கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நாடித்துடிப்பு நின்று போன கல்லூரி மாணவருக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் வனஜா - பொதுமக்கள் பாராட்டு... (The nurse Vanaja who gave CPR first aid to a college student who lost his pulse and saved him - public praised)...
மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே 6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.
இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி செய்யப்படும் முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இளைஞர் குறித்து விசாரணை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த்(19) என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
இன்றைய (04-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
டிசம்பர் 04, 2021
தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், தெளிவின்மையும் உண்டாகும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : தாமதங்கள் உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : குழப்பமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 04, 2021
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மேன்மை பொருந்திய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 04, 2021
குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.
புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 04, 2021
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 04, 2021
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 04, 2021
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 04, 2021
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மதிப்பு மேம்படும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : புதுமையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 04, 2021
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.
அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 04, 2021
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பொறுப்புகள் குறையும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 04, 2021
எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் சோர்வு நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். அசதியான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : சோர்வு நீங்கும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 04, 2021
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : ஆர்வம் பிறக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 04, 2021
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2021 - சனி - (School Morning Prayer Activities)...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.12.21
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல் :பாயிரம்
அதிகாரம் :அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 35
குறள்: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு
குற்றங்களையும் நீக்கியவரால் செய்யப்படுவதே அறமாகும்.
பழமொழி :
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன்.
2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.
பொன்மொழி :
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
சுவாமி விவேகானந்தர்:
பொது அறிவு :
1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
டால்பின்.
2. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?
தேனீ.
English words & meanings :
Nagging - constantly complaining, எப்போதும் முறு முறுத்தல்.
Stumble - to fall over something, எதன் மீதாவது இடறி விழுதல்
ஆரோக்ய வாழ்வு :
கத்தரிக்காய் 2 ஆம் சர்க்கரை நோயைத் தடுக்கும். "மைட்ரோநியூட்ரின்கள்" இருப்பதால் நினைவாற்றல் பெருக்கும். அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் இருதய நோய்க்கு சிறந்த மருந்து.
கணினி யுகம் :
Ctrl + shift + B - Search contact list.
Ctrl + shift + C - Add contact
டிசம்பர் 04
கடற்படை தினம்
1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.
ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்
இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.
நீதிக்கதை
நரியும் முட்செடியும்...
கதை :
ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது.
தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது.
முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது.
முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது.
முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது.
நீதி :
மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.
இன்றைய செய்திகள்
04.12.21
★திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலப் புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
★தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 10 நினைவுத் தூணுடன் கூடிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
★பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
★போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை.
★வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் 5-ம் தேதி ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
★டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, டெல்லி அரசுக்கு 24 மணி நேர கெடு: உச்ச நீதிமன்ற உத்தரவால் பள்ளிகள் மூடல்.
★ஒமைக்ரானால் உலகளவில் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்.
★மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி மோதல்.
Today's Headlines
★ Paleolithic burial grounds dating back to about 4,000 years have been found at Javadumalai next to Tirupattur.
★ Discovery of inscriptions with 10 monuments dating back to 1,000 years are discovered for the first time in Pudukottai district in Tamil Nadu.
★ The Department of School Education has ordered that Omicron antiviral measures should be actively implemented in schools.
★ Government of Tamil Nadu mandates compulsory Tamil language examination in competitive /eligibility examinations.
★ The low pressure area in the Bay of Bengal is expected to cross near the coastal area of Puri in Odisha on the 5th as it turns into a storm: Indian Meteorological Center information.
★ Central, Delhi government gets 24-hour deadline to control air pollution in Delhi: Schools closed by Supreme Court order.
★ Omicron has not caused any deaths worldwide so far: World Health Organization data.
★ The Rising Star team advanced to the finals of the state basketball championship.
★ Junior World Cup Hockey: India-Germany clash in the semi-finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
அனைத்து வகை பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே நடைபெற வேண்டும் - ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
பள்ளிக்கல்வி அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் கொரோனா வைரஸ் (ஒமிக்ரான்) தொற்று விழிப்புணர்வு , முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை.
மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் கொரோனா வைரஸ் ( ஓமிக்ரான் ) தொற்று விழிப்புணர்வு , முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் .
1. அரசிடமிருந்து பெறப்பட்ட SOP Instuctions ல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை தவறாது அனைத்து வகை பள்ளிகல் பின்பற்ற வேண்டும்.
2. பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவும் நடைபெறலாம் அல்லது இணையவழி வகுப்புகளும் நடைபெறலாம்.
3. அனைத்து வகை பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே நடைபெற வேண்டும்.
4. மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும் போதே உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும் . உடல் வெப்பநிலை அதிகம் இருப்பின் அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.
5. அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கிருமிநாசினி / சோப் கொண்டு கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்தல் வேண்டும்.
6.பள்ளிவளாகம் மற்றும் தளவாட பொருட்கள், கைப்பிடிகள் , கதவுகள் , ஜன்னல்கள் , போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
7. நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படும் நபர்கள் உடனடியாக சுகாதார துறை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தலைமையாசிரியர் / முதல்வர்கள் இவர்களுக்கு வழிக்காட்டுதல் வேண்டும்.
8. நேரத்திலும் , சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
9. கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம் , விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் . நீச்சல் குளங்கள் பள்ளிகளில் இருப்பினும் மூடப்பட வேண்டும்.
10.உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது . நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை ( NCC , NSS ) நடவடிக்கைகள் அனுமதிக்ககூடாது.
தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழ்நாடு இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த்தாளை அறிமுகப்படுத்தி அரசாணை (நிலை) எண்: 133, நாள்: 01-12-2021 வெளியீடு (In order to recruit 100% Tamilnadu youth in all the posts of the Government of Tamil Nadu, G.O.No: 133, Dated: 01-12-2021 Released)...
தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழ்நாடு இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த்தாளை அறிமுகப்படுத்தி அரசாணை (நிலை) எண்: 133, நாள்: 01-12-2021 வெளியீடு (In order to recruit 100% Tamilnadu youth in all the posts of the Government of Tamil Nadu, G.O.No: 133, Dated: 01-12-2021 Released)...
வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அரசாணை (நிலை) எண்: 133, நாள்: 01-12-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 133, நாள்: 01-12-2021...
பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு (Department of School Education has issued a new directive regarding the prevention of Omicron in schools)...
பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு (Department of School Education has issued a new directive regarding the prevention of Omicron in schools)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
School students staged road blockade in support of suspended teacher
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...