கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (27-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 27, 2022
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது சேமிப்பை மேம்படுத்தும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணியில் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்துடன் செயல்படவும். செலவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : முடிவு கிடைக்கும்.
பரணி : அனுபவம் உண்டாகும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 27, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 27, 2022
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்கள் செயல்பாடுகளில் கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவாதிரை : ஈடுபாடு அதிகரிக்கும்.
புனர்பூசம் : கருத்துக்களில் கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 27, 2022
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். திறமைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : அலைச்சல் ஏற்படும்.
ஆயில்யம் : லாபம் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 27, 2022
விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 27, 2022
இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் சாதகமான சூழல்நிலைகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 27, 2022
எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : அனுபவம் மேம்படும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 27, 2022
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் சிலருக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை, வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 27, 2022
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : புதுமையான நாள்.
பூராடம் : மாற்றம் ஏற்படும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 27, 2022
சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கலை சார்ந்த அறிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 27, 2022
ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்கின்ற தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 27, 2022
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : தடைகள் குறையும்.
உத்திரட்டாதி : அமைதியின்மை ஏற்படும்.
ரேவதி : ஆசைகள் உண்டாகும்.
---------------------------------------
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குபதிவு - பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை (Urban Local Body Elections - Vote Polling on February 19 - Counting on February 22)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று மாலை தமிழக தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன்படி வரும் ஜனவரி 28 -ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 4 ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்..
வேட்புமனுக்கள் பரிசீலனை வரும் பிப்ரவரி 5
வேட்புமனுக்கள் திரும்ப பெற பிப்ரவரி 7
பிப்ரவரி 19 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும்.
பிப்ரவரி 22 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அரசுப் பணியாளர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ/ குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம் - வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை (G.O.(Ms)No.: 304, Dated: 17.06.2020) அரசாணை எண் 304, நாள்:17.06.2020 (If the Government Employee is suffering from COVID infection and is receiving treatment / if any of the family members happen to be in home isolation due to the infection then their complete treatment / home isolation period can be allowed under Special Casual Leave - Revenue & Disaster Management Department G.O.(Ms)No.: 304, Dated: 17.06.2020.)...
கொரோனா பாதிப்பு : அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்? என்னென்ன சான்றுகள் தேவை? (Corona Infection: Do Government servants and Teachers have Special Casual Leave? Who can take up to how many days? What evidence is needed?)
கொரோனா பாதிப்பு : அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்? என்னென்ன சான்றுகள் தேவை? (Corona Infection: Do Government servants and Teachers have Special Casual Leave? Who can take up to how many days? What evidence is needed?)
வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி ஊழியர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம்.
மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் யாவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு திரும்பப் பெறப்படும் வரை பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு 25.03.2020 முதல் தற்போது வரை முழுமையாகத் திரும்பப்பெறப்படவே இல்லை. இடையிடையே தளர்வுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. மேற்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலமே இது என்பதால் தற்போதும் மேற்படி அரசாணைப்படி சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டு.
ஆசிரியர்-ஊழியர் பாதிக்கப்பட்டாலோ / குடும்ப உறுப்பினர் பாதிக்கப்பட்டாலோ / கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தாலோ அவரது விடுப்பு காலம் சிறப்புத் தற்செயல் விடுப்பாக அனுமதிக்கப்படும் என்பதே அரசாணை.
முதல் அலையின் போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் நோய்பாதிக்கப்பட்டவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் என்பது தமிழ்நாடு அரசின் வழிகாட்டல்படி அதிகபட்சமாக 14 நாள்கள். இதன் காலத்தை ஊழியரின் வசிப்பிடப் பகுதிக்கான மருத்துவ அலுவலரே முடிவு செய்வார். அதற்கான சான்றளிக்கும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததே. 14 நாள்கள்தான் அளிக்க வேண்டுமென்றும் இல்லை. நோயின் தாக்கத்தைப் பொறுத்து குறைத்தோ கூட்டியோ மருத்துவர் முடிவு செய்யலாம்.
ஒருவருக்கு / குடும்பத்தில் ஒருவருக்கு / பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் Positive Test Report பெற Sample அளித்த நாள் (Report வருவதற்கு முதல் நாள்) முதல் Negative வந்த நாள் வரை சிகிச்சை காலம். இதனை சிகிச்சை பெறும் மருத்துவமனை முடிவு செய்யும். Negative வந்த நாள் முதல் தனிமைப்படுத்தல் காலம் உண்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோருக்கு அவரின் Discharge Report-ல் வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் குறிக்கட்டிருக்கும்.
மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்படாது வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு Home Quarantine Days எத்தனை நாள்கள் தேவை என்பதை வட்டார மருத்துவ அலுவலர் மட்டுமே முடிவு செய்வார்.
குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் ஆசிரியர் / ஊழியருக்கான Home Quarantine Days எத்தனை நாள்கள் அளிக்கலாம் என்பதை வட்டார மருத்துவ அலுவலர் தான் முடிவு செய்ய முடியும். அதற்கான கடிதத்தையும் பணியேற்கும் நாளுக்கு முதல் நாள் அனைத்துத் தகவல்களையும் (Positive Date, Negative Date, அவர் அளித்த Home Quarantine Days) கூறி அவரிடமே பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் கொரோனா பாதித்த ஆசிரியர் / ஊழியர் / குடும்ப உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். இதற்கான தீர்க்கமான காலவரையறை என்பது ஏதுமில்லை. ஏனெனில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமாகி தனிமைப்படுத்தல் காலம் முடிந்து பணிக்குத் திரும்பும் நாளில்கூட குடும்பத்தில் மற்றொருவருக்கு தொற்று உறுதிசெய்யப்படக்கூடும். அந்நேர்வுகளில் மீண்டும் சிறப்புத் தற்செயல்விடுப்பு நீட்டிக்கப்படலாம்.
மேலும், தொற்று பாதித்த நபர் / குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் Discharge Summary நகல் / வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
NMMS தேர்வுக் கட்டணம் - IFHRMS வழியில் செலுத்துவதற்கு பதில் DGE Portal ல் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு, நாள்: 25-01-2022...
>>> NMMS தேர்வு 2022 - பள்ளிகள் பதிவு & தேர்வு கட்டணம் செலுத்தும் வழிமுறை...
தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
NMMS தேர்வுக் கட்டணம் செலுத்த முதலில் www.karuvoolam.tn.gov.in என்ற website கொடுக்கப்பட்டது. தற்போது 25.1.22 தேதியிட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தின்படி, www.dge.tn.gov.in என்ற DGE PORTAL websiteல் செலுத்த வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
NMMS 2022 தேர்வுக்கான இணையதளம் வழியாக தற்போது விண்ணப்பிக்க துவங்கலாம்.
Any doubt contact:
7299505685 / 9790803122
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...