கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Nurse லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nurse லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024

 


மருத்துவ பணிகள் தேர்வாணையம் MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 1200 செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் ஈர்த்தல் - இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13-11-2024 & செவிலியர்கள் பட்டியல்


Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024 & List of 1200 Nurses


Tamil Nadu Medical Subordinate Services - Nursing Establishment - W.P.No.31213/2017 filed before the Hon'ble High Court of Madras- Nurses appointed on Contract Basis through MRB - Absorbing them into regular time scale - orders Issued - Regarding.


தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் - நர்சிங் நிறுவனம் - W.P.No.31213/2017 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது - MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் - வழக்கமான கால முறை ஊதியத்தில் அவர்களை உள்வாங்குதல் - உத்தரவுகள் - வெளியிடப்பட்டது - குறித்து 


Annexure-I

 Ref.No.15885/N1/2/2018, Dated:13.11.2024

 1200 Contract Basis Nurses who are eligible and absorbed into regular time scale pay


Annexure-II - 182 Contract Basis Nurses who are not considered due to Service Particulars not received


Annexure-III - 142 Contract Basis Nurses who are not eligible and not absorbed into regular time scale pay



>>> செயல்முறைகள் & செவிலியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...




  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...


 அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.  +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.


இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்


https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e   


பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.


நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:

• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)

• ஆதார் அட்டை ((Original + Xerox copy)

• Transfer Certificate – TC (Original + Xerox copy).        


நாடித்துடிப்பு நின்று போன கல்லூரி மாணவருக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் வனஜா - பொதுமக்கள் பாராட்டு... (The nurse Vanaja who gave CPR first aid to a college student who lost his pulse and saved him - public praised)...



 மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே  6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.


இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக  செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி செய்யப்படும் முதலுதவி சிகிச்சை அளித்தார்.



இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இளைஞர் குறித்து விசாரணை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த்(19) என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...