கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு நாளை (26-07-2021) முதல் கணினி பயிற்சி...

 


ஆசிரியர்களுக்கு நாளை (26-07-2021) முதல் கணினி பயிற்சி..


தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பளளி ஆசிரியர்களுக்கான, இணையதள வழி அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, நாளை முதல் துவங்க உள்ளது.


'ஹைடெக்' ஆய்வகங்கள்(Hi-Tech Labs)

 ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ள, அடிப்படை கம்ப்யூட்டரை கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல், 'ஹைடெக்' ஆய்வகங்கள் ஆகியவற்றில், திறன் வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


'கியூஆர்' குறியீடு (QR CODE)

மாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு, நாளை முதல் 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து, 2.10 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 2 முதல் பல்வேறு கட்டங்களில், ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இப்பயிற்சியால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வர். புத்தகத்தில் உள்ள, 'கியூஆர்' குறியீடுகளில் உள்ள எண்ம வளங்களை பயன்படுத்தி கற்பித்தல், இணையதளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி, பாடக் கருத்துகளை எளிதாக விளக்குதல் போன்றவற்றில் திறனடைவர்.


>>> Hi Tech Lab - ICT Training Dates for Teachers...


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (Documents required to apply for admission in Government Arts and Science Colleges)...



>>> 2021-2022ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்...


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் (Government Arts and Science Colleges) சேர நாளை (26-07-2021) முதல் ஆன்லைனில் (Online Apply) விண்ணப்பிக்கலாம்...

 


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (26-07-2021) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...


தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு    நாளை முதல்  ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள்  சேர்க்கைகான விண்ணப்பங்களை   www.tngasa.in  என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். 


மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் போதுமான அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

பொதுப்பிரிவினர் 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் 2ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம்.


SC , ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.  பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும்  செலுத்த வேண்டும் 


 இணைய வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள்  மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் The director directorate of collegiate education, chennai-6 என்கிற பெயரில்   நேரடியாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு இ சேவை மையத்தின் மூலமும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.


மேலும் விபரங்களுக்கு கல்லூரிக்கல்வி இயக்கத்தின் 044-28260098, 28271911 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...

 


பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...


பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்:


B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை  விண்ணப்பிக்கலாம்.


செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 


ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும். 


செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும். 


அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்.



டோக்கியோ ஒலிம்பிக் -முதல் பதக்கத்தை வென்றது இந்தியா...

 டோக்கியோ ஒலிம்பிக்  முதல் பதக்கத்தை வென்றது இந்தியா


ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டி : பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.















டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம்...

 விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ்.


அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை.


அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெரிக் ரெட்மண்டைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.


1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ்.


அதோ டிராக்கில் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் அரையிறுதிப் போட்டிக்கு வீரர்கள் தயாராகிறார்கள்.


ஆன் யுவர் மார்க்...


19 வயதிலேயே பிரிட்டனின் 400 மீட்டர் தடகளப் போட்டியின் சாதனை நேரத்தை முறியடித்த டெரிக் ரெட்மண்ட், 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் தான் யார் என்பதை நிரூபிக்க ஐந்தாவது ஓடுதளத்தில் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.


கெட் செட்...


எல்லா போட்டிகளிலும் தன் மகனோடு பயணிக்கும் டெரிக்கின் தந்தை ஜிம், அப்போட்டியில் சுமார் 65,000 பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார்.


கோ... (துப்பாக்கி சத்தம்)


வீரர்கள் தங்களின் ஸ்டார்டிங் பிளாக்கில் இருந்து சீறிப் பாய்ந்தனர். ஓட்டத்தின் முதல் பகுதியிலேயே மெல்ல டெரிக் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.


போட்டியின் எல்லைக் கோட்டுக்கு இன்னும் சுமார் 175 மீட்டர்கள் மட்டுமே பாக்கி... அற்புதமாக ஓடிக் கொண்டிருந்த டெரிக் ரெட்மண்ட் திடீரென துள்ளிக் குதித்தார். அவரது வலது கால் தொடைப் பகுதியில் இருக்கும் ஹேம்ஸ்ட்ரிங்கில் பலத்த காயம் ஏற்பட்டது.


