கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021 (G.O.(Ms) No.176, Dated: 17.12.2021) வெளியீடு -School Education - Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders -Issued. School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...




2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் அரசாணை (G.O.(Ms) No.176, Dated: 17.12.2021) வெளியீடு - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு...

School Education - Announcement for the year 2021-2022 - General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary / Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders -Issued. 

>>> Click here to Download School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...



>>> ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -  பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்:  17.12.2021 - தமிழில்...


இந்த அரசாணையில் பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள 4 அரசாணைகள்...










Read : 

1. G.O.(Ms).No.404, Education, Science and Technology (S2) Department, Dated 25.05.1995 

2. G.O.(Ms).No.525, Education Department, Dated 29.12.1997. 

3. G.O.(Ms).No.231, School Education Department, Dated 11.08.2010. 

4. G.O.(1D).No.218, School Education Department, Dated 20.06.2019. 

5. The Commissioner of School Education Roc.No.25154/A1/S2/2021, dated 13.10.2021, 09.11.2021, 17.11.2021 and 22.11.2021 

ORDER :- 

In the Government order first read above guidelines were issued with regard to transfer of teachers in hilly areas. 

2. In the Government order second read above revised norms were issued for sanction of Teaching Posts in Schools. 

3. In the Government order third read above, the Government directed the Director of School Education and the Director of Elementary Education to rationalize the deployment of existing Teachers in school as per the Pupils : Teacher ratio specified in Right of Children to Free and Compulsory Education Act, 2009, in respect of both the Government / Government Aided Schools. 4. In the Government order fourth read above, guidelines were framed to conduct General Transfer Counselling for Teachers working in Government / Panchayat Union/Municipal Primary / Middle schools and Government / Municipal/ Corporation High / Higher Secondary Schools for the year 2019-2020. 5.During the Budget session 2021-2022, the Honourable Minister for School Education has made the following announcement in the floor of assembly:- 


>>> Click here to Download School Education [SE5(1)]Department G.O.(Ms) No.176, Dated: 17.12.2021...


இன்றைய (17-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 17, 2021




சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கலை சார்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஜெயமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



அஸ்வினி : முன்னேற்றமான நாள். 


பரணி : ஆர்வம் அதிகரிக்கும். 


கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 17, 2021




இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



கிருத்திகை : சோர்வு ஏற்படும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 17, 2021




பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



மிருகசீரிஷம் : ஆர்வம் பிறக்கும்.


திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

டிசம்பர் 17, 2021




மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


 

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 17, 2021




உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.  மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் சில அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


 

மகம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரம் : வெற்றிகரமான நாள். 


உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 17, 2021




செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சாதகமான நாள். 


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சித்திரை : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------




துலாம்

டிசம்பர் 17, 2021




எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



சித்திரை : விவேகம் வேண்டும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும். 


விசாகம் : மந்தமான நாள். 

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 17, 2021




குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் காணப்படும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அனுகூலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

விசாகம் : அமைதியான நாள். 


அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


கேட்டை : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 17, 2021




மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்து கொள்வது நல்லது. இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் :  உதவிகள் கிடைக்கும்.


பூராடம் : ஆர்வம் உண்டாகும். 


உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 17, 2021




மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : இலக்குகள் பிறக்கும்.


திருவோணம் : மாற்றமான நாள். 


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 17, 2021




மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.


சதயம் : புரிதல் மேம்படும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 17, 2021




வியாபாரம் சம்பந்தமான பணிகளில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


 

பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.


உத்திரட்டாதி : அனுகூலம் ஏற்படும். 


ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-12-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: அமைச்சியல்


அதிகாரம்: அவை அஞ்சாமை


குறள் எண்: 727


குறள்:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

தஞ்சு மவன்கற்ற நூல்.


பொருள்:

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.


பழமொழி :

Cast no dirt into the well that gives  you water



 உண்ட  வீட்டிற்கு  இரண்டகம் பண்ணாதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.


2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.


பொன்மொழி :


நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.



பாரதியார்



பொது அறிவு :


1. தோரியம் அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது? 


ஆந்திர பிரதேசம். 


2. ரப்பர் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? 


இந்தியா.


