01-11-2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பு உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பிற்கான அரசாணை (G.O.Ms.No.:631, Dated: 05-10-2021) வெளியீடு...
01-11-2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளி திறப்பு உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பிற்கான அரசாணை (G.O.Ms.No.:631, Dated: 05-10-2021) வெளியீடு...
முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்...
பி.எட் படித்த பின்பு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பரிதவிக்கும் சூழல் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான தேர்வுகள் நவம்பர் 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 17-ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்போர் முதுநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும்.
இதில், இளங்கலையில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்த பிறகு, கூடுதலாக இளங்கலை அல்லது முதுகலை படித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததால், தகுதியுள்ள பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறும்போது, “நான் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு மேலாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் விண்ணப்பிக்க முடியவில்லை. என்னைப் போல பலரும்விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். 2011-ம் ஆண்டு பிஎட் முடித்தேன். 2012-ல் கூடுதலாக பி.ஏ. வரலாறும், 2017-ம் ஆண்டு எம்.ஏ வரலாறும் படித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இணையத்தில் தொடர்ந்து அறிவிப்பு வருகிறது.
பிஎட் படிப்பு என்பது பொதுவானது. என்னைப் போல, ஒரு பட்டப்படிப்புக்குப் பின்னர் பி.எட் முடித்துவிட்டு வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த முறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்தக் குழப்பங்கள் இல்லை. இது தொடர்பாக தேர்வு வாரியத்தை தொடர்புகொண்டால், அவர்கள் இணையத்தில் உள்ள பிரச்சினையை விரைவில் சரிசெய்கிறோம் என்றனர். ஆனால் இன்று வரை பிரச்சினை களையப்படாததால், விண்ணப்பிக்க முடியவில்லை” என்றார்.
அரசுப் பள்ளி ஆசிரியர் என்.முருகேசன் கூறும்போது, “தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள பலரும், இந்தக் குழப்பத்தால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வரும் நாட்களில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என அரசு விடுமுறை நாட்கள் வருவதால் விண்ணப்பிக்க இயலாது. எனவே, உடனடியாக இப்பிரச்சினையைக் களைந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி கூறும்போது, “இந்தக் குளறுபடியால் பலருடைய வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றார்.
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொண்டால், அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு செயல்திட்டம் அடிப்படையிலான கற்றல் ( Project Based Learning ) திறன் மேம்பாட்டு பயிற்சி காணொளி வாயிலாக அளிக்க தேவையான வளங்களை உருவாக்கும் பணிமனை தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ( நீலாபுரம் ) 11.10.2021 முதல் 13.10.2021 வரை மூன்று நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது.
எனவே இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை பணிமனையில் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுப்பு செய்திட ஆவன செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் விவரம்.
குறிப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப்புத்தகங்கள் பருவம் 1,2,3 எடுத்துவரவேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 செலவில் வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
ஓய்வூதிய திட்டம்:
தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது PFRDA ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை இணைக்கப்பட்ட வருவாயை வழங்கும் மிக குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்ட ஒரு நீண்ட கால முதலீடு திட்டம் ஆகும். வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் தொகையினை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் விண்ணப்பத்தினை சமர்பிப்பதன் மூலம் தங்களின் அருகில் உள்ள SBI கிளையில் சேரலாம்.
அதில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளது. ஒரு ஓய்வூதிய கணக்கில் வரி சலுகை உள்ளது மற்றும் இரண்டாவது கணக்கில் வரி சலுகை இல்லை. ஆனால் ஆனால் ஒரு நிதியாண்டில் எந்த நேரத்திலும் 50 ஆயிரம் ரூபாய் தொகையினை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ்பிஐ தற்போது தேசிய ஓய்வூதிய தினத்தை கொண்டாடாடுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியத்தை உறுதி செய்ய முதலீட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக என்.பி.எஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இளம் வயதில் முதலீடு செய்யும் நபர் இதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என்றும், எஸ்பிஐயின் என்பிஎஸ் திட்டத்தை தேர்வு செய்யும் போது கூடுதல் நன்மைகளைப் பெறலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.
திட்டத்தில் சேரும் முறை:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எஸ்பிஐ யோனோ மற்றும் ஆன்லைன் என்ற இரண்டு முறைகளில் சேரலாம்.
யோனோ:
ஆன்லைன்:
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பு பலன்கள்:
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வரும் போது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தனர். தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.
கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால், அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
வருகிற 1ஆம் தேதி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல் முறையாக 1ஆம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம்.
குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்த தொற்றை விட மிகப்பெரிய தொற்று குழந்தைகளின் மனநிலை தான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதனை மையப்படுத்தி பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி பாடத்திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 50403/பிடி2/இ1/2021, நாள்: 07-10-2021...
மேஷம்
அக்டோபர் 07, 2021
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெகுமதிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
அக்டோபர் 07, 2021
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வர்த்தக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதுவிதமான ஆசைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : பயண வாய்ப்புகள் கைகூடும்.
ரோகிணி : விரயங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
அக்டோபர் 07, 2021
இணையம் சார்ந்த பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சுபிட்சமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
---------------------------------------
கடகம்
அக்டோபர் 07, 2021
தொழில் தொடர்பான பணிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தனவரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------
சிம்மம்
அக்டோபர் 07, 2021
குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : லாபகரமான நாள்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கன்னி
அக்டோபர் 07, 2021
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். புரிதல் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எண்ணங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
---------------------------------------
துலாம்
அக்டோபர் 07, 2021
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆலோசனைகள் வேண்டும்.
சுவாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விசாகம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
அக்டோபர் 07, 2021
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு
அக்டோபர் 07, 2021
கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் தொடர்பான புதுவிதமான அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : இழுபறிகள் குறையும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மகரம்
அக்டோபர் 07, 2021
வீடு மற்றும் வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். புத்துணர்ச்சி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : லட்சியங்கள் பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
அக்டோபர் 07, 2021
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களின் குணநலன்கள் அவ்வப்போது வெளிப்படும். இடுப்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
அக்டோபர் 07, 2021
தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடம் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்வு வேண்டும். காலதாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...