கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10, 12ஆம் வகுப்பு தேர்வுக்கான தொகையை திருப்பி கொடுக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்...



 தேர்வு கட்டணத்தை திருப்பி தருதல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெரும்பாலான மாநிலங்கள் 10 மற்றும் 12ம் வகுப்பின் பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டன. அதேப்போன்று மத்திய கல்வி வாரியங்களும் தேர்வை ரத்து செய்தது.


இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையை மாணவர்களிடமே திருப்பி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் கிடையாது. ஏனெனில் தேர்வுகளுக்குகான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்னர் தான் கடைசி நேரத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசுகள் கண்டிப்பாக மேற்கொண்டு இருக்கும். அதனால் இந்த விவகாரத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


இன்றைய (11-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 11, 2021




உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு மேம்படும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : இடமாற்றம் ஏற்படும்.


பரணி : பொருள் வரவு மேம்படும். 


கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 11, 2021



முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : வெற்றிகரமான நாள்.


ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும். 


மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 11, 2021



கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் உதவிகளால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்துத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 11, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றி மறையும். நினைத்த காரியங்களை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தன, தான்ய விருத்தி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள். 


ஆயில்யம் : நிதானம் வேண்டும். 

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 11, 2021



உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். நினைத்த சில காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 



மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூரம் : லாபகரமான நாள்.


உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 11, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் உங்களின் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளிவட்டார நட்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். வங்கி சேமிப்புகள் உயரும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : நட்புகள் உண்டாகும். 


சித்திரை : சிறப்பான நாள்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 11, 2021



தொழில் தொடர்பான புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : ஆதரவான நாள்.


விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 11, 2021



தந்தை வழியில் பணவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். காரிய வெற்றி உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : மனக்கசப்புகள் நீங்கும். 


அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


கேட்டை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 11, 2021



உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 



மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும். 

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 11, 2021



குடும்பத்தில் சிறு சஞ்சலமான வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும். 


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 11, 2021



குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் புதுப்பொலிவும், தைரியமும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : திறமைகள் வெளிப்படும்.


பூரட்டாதி : நன்மையான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 11, 2021



துணிச்சலுடன் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : மரியாதைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளிகளை திடீர் ஆய்வு மூலம் கண்காணிக்க ஆய்வு அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (Proceedings of the Director of Matriculation Schools ) உத்தரவு...

Proceedings of the Director of Matriculation Schools

L.Dis.No.2878/A1/2021-1, Dated: 02-08-2021


 With reference to the letter cited, wherein it has been stated that students and their parents are thronging the Schools across the state for getting 9th Marksheet and 10th Transfer Certificates for joining higher secondary class. Similarly these students are flocking the Higher Secondary Schools for getting application for admission. 


Due to this, large crowd is witnessed in many of the schools in various districts and most of them are not following safety norm Hence, all the Chief Educational Officers are strictly instructed to instruct the school authorities to implement safety guidelines and ensure that admission process is being carried out without any safety violations. 


The Inspecting Officials are also instructed to conduct surprise visits to the schools to monitor the compliance of above instruction by the school authorities.



வட்டார வளமையங்களில் பணியாற்றுகின்ற வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) நிறுத்தி வைக்கப்பட்ட நிலையான பயணப்படியை வழங்குதல்(FTA) குறித்து மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள்(Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...



 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் வட்டார வள மையங்களில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான பயணப்படியை (FTA) ஜூன் 2021 மாதத்தில் வழங்கப்பட இருக்கின்ற சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் ஏப்ரல் 2021 மாதத்தில் முழுமையாகவும் ஜூன் 2021 மாதத்தில் , ( 7ஆம் தேதி முதல் 30 விழுக்காடு பணியாளர்களுடன் - பொது போக்குவரத்து இல்லாத பெருந்தொற்று காலத்திலும் தங்களது சொந்த வாகனத்தில் பயணம் செய்து) பணியாற்றியதாகவும் குறிப்பிட்டு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த நிலையான பயணப்படியை ( FTA ) தொடர்ந்து வழங்கிடவும் , மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையினை திரும்பப் பெறவும் பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளனர்.