English words & meanings :


Ahead of the curve - forming new ideas before others, அடுத்தவர்களுக்கு முன்பாக புது கருத்துக்கள் உருவாக்குவது,

 Around the clock - at all time, எல்லா நேரமும் 



ஆரோக்ய வாழ்வு :


குப்பைமேனி : - குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.


கணினி யுகம் :


Left ALT+left SHIFT+NUM LOCK -  (Switch the MouseKeys either on or off)


SHIFT five times -  (Switch the StickyKeys either on or off)



டிசம்பர் 17


ஓய்வூதியர் நாள்


ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[1]


நீதிக்கதை

கழியை விட்டதால் இறந்த ஆமை


ஓர் அழகிய குளம் ஒன்றில் இரண்டு அன்னப் பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்றின் பெயர் விகடம். மற்றொன்றின் பெயர் சங்கடம். அதே குளத்தில் கம்புக்கிரீவன் என்ற ஆமையும் வாழ்ந்து வந்தது. 


விகடம், சங்கடம், கம்புக்கிரீவன் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள். காலப்போக்கில் மழைப்பொழிவு குறைந்ததால், குளத்தின் நீரளவு குறையத் தொடங்கியது. 


இதனைக் கவனித்த அன்னப் பறவைகள், இனியும் இந்தக் குளத்தை நம்பி வாழ்வது பயனற்றது. இனி நாம் வேறொரு குளத்திற்குச் செல்வோம் என்று முடிவு செய்தன. தங்களின் இந்த முடிவைத் தங்கள் நண்பனான ஆமையிடமும் கூறின. 


நண்பர்களே! நீங்கள் பறந்துசென்று வேறு ஒரு குளத்தினை அடைந்துவிடுவீர்கள். நான் எப்படி வேறு குளத்திற்குச் செல்வது? எனக்கும் ஏதாவது வழி சொல்லுங்களேன்! என்றது ஆமை. 


அன்னப் பறவை விகடன், ஆமையிடம் நண்பா! நாங்கள் ஒரு நீண்ட கழியினைக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு முனைப் பகுதியை நானும் மற்றொரு முனைப் பகுதியை சங்கடகனும் வாயால் கவ்விப் பிடித்துக் கொள்வோம். நீ அந்தக் கழியின் நடுப்பகுதியில் உன் வாயால் கவ்விக் கொள்ள வேண்டும். நாங்கள் இருவரும் கழியால் உன்னைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று வேறு ஒரு குளத்தினை அடைவோம் என்று தங்கள் திட்டத்தினைக் கூறியது. 


நண்பா! இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பறந்து செல்லும் போது நீ எதுவும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நீ கீழே விழுந்துவிடுவாய். பிறகு உன்னை எங்களால் காப்பாற்ற முடியாது என்று சங்கடகன் கூறியது. 


நண்பர்களே! கவலை வேண்டாம். நான் பேசவே மாட்டேன் என்று உறுதியளித்தது ஆமை. 


விகடன் கூறியது போலவே கழியில் ஆமையைத் தூக்கிக் கொண்டு அன்னப் பறவைகள் பறக்கத் தொடங்கின. 


ஓர் ஊரின் வழியாகப் பறந்து செல்லும் போது, ஊர் மக்கள் இந்த அதிசயமான காட்சியைப் பார்த்து வியந்தனர். அவர்கள் கூவி ஒலியெழுப்பினர். எங்கிருந்து இந்த சப்தம் வருகின்றது? என்று நினைத்த ஆமை, அன்னப் பறவைகளிடம் கேட்க நினைத்துத் தன் வாயைத் திறந்தது. உடனே, ஆமையின் பிடி கழியிலிருந்து நழுவியது. ஆமை கீழே விழுந்து இறந்தது. 


நீதி :

நமக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சை நாம் மதிக்கவேண்டும் என்று பெண் பறவை, ஆண் பறவைக்குக் கூறியது.


இன்றைய செய்திகள்


17.12.21


◆வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு.


