கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.12.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: அரணியல்


அதிகாரம்: நாடு


குறள் எண்: 732


குறள்:

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு


பொருள்:

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.


பழமொழி :

Beware of him that telleth tales.


 புறங்கூறி திரிபவனிடம் எச்சரிக்கையாக இரு .



இரண்டொழுக்க பண்புகள் :


1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 


2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்


பொன்மொழி :


அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்....விவேகானந்தர்



பொது அறிவு :


1. இந்தியாவில் முதல் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 


1806. 


2.சாலை போக்குவரத்து சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 


1989.


English words & meanings :


Acid Test - கடுஞ்சோதனை, 


Acrophobia - அதிக உயரம் குறித்த பயம் 

ஆரோக்ய வாழ்வு :


பாகற்காய் சுவாச கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கும்.கல்லீரலை வலுப்படுத்தும்.நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பருக்கள் வருவதை தடுக்கும்.





கணினி யுகம் :


MS excel short keys: 


Ctrl + Shift + 0 - Unhide the columns.


 Ctrl + 0 - Hide the selected columns



நீதிக்கதை


மூன்று புதிர்!


ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான். 


பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.


வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.


மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.


மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு. 


பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.


மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார். 


நீதி :

அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.


இன்றைய செய்திகள்


23.12.21


◆தமிழகத்தில் முதல் முறையாக, உதகை மலைப்பாதை நெடுஞ்சாலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவைத் தடுக்க பசுமை தொழில்நுட்ப முறையான மண் உறுதிப்படுத்தும் திட்டம் தொடக்கம்.



◆பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


◆தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


◆முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


◆நடுவானில் பாதையை மாற்றிச் சென்று தாக்கும்திறன் கொண்ட ‘பிரலே‘ ஏவுகணை: ஒடிசா மாநிலத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தில் இருந்து  வெற்றிகரமாக சோதனை.


◆டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.


◆மியான்மரின் கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


◆2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.



◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா.


◆விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: அரைஇறுதிக்கு தகுதி பெற்றது சவுராஷ்டிரா.

Today's Headlines


🌸 The Launching of Green Technology System for Soil Stabilization Project is started in Udagai Hill ways at Tamil Nadu for the first time in  to prevent landslides and soilslides 



 🌸 The Department of School Education has ordered that advisory committees should be set up to ensure the safety of students in schools.


🌸 Intermediate teacher trainees and B.Ed graduates are eagerly awaiting the announcement of the new examination as no teacher eligibility test has been conducted in Tamil Nadu for the last 2 years.


 🌸The annual family income of the beneficiary of the Chief Minister's Comprehensive Medicare Scheme has been increased from Rs. 72,000 to Rs. 1.20 lakhs.


 🌸 Intermittent intercontinental ballistic missile is tested successfully from Dr. ABJ Abdul Kalam missile centre in Orissa .


🌸 The number of corona infections in Delhi has also increased to a level not seen in the last 6 months as the number of the number of Corona infections also has started to increase.


 🌸100 people missing after landslide at a greenstones mine in Myanmar's Kutch province.  One person has been reported dead so far.


 🌸More than 33 million people worldwide were killed by  corona virus in 2021 alone, and Tetras Adanam, president of the World Health Organization, announced that we have to bring an end to corona by 2022.


 🌸Asian Champions Trophy Hockey: India won bronze.


 🌸 Vijay Hazare Cup Cricket: Saurashtra qualifies for semi-finals.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இன்றைய (23-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 23, 2021




செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். அனுகூலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும். 


பரணி : போட்டிகள் விலகும்.


கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 23, 2021




எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



கிருத்திகை : தைரியம் அதிகரிக்கும். 


ரோகிணி : உதவிகள் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 23, 2021




நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.


திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 23, 2021




உத்தியோக பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : திறமைகள் வெளிப்படும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------






சிம்மம்

டிசம்பர் 23, 2021




எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



மகம் : பயணங்கள் உண்டாகும்.


பூரம் : அனுகூலம் ஏற்படும்.


உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 23, 2021




உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அஸ்தம் : லாபம் மேம்படும். 


சித்திரை : மேன்மையான நாள்.

---------------------------------------






துலாம்

டிசம்பர் 23, 2021




எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும்.  தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுப்பணிகளில் பொறுப்புகள் தேடி வரும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 



சித்திரை : முன்னேற்றம் உண்டாகும். 


சுவாதி : கவலைகள் குறையும். 


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

டிசம்பர் 23, 2021




கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுகமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 


 

விசாகம் : லாபம் கிடைக்கும்.


அனுஷம் : ஒத்துழைப்பு சாதகமாகும். 


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 23, 2021




எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவடைவதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பயணம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


 

மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூராடம் : விவேகம் வேண்டும்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 23, 2021




உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



உத்திராடம் : எதிர்ப்புகள் குறையும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள். 


