கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணிநிரவலில் சென்றவர்களுக்கு தாய் ஒன்றியத்தில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடத்தில் முன்னுரிமை அளித்து மாறுதல் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Priority in Filling of Vacancies in the Mother Union for Those Who Go on Surplus Transfer - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu) ந.க.எண்: 009736/ E1/ 2021, நாள்: 28-01-2022...
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 [ G.O.(Ms)No.4, Dated: 21-01-2022 - Apply for and obtain 23 types of Certificates of School Education through E-Sevai Center ] வெளியீடு...
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை.
இனி 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை வெளியீடு...
மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.
உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிய இணைப்பு ( Polling Personnel Training Details - Link to find out the place and day of the election training class for you)...
தங்கள் அலைபேசி எண்ணுக்கு கீழே உள்ளது போன்று SMS வரும்.
"Dear Raj K (PP id : 123456),It is informed that you are appointed as Polling Officer - 1 for Urban Local Body Elections - 2022. Your 1st Training Class on 31-01-2022 02:30 PM For further info.: https://tnsec.tn.nic.in/sl/ppps.html - DEO/District Collector , TNSEC:"
கீழேயுள்ள Link மூலம் உங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் PP id எண்ணைப் பதிவு செய்து உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிந்து கொள்ளலாம்...
இன்றைய (29-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 29, 2022
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 29, 2022
செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : ஆலோசனைகளை கேட்கவும்.
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 29, 2022
மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் சாதகமாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 29, 2022
கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு கிடைக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஆர்வம் மேம்படும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 29, 2022
குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆசைகள் பிறக்கும்.
உத்திரம் : லாபகரமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 29, 2022
வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கடன் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களின் தன்மைகளையும், அவர்களை பற்றிய புரிதலும் மேம்படும். அசதிகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 29, 2022
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொழுதுகளை செலவு செய்து மகிழ்வீர்கள். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : மேன்மையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 29, 2022
புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 29, 2022
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலையை அறிந்து சிந்தித்து செயல்படுதல் நன்மையளிக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : பொறுப்புகள் குறையும்.
பூராடம் : லாபகரமான நாள்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 29, 2022
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 29, 2022
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : அபிவிருத்தியான நாள்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : உத்வேகமான நாள்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 29, 2022
புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் துளிர் விடும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அதை சார்ந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
ரேவதி : தடைகளை அறிவீர்கள்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...
