கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

OBC பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


 ஓ.பி.சி., பட்டியலில் எந்தெந்த ஜாதிகள்? இனி மாநிலங்களே முடிவு செய்யலாம்...


கல்வி, வேலைவாய்ப்பில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி வருகிறது. எந்தெந்த ஜாதியினர், இப்பட்டியலில் இடம் பெறலாம் என்பது குறித்து, மத்திய அரசே இதுவரை முடிவு செய்தது. இனி, மாநில அரசுகள் முடிவு எடுக்க அதிகாரம் அளிக்கும் வகையில், விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.


இட ஒதுக்கீடு

இதுகுறித்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைவரும், வழக்கறிஞருமான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:கடந்த, 2018ல், மஹாராஷ்டிராவில் அதிகமாக இருக்கும் மராத்தா ஜாதியினருக்கு, அம்மாநில அரசு, 16 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, '50 சதவீதத்திற்கு மிகாமல், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.


'இப்படி, ஒரு ஜாதிக்கு மட்டும் உள்ஒதுக்கீடாக, 16 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்' எனக் குறிப்பிட்டு, மராத்தா ஜாதியினருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மராத்தா ஜாதியை போல, நாடு முழுதும் பல ஜாதிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.


அவற்றுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதில் தவறில்லை என்று, மத்திய அரசு கருதுகிறது. அது, அரசியல் ரீதியிலும், தங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறது. இதனால், ஓ.பி.சி., பட்டியலில் யாரை சேர்க்கலாம் என, தான் வைத்திருக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளது. இதனால், மராத்தா உள் ஒதுக்கீடு போன்ற, பல குழப்பங்கள் தீர வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு நினைக்கிறது.


ஏற்கனவே, திருத்தப்பட்ட சட்டமாக இருக்கும் அரசியல் சட்டம், 102ல், மேலும் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து, அதை சட்டமாக்க, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, 27 சதவீத ஓ.பி.சி., பட்டியலில், யார் இடம்பெற வேண்டும் என்பதை, இனி மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நன்குடி வேளாளர் போன்ற பல ஜாதிகள், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெறாமல் இருந்தன.


இனிமேல், அவர்களும் ஓ.பி.சி., பட்டியலுக்குள் வரலாம். ஆனால், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே, இடஒதுக்கீடு விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், மொத்த இடஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என, தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு என, மத்திய அரசு புதிதாக அளித்துள்ள, 10 சதவீதத்தை சேர்த்தால், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு, 59.5 சதவீதமாகிறது.


குழப்பம் இருக்காது

அதை எதிர்த்தும் பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அது நிலுவையில் இருக்கிறது. ஓ.பி.சி., பட்டியலில், எந்த ஜாதிகள் இடம் பெறும் என்பதை, இனி மாநில அரசே முடிவு செய்யும் என்ற, சட்டத் திருத்தம் வருவதால், மாநில பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் ஜாதியில் இருந்தும், மத்திய அரசின், ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெற முடியாத குழப்பம் இருக்காது. ஆனால், மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற குழப்பங்கள் தீருமா என, தெரியவில்லை.


மராத்தா ஜாதிக்கு வழங்கப்பட்ட தனி உள் ஒதுக்கீடு போலவே, தமிழகத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இனி, அந்த இட ஒதுக்கீடு செல்லுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீட்டுக்கும் பிரச்னை வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


இன்றைய (26-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 26, 2021



மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.


பரணி : மேன்மை உண்டாகும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 26, 2021



குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அளிப்பது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 26, 2021



வியாபாரம் தொடர்பான பெரிய மனிதர்களின் சந்திப்புகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 26, 2021



எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எந்தவொரு வேலையை மேற்கொள்ளும் பொழுது தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : விரயங்கள் உண்டாகும்.


பூசம் : சிந்தித்து செயல்படவும்.


ஆயில்யம் : சோர்வு ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 26, 2021



கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி, பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 26, 2021



நீண்ட நாட்களாக மனதை உறுத்தி கொண்டிருந்த விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திரம் : தெளிவு கிடைக்கும்.


அஸ்தம் : புரிதல் அதிகரிக்கும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 26, 2021



மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



சித்திரை : மனம் மகிழ்வீர்கள்.


சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.


விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 26, 2021



பிள்ளைகளால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணப்பிரச்சனைகள் சற்று குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : சுபச்செலவுகள் உண்டாகும்.


அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 26, 2021



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மூலம் : ஒற்றுமை உண்டாகும்.


பூராடம் : அனுபவம் கிடைக்கும்.


உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 26, 2021



கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.


திருவோணம் : மேன்மையான நாள்.


அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 26, 2021



மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.


சதயம் : பிரச்சனைகள் நீங்கும்.


பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 26, 2021



அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------


ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 028761/அ3/இ1/2021, நாள்: 30-06-2021...



 ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுதல்...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 028761/அ3/இ1/2021, நாள்: 30-06-2021...



>>> அரசாணை நிலை எண்: 9, நாள் :02-02-2021, JACTTO GEO போராட்டம் - அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தல் - அரசாணை வெளியீடு...


திங்கள் (26-07-2021) முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதற்கான அறிவுரை...

 திங்கள் (26-07-2021) முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதற்கான அறிவுரை...

வ க அ இராதாபுரம்.





அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிதல் - அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல் — கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (CEO Proceedings) ந.க.எண். 4898 /ஆ3/2020, நாள்: 25-07-2021...



அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிதல் - அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிப் பணிகளை மேற்கொள்ளுதல் — சார்பு - CEO Proceedings - நாள்: 25-07-2021...


>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (CEO Proceedings) ந.க.எண். 4898 /ஆ3/2020, நாள்: 25-07-2021...


இந்திய ஒன்றிய அரசின் ஆணைகளில் காணப்படும் வளமான பிரிவினரை (Creamy Layer) நீக்கம் செய்வது குறித்த அளவுகோல்கள் விபரம் (Details of the criteria for the removal of the affluent section found in the orders of the Union Government of India)...



>>> இந்திய ஒன்றிய அரசின் ஆணைகளில் காணப்படும் வளமான பிரிவினரை (Creamy Layer) நீக்கம் செய்வது குறித்த அளவுகோல்கள் விபரம்...



அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...



 மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....


நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்


 கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .


இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.


பதிவாளர்,

தமிழ்நாடு செவிலியர் குழுமம்


>>>> Click here to View Recognized Nursing Institutions List...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...