கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 12ஆம் வகுப்புக்கான(12th Standard) முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்(Prioritized Syllabus) - பள்ளிக் கல்வித் துறை(School Education Department) வெளியீடு...



 2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 12ஆம் வகுப்புக்கான(12th Standard) முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்(Prioritized Syllabus) - பள்ளிக் கல்வித் துறை(School Education Department) வெளியீடு...


>>> தமிழ் வழி(Tamil Medium)...


>>> ஆங்கில வழி(English Medium) (விரைவில்)...


இன்றைய (17-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 17, 2021



இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் நிதானம் வேண்டும். மனதில் தோன்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : நிதானம் வேண்டும்.


கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 17, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 17, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.


திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 17, 2021



வெளியூர் தொடர்பான பயணங்களில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 17, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வாசனை திரவியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 17, 2021



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 17, 2021



உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 17, 2021



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


கேட்டை : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 17, 2021



கூட்டு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : லாபம் உண்டாகும்.


பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


உத்திராடம் : மந்தநிலை குறையும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 17, 2021



உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்கால பணிகளை மேற்கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


திருவோணம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


அவிட்டம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 17, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் வரவுகளும், லாபமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 17, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களைப் பள்ளிகளில் சேர்த்தல் - மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - மாண்பமை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Proceedings of the Commissioner of School Education Rc.No.:042193/G2/S3/2021, Dated: 16-08-2021...

 


மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களைப் பள்ளிகளில் சேர்த்தல் - மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் - மாண்பமை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்...


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education Rc.No.:042193/G2/S3/2021, Dated: 16-08-2021...



கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி: AICTE...



 கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி: AICTE...

கல்லூரி மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இதனால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவல் குறைந்ததை அடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்  வெளியிட்டுள்ளது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'' * 2021- 22ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தவிர்த்த பிற மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 1 கடைசித் தேதி ஆகும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அக்டோபர் 25-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்.

* முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற அக்டோபர் 20 கடைசித் தேதி ஆகும்.

* முதலாமாண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி ஆகும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அக்டோபர் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

* கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.

* பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம்.

* கரோனா காலச் சூழலுக்கு ஏற்றவாறோ அல்லது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சக விதிமுறைகளின்படியோ கல்வி அட்டவணை மாற்றப்படலாம்.

* முன்கூட்டியே அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* எனினும் முந்தைய கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்தி, வகுப்புகளைத் தொடங்கிவிட்ட கல்வி நிறுவனங்கள் புதிய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை''.

இவ்வாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை(Rural Girls Scholarship) 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் ந.க.எண்: டி1/2123/2021, நாள்:25-07-2021 மற்றும் விண்ணப்பப் படிவம்...



 MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் ந.க.எண்: டி1/2123/2021, நாள்:25-07-2021 மற்றும் விண்ணப்பப் படிவம்...


மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். 


சாதிச் சான்று, வருமானச் சான்று தேவை.


>>> மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை (MBC / DNC Girls Scholarship Format) விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும்... (PDF Format)







2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்(Syllabus) மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான கட்டகங்கள் (Modules) அனுப்புதல் (Soft Copy) சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...(Commissioner of School Education Letter R.C.No. 34462/ PD1/E1/2021, Dated: 16-08-2021)...



 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்(Syllabus) மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான கட்டகங்கள் (Modules) அனுப்புதல் (Soft Copy) சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதம்...


Syllabus - Prioritization for the Academic Year 2021-2022 and the Refresher course Modules sending to all Schools Regarding...


>>> Click here to Download Commissioner of School Education Letter R.C.No. 34462/ PD1/E1/2021, Dated: 16-08-2021...



திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்(Central University, Tiruvararur) உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை(Announcement) வெளியீடு...

 


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை வெளியீடு..


>>> Click here to Download Entrance Exam Announcement...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...