அவிட்டம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------






கும்பம்

டிசம்பர் 23, 2021




பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



அவிட்டம் : மாற்றமான நாள். 


சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 23, 2021




குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



பூரட்டாதி : அமைதியான நாள். 


உத்திரட்டாதி : பொறுப்புகள் குறையும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை (நிலை) எண்: 564, நாள்: 17-12-2021 வெளியீடு (Innuyir Kaappom - Save Our Lives- Save Us 48 Plan - G.O. (Ms) No: 564, Date: 17-12-2021 - implementing the new Save Us 48 plan to treat road accident victims)...

 



>>> இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை (நிலை) எண்: 564, நாள்: 17-12-2021 வெளியீடு (Innuyir Kaappom - Save Our Lives- Save Us 48 Plan - G.O. (Ms) No: 564, Date: 17-12-2021 - implementing the new Save Us 48 plan to treat road accident victims)...

6,7,8 வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் (Assessment Test) நடத்த வேண்டும். தேர்வு கால அட்டவணை வெளியீடு - சென்னை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 9238/ஈ3/2021, நாள்: 18-12-2021...



 >>> 6,7,8 வகுப்புகளுக்கு  மதிப்பீட்டு தேர்வுகள் (Assessment Test) நடத்த வேண்டும். தேர்வு கால அட்டவணை வெளியீடு - சென்னை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 9238/ஈ3/2021, நாள்: 18-12-2021...

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை 23.12.2021 மீண்டும் விசாரணை...



இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை 23.12.2021 மீண்டும் விசாரணை

1️⃣ சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என SSTA இயக்கத்தின் பெயரிலும் தனிநபர்கள் பெயரிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

2️⃣ அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பின்பு நீதிமன்ற அலுவலர்களின் பிழையால் REVOKED என  சில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் பதி விடப்பட்டிருந்தது அது குறித்து மாநிலத்தின் சார்பில்  நாம் முன்னரே தெளிவாக எடுத்துக் கூறி இருந்தோம்.


3️⃣ நமது "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழக்கு எண்--WP 28558/2017 தற்போது நாளை 23.12.2021 ல் விசாரணைக்கு வரிசை எண் -26ல் வருகிறது.

4️⃣ மேலும் 2014-ல்  நமது SSTA இயக்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கினையும் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்து வர பல கட்ட தொடர் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வழக்கில் நமது சார்பாக இதுவரை ஆஜரான மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வழக்கறிஞரை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதன் பின்பு அவ்வழக்கினையும் விசாரணைக்கு கொண்டுவந்து முடிப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெறும்.

5️⃣ வழக்கை REVOKED செய்திருந்தால் மீண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வராது அவ்வாறு நடக்கவில்லை என்பதால் தான் மீண்டும் தொடர்ந்து விசாரணைக்கு வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் புரியாத நபர்களுக்கு புரிய வையுங்கள்.

6️⃣ நீதிமன்றம் சென்றால் சில வருடங்கள் காலதாமதம் & இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும் அதனையும் தாண்டி வழக்கினை விரைந்து விசாரணைக்கு கொண்டு வந்து நமது சார்பில் வெற்றி பெற்றிட உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது வெற்றி காலதாமதம் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக இழந்த உரிமையை எப்பாடுபட்டாலும் வென்றெடுப்போம்...!!!💪🏻🤝🏻💪🏻🤝🏻 நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது முழு விவரங்களும் தெரிவிக்க இயலாது.

தகவல் பகிர்வு

✍🏻✍🏻 மாநில தலைமை

SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு


>>> Click here to view High Court of Madras Cause List 23-12-2021...


பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...



உயர்நிலை - மேல்நிலை பள்ளிகளின் வேலை நேரத்தை உள்ளூர் சூழலை பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்....


ஆசிரியர்கள் காலை 9.15 க்கு முன்பும்,

தலைமை ஆசிரியர்கள் 9.00 மணிக்குள்ளும்,

உடற்கல்வி ஆசிரியர்கள் 8.45 மணிக்குள்ளும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்..


>>> பள்ளி வேலை நேரம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் பதில் கடிதம் (School Working Hours and Teachers' Attendance time at School - Right to Information Act - Reply Letter from Karur District Educational Officer) ஓ.மு.எண்: 6488/அ1/2021, நாள்: 15-12-2021...

TRB - 2018-19 ஆம் ஆண்டிற்கான நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவிக்கான - திருத்திய மதிப்பெண் பட்டியல் வெளியீடு (Direct Recruitment for the Post of Block Educational Officer(BEO) in Elementary Education Department for the year 2018-19 - Revised Mark List Released)



>>> TRB - 2018-19 ஆம் ஆண்டிற்கான நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவிக்கான - திருத்திய மதிப்பெண் பட்டியல்  (Direct Recruitment for the Post of Block Educational Officer(BEO) in Elementary Education Department for the year 2018-19 - Revised Mark List)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...