அதுவரை போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த டெரிக்கை, அந்த ஒரு நொடியில் அவரோடு ஓடிய மற்ற ஏழு வீரர்களும் முந்திக் கொண்டு சென்றனர். அவர் கண் முன்னே, அவரின் ஒலிம்பிக் கனவுக் கோட்டை சுக்கு நூறானது. அவரும் ஓடுதளத்திலேயே சுருண்டு உட்கார்ந்தார். போட்டி அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் குழு அவரை சூழத் தொடங்கியது.


விளையாட்டில் இறுதி வரை வாள் வீசுபவர்களைத் தான் உலகம் உச்சி முகரும். எல்லா வீரர்களும் கிட்டத்தட்ட பந்தய தூரத்தை கடக்கும் போது, மீண்டும் எழுந்து நொண்டி அடித்து பந்தய தூரத்தைக் கடக்கத் தொடங்கினார்.


கண்கள் முழுக்க கண்ணீர், ஹேம்ஸ்ட்ரிங் காயம் கொடுக்கும் மரண வலி... இருப்பினும் எல்லைக் கோட்டை நோக்கிய டெரிக்கின் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.


அவரை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் குழு வந்த போதும் போதும் "இல்லை நான் அந்த படுக்கையில் ஏறமாட்டேன். நான் இந்த போட்டியை நிறைவு செய்ய வேண்டும்" என மறுத்தார் என்கிறது இ.எஸ்.பிஎன் வலைதளம்.


ஒற்றைக் காலில் 175 மீட்டர் தூரத்தை மெல்ல வலியோடு தவ்வித் தவ்வி கடந்து கொண்டிருக்க, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அவரது தந்தை, மகனின் வேதனையை அறிந்து தாவி குதித்து, ஒலிம்பிக் 400 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்த ஓடுதளத்தை நோக்கி விரைந்தார்.


அதிகாரிகள் ஜிம்மை தடுக்க முயல, அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு, தன் மகனோடு கைகோர்த்தார். தன் மகனை அணைத்துக் பிடித்தவாறு மீத தூரத்தை கடக்க உதவினார் ஜிம் ரெட்மண்ட்.



தன் ஒலிம்பிக் கனவு மீண்டும் சிதைந்ததை எண்ணி, தன் தந்தையின் தோலில் சாய்ந்து கதறி அழுது கொண்டே பந்தய தூரத்தைக் கடந்தார் டெரிக். மீண்டும் என்றால் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொண்டாரா?


ஆம், 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில் கடைசி நேரத்தில் டெரிக் ரெட்மண்டுக்கு குதிகாலில் Achilles tendon என்கிற பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பந்தைய தூரத்தை தன் தந்தையின் உதவியோடு, சில நிமிடங்கள் கழித்து நிறைவு செய்த டெரிக் ரெட்மண்டின் போராடும் குணத்துக்காகவும், விளையாட்டின் அடிப்படை தத்துவமான Sportsmanship-க்காகவும் 65,000 ஒலிம்பிக் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.


1992 பார்சிலோனாவில் நடந்த இந்த சரித்திரப் புகழ் பெற்ற இந்த 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்டீவ் லீவிஸ் முதலிடத்தைப் பிடித்தார்.


ஆனால் டெரிக் ரெட்மண்ட் பார்வையாளர்களின் இதயங்களிலும், விடாமுயற்சியின் குறியீடாக பல விளையாட்டு வீரர்களின் மனதிலும் ஒரு நீங்கா இடம் பிடித்தார்.


அரவிந்த் கண் மருத்துவனை - செவிலியர் பயிற்சி - +2 முடித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்...



  அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் இரண்டாண்டு செவிலியர் பயிற்சிக்கு   +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள்  அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் (ஊதியம்: ரூ.10835+PF+ESI+DA) வழங்கப்படும்.


*பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

+2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)

ஆதார் அட்டை ((Original + Xerox copy)

Transfer Certificate – TC (Original + Xerox copy)


>>> பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


>>> இங்கே சொடுக்கவும்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...