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிரந்தர பணியாளர்கள் அவர்கள் பள்ளி பார்வை மற்றும் அலுவலகப் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் போது நிலையான பயணப்படி ( FTA ) விதிகளின்படி வழங்கப்படுகிறது . ( ஒரு நாள் பார்வைக்கு ரூ .60 / -ம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 பார்வை இருப்பின் 15 x 60 =ரூ.900/-ம் எத்தனை நாட்கள் பார்வை இருந்தாலும் அதிகபட்சமாக ரூ.900/- மாதப் பயணப்படியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அவர்கள் அளிக்கும் பார்வை அறிக்கையின் ( Visit report ) அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அடுத்த மாதத்தில் நிலையான பயணப்படி வழங்கப்படுகிறது.



கடந்த 05.06.2021 அன்று மாநில திட்ட இயக்கக நிதி பிரிவிலிருந்து மின்னஞ்சல் மூலம் நிரந்தர மற்றும் தொகுப்பூதியம் பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கும் ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் , அவர்கள் பணியாற்றியிருப்பின் அதனை உறுதி செய்து வழங்கிடவும் , வரும் மாதங்களில் வழக்கம் போல ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றிய காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பின் அதனை உறுதி செய்து பயணப்படியை விதிகளின்படி வழங்கிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


>>> மாநில திட்ட இயக்குனர்(SPD) அவர்களின் செயல்முறைகள் (Proceedings) ந.க.எண்:1728/அ1/ஒபக/2021, நாள்:09-08-2021...



பள்ளிகள் திறப்பு - ஓரிரு நாட்களில் முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்...



 செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும் தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கூறியிருந்தார். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என கூறினார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.


Bluetooth பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதியவர் கைது...


 உத்தரபிரதேசத்தில் ‘ப்ளூடூத்’ பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு எழுதி மாட்டிக் கொண்ட பெண் தேர்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் சார்பில்  ஆசிரியர் தேர்வு  நடைபெற்று வருகிறது. நேற்று  ஜான்பூர் மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் தேர்வுகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தேர்வின் போது மின்னணு கருவியைப் (ப்ளூடூத்) பயன்படுத்தி பெண் தேர்வர் ஒருவர் தேர்வு எழுதிய போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அவர், மின்னணு சாதனத்தை தனது காதில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்வு எழுதி கொண்டிருந்ததை தேர்வுத்துறை மேற்பார்வையாளர்கள் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண் தேர்வரை போலீசிடம் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.


இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காதில் பொருத்தப்பட்ட மின்னணு கருவியை பயன்படுத்தி தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர் சிக்கியுள்ளார். விசாரணையில், அவர் ஏற்கனவே பாலியில் நடந்த மற்றொரு தேர்வில் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண் தேர்வரின் பெயர் சுனிதா மோர்யா. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணிடமிருந்த மின்னணு கருவியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருப்பினும், தேர்வு எழுதிய போது அந்த பெண் மின்னணு கருவியை பயன்படுத்தி எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.


அந்த பெண் தேர்வரிடம் போலீசாருடன், எங்களது தேர்வுக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில், திருட்டுத்தனமாக ‘ப்ளூடூத்’ காதில் மாட்டிக்கொண்டு கமல் ஆள்மாறாட்டம் செய்து காப்பி அடிப்பது போல்,  உத்தரபிரதேச பெண் தேர்வரும் ப்ளூடூத் மூலம் வெளியாளிடம் கேள்விக்கான விடையைக் கேட்டு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்தி பிரச்சார சபா(Dhakshina Bharat Hindi Prachar Sabha) வழங்கும் சான்றிதழ்கள் தகுதியானவை: யுஜிசி செயலர் அறிவிப்பு...



 இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவை என்று யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.


இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்துஉயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பாடங்களை கற்றுத் தரவும்,தேர்வு நடத்தி பட்டங்கள் வழங்கவும் சென்னையில் உள்ள தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவுக்கு சட்ட விதிமுறைகளின்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


அதனால், இந்தி பிரச்சார சபாசார்பில் வழங்கப்படும் அனைத்துகல்விசார் சான்றிதழ்களையும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அங்கீகாரத் தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதுதொடர்பாக உரியவழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தி பிரச்சார சபா வழங்கும் சான்றிதழ்களை சில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், இந்த உத்தரவை யுஜிசி வெளியிட்டதாக கூறப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...