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா என்பவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் ஆலோசனை செய்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த முறையான அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது


மொத்தத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌கள், இளநிலை உதவியாளர்‌கள் மற்றும்‌ நூலகர்‌கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகள்‌ - முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌...

 செய்தி வெளியீடு எண்‌:448, நாள்‌:15.07.2021

செய்தி வெளியீடு

பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ ஆகிய பணியிடங்களுக்குப்‌ பணிநியமன ஆணைகள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்குத்‌ தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (15.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.


மேலும்‌, பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குக்‌ கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ விதமாக, 250 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குப்‌ பள்ளிக்கல்வித்‌ துறை அலுவலகங்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பணியாற்றிட இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும்‌, பொது நூலகத்‌ துறையில்‌ பணியாற்றிட 10 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு நூலகர்‌ பணியிடத்திற்கும்‌, ஒரு பணியாளரின்‌ வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கும்‌, என மொத்தம்‌ 261 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ பணியிடங்களுக்கான பணிநியன ஆணைகளை வழங்கினார்‌.


இந்த நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு.அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்‌ துறை ஆணையர்‌ திரு.க.நந்தகுமார்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9






இன்றைய (16-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 16, 2021



 மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாலின மக்களிடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சாதகமான நாள்.


பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------






ரிஷபம்

ஜூலை 16, 2021



 திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்கள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை சம்பந்தமான பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள். 


மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------






மிதுனம்

ஜூலை 16, 2021



 வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் ஏற்படும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை அடைவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். தர்க்க விவாதங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  புத்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : லாபம் ஏற்படும்.


திருவாதிரை : வசதிகள் மேம்படும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------






கடகம்

ஜூலை 16, 2021



 மனதில் எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மனை விருத்திக்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


பூசம் : உயர்வான நாள்.


ஆயில்யம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------






சிம்மம்

ஜூலை 16, 2021



 குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூரம் : ஆதாயம் உண்டாகும்.


உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------






கன்னி

ஜூலை 16, 2021



 சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : மாற்றமான நாள்.


அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.


சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------






துலாம்

ஜூலை 16, 2021



 வியாபாரம் தொடர்பாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறிகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : இன்னல்கள் குறையும்.


சுவாதி : புதுமையான நாள்.


விசாகம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூலை 16, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். செய்தொழிலில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : கவலைகள் நீங்கும்.


கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------






தனுசு

ஜூலை 16, 2021



 உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் : உதவிகள் சாதகமாகும்.


உத்திராடம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------






மகரம்

ஜூலை 16, 2021



 சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் மற்றும் அறிமுகங்கள் ஏற்படும். மனதில் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பலரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடல் மார்க்கம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : திருப்தியான நாள்.


அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------






கும்பம்

ஜூலை 16, 2021



 தாய்மாமன் வழி உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற பகைமை உணர்வுகளை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கோப்புகளை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிரும் பொழுது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------






மீனம்

ஜூலை 16, 2021



 சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். மகான்களின் தரிசனங்களால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் தோன்றும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : நினைவாற்றல் மேம்படும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : புதிய ஆசைகள் தோன்றும்.

---------------------------------------


TNPSC மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி பெற 20 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை (G.O.(3D)No.03, Dated: 13-07-2021) வெளியீடு...



TNPSC மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி பெற 20 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை G.O.(3D)No.03, Dated: 13-07-2021 வெளியீடு...


>>> Click here to Download G.O.(3D)No.03, Dated: 13-07-2021...





JEE Main நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்...

 


ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்:


ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


இதனால், ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுகிறது.


ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.


தமிழ்நாட்டில் கூடுதலாக 4 NEET தேர்வு மையங்கள் - கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

 தமிழ்நாட்டில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அரசு.


தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.


மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...