◆உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதி நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


◆ஆதிதிராவிட மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையானது மத்திய அரசு வழங்கும் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


◆34 வெளிநாடுகளின் 342 செயற்கைக்கோள்களை ஏவியதால் இந்தியாவிற்கு 35 மில்லியன் டாலர், 10 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


◆ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை இணைப்பது, ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட 4 தேர்தல் சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


◆பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


◆கரோனா, டெல்டா வைரஸைவிட உருமாறிய ஒமைக்ரான் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது. ஆனால், நோய் பாதிப்பு குறைவே என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முதல் வெற்றி.



Today's Headlines


 🌸 Decision to reduce the area of ​​Vedanthangal Bird Sanctuary withdrawn: Government of Tamil Nadu Announced.


 🌸A study by the Climate Risk Horizons Organization has revealed that the financial position of the Government of Tamil Nadu could worsen if the construction work of thermal power plants being constructed in Udankudi continues.


🌸 It has been announced that the Special Post Matriculation Scholarship provided by the Government of Tamil Nadu to Adi Dravida students will be increased in line with the amount provided by the Central Government.


 🌸Minister Jitendra Singh has said that India has earned $ 35 million and 10 million euros by launching 342 foreign satellites.


 🌸 The Union Cabinet has approved the Election Commission's recommendation of four electoral reforms, including the merger of Aadhar and voter cards, and the addition of new voters to the list four times per year.


 🌸Recommendation to raise the age of marriage for women to 21 is approved by Union Cabinet.


 🌸 Mutated omicron is 70 times faster than the corona, delta virus.  However, a study by the University of Hong Kong found that the effect of the disease was low.



 🌸 P V Sindhu advanced to the quarterfinals of the World Badminton Championships.


 🌸 Asian Champions Trophy Hockey: First victory for the Indian team in the 2nd league match.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-12-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.12.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்


இயல்:அமைச்சியல்


அதிகாரம்:அவை அஞ்சாமை


குறள் எண் : 724


குறள்:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்


பொருள்:

அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


பழமொழி :

Give and spend and God will send


இட்டார்க்கு இட்ட பலன்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.


2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.



பொன்மொழி :


நீங்கள் வாழ்க்கையில் தடுக்கி

விழ பல கால்கள் இருக்கலாம்…

ஆனால் ஊன்றி எழ ஒரு கை

உள்ளது என்பதை மறந்து

விடாதீர்கள் அது தான்

“நம்பிக்கை”._____ காந்தியடிகள்



பொது அறிவு :


1. பித்த நீரின் நிறம் என்ன? 


மஞ்சள். 


2. ஆசியாவின் நீண்ட மலைத்தொடர் எது? 


இமய மலைத்தொடர்.




English words & meanings :


Blue moon - a rare event, அரிதான நிகழ்வு, 


time is money - time is valuable, நேரத்திற்கு மதிப்பு அதிகம். 


ஆரோக்ய வாழ்வு :


சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். 



கணினி யுகம் :


Right SHIFT -  for eight seconds (Switch FilterKeys either on or off)


Left ALT+left SHIFT+PRINT SCREEN -  (Switch High Contrast either on or off)



டிசம்பர் 16

வெற்றி நாள்


வெற்றி நாள் (இந்தி: विजय दिवस Eng- Victory Day) 1971ல் இந்தியா வங்கதேச முக்திவாகினியுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1971 இல் பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் திசம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.


1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து  நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.



நீதிக்கதை


ஏழ்மையிலும் நேர்மை


ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர். 


இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார். 


மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார். 


மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான். 


பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். 


இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. 


அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். 


நீதி :

பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.


இன்றைய செய்திகள்


16.12.21


◆தமிழக அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்வர வேண்டும்: கலை பண்பாட்டுத்துறை அறிவுறுத்தல்.


◆டிசம்பர் 17-ல் வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


◆சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சாலை பெயர்ப் பலகைகளில் வரலாற்று சின்னங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


◆நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானதாக விமானப் படை அறிவித்துள்ளது.


◆பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. சபை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.


◆கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.


◆காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்தியாவின் பூனம் யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.


◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய், அஸ்வினி மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


Today's Headlines


 🌸 Tamil Nadu government had to come forward to conduct folk art performances in  government festivals: Department of Arts and Culture adviced


🌸 The Chennai Meteorological Department has issued a warning to fishermen due to the formation of a new depression in the Bay of Bengal on December 17.


