கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...
கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...
அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
கோவிட் – 19, தடையின்மையை தளர்த்தி, 01.09.2021 முதல், பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு, அரசு உயர் / மேல்நிலை / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது சென்ற ஆண்டு பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தம் இருப்பிடங்களில் இருந்து பயிலும் பள்ளிவரை கட்டணமின்றி பயணிக்காலம்.
எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாணவ / மாணவியருக்கு, இப்பொருள் சார்ந்து தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021......
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021...
2021-22ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.
தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் ( EMIS ) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ( Sanctioned Posts ) சார்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்திட ஏதுவாக உள்ளீடு செய்ய DSE Staff fixation என்ற தலைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே , சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ( Sanctioned Posts ) ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து மேற்படி இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது(Dr.Radhakrishnan Award) வழங்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...
கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன் அனுமதி: அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு...
கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகளில் கருத்தரங்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''கரோனா பாதிப்புக்கிடையே தமிழக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் வளாகத்துக்குள் கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட அதிகமான நபர்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த இயக்குநரகத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இந்தச் சுற்றறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் முன் அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை இயக்கத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்''.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...