 🌸Corporation officials said that under the Singaraj Chennai 2.0 project, photographs of historical monuments will be displayed on road name plates.


 🌸The Air Force has announced that Captain Varun Singh, who was critically injured in a Nilgiris helicopter crash and was treated at a Bangalore hospital, has passed away  .


🌸 UN Convention on Climate Change,  India has voted against the draft resolution.


 🌸 The omicron virus, a variant of the corona virus, has spread to many parts of the world.  The World Health Organization (WHO) has warned that no one should take it lightly.


 🌸The league match between India and South Korea in the Asian Champions Trophy Hockey Tournament ended in a draw.


 🌸India's Poonam Yadav wins silver at Commonwealth Weightlifting Championships


 🌸Pranoy, Aswini and Sikki Reddy advance to the semi-finals of the World Championship Badminton Championships.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இன்றைய (16-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 16, 2021




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : சிந்தனைகள் பிறக்கும்.


பரணி : அறிமுகம் கிடைக்கும்.


கிருத்திகை : சாதகமான நாள். 

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 16, 2021




எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக முடியும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். 


ரோகிணி : லாபகரமான நாள். 


மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 16, 2021




திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான சில வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விடாமுயற்சி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு அதிகரிக்கும். 


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

டிசம்பர் 16, 2021




எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 



புனர்பூசம் : நம்பிக்கை பிறக்கும். 


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 16, 2021




பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : பிரச்சனைகள் நீங்கும். 


பூரம் : சிந்தனைகள் உண்டாகும். 


உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 16, 2021




பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இழுபறியான விஷயங்களுக்கு திடீரென முடிவு எடுப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 16, 2021




எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 



சித்திரை : அலைச்சல் அதிகரிக்கும். 


சுவாதி : பொறுமை வேண்டும்.


விசாகம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 16, 2021




குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வங்கி சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.


அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.


கேட்டை : ஆதாயகரமான நாள்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 16, 2021




பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : மாற்றமான நாள். 


பூராடம் : முடிவுகள் சாதகமாகும்.


உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 16, 2021




எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : அனுபவம் ஏற்படும். 


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 16, 2021




நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : திருப்தியான நாள். 

---------------------------------------




மீனம்

டிசம்பர் 16, 2021




சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : தடைகள் குறையும். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


ரேவதி : சாதகமான நாள்.

---------------------------------------


பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கான நிதி, போக்சோ சட்டம், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, சிறப்பாசிரியர்கள் (பகுதி நேரம்) பணி நிரந்தரம் மற்றும் உதயநிதி அவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் உள்ளிட்ட நிருபர்களின் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் இன்று (15.12.2021) அளித்த பதில்கள் (The answers given by the Minister of School Education today (15.12.2021) to the questions of the reporters including Funds for Schools Infrastructure Facility, POCSO Law, Teachers' Transfer Counselling, Special Teachers (Part Time) Permanent and Udayanithi Ministerial post, Illam Thedi Kalvi Volunteers)...



 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கான நிதி, போக்சோ சட்டம், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, சிறப்பாசிரியர்கள் (பகுதி நேரம்) பணி நிரந்தரம் மற்றும் உதயநிதி அவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் உள்ளிட்ட நிருபர்களின் கேள்விகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் இன்று (15.12.2021) அளித்த பதில்கள் (The answers given by the Minister of School Education today (15.12.2021) to the questions of the reporters including Funds for Schools Infrastructure Facility, POCSO Law, Teachers' Transfer Counselling, Special Teachers (Part Time) Permanent and Udayanithi Ministerial post, Illam Thedi Kalvi Volunteers)...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் (From 03.01.2022 Direct classes for all colleges, polytechnics, 6th to 12th Standard without rotation basis) - அரசாணை (G.O.Ms.No.:882, Dated: 15-12-2021) வெளியீடு - Lockdown Continued upto 31-12-2021 with Relaxation...



>>> 03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் (From 03.01.2022 Direct classes for all colleges, polytechnics, 6th to 12th Standard without rotation basis) - அரசாணை (G.O.Ms.No.:882, Dated: 15-12-2021) வெளியீடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...