கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிக் கல்வித் துறை - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.03.2022 நிலவரப்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள், காலிப்பணியிட விவரம், தேவைப் பட்டியல் விவரம் வெளியீடு (Department of School Education - Surplus Counselling for B.T.Assistants (Graduate Teachers) - As on 13.03.2022, List of Surplus Teachers in all Districts, Vacancies, Need Posts list details)...
இன்றைய (14-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 14, 2022
குடும்பத்தில் பொருளாதாரம் சீராகும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சில மன சங்கடங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : திருப்திகரமான நாள்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 14, 2022
செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : தன்னம்பிக்கையான நாள்.
மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 14, 2022
நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மரியாதை மேம்படும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 14, 2022
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில கவலைகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 14, 2022
எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை அறிந்து வெற்றி கொள்வீர்கள். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : பயணங்கள் சாதகமாகும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
கன்னி
மார்ச் 14, 2022
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் மேலோங்கும். குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 14, 2022
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : ஈடுபாடு அதிகரிக்கும்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 14, 2022
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அனுபவப் பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
கேட்டை : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 14, 2022
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : கனிவு வேண்டும்.
பூராடம் : செலவுகளைத் தவிர்க்கவும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 14, 2022
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : லாபம் உண்டாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 14, 2022
வியாபார பணிகளில் புதிய ஒப்பந்தங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
மீனம்
மார்ச் 14, 2022
எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகளின் நகல்கள் - மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனரின் சுற்றறிக்கை ( Sanction of Maternity Leave to Married women Government Servants- Guidelines and copies of G.O.s Communicated Regarding - Circular of Director of Medical and Rural Health Services Ref: 50218/ E4/ 3/ 2021, Dated: 10-03-2022)...
மாணவர்களிடையே சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக் கல்வித் துறை சேகரிக்கவில்லை - இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்யவே Communal Category பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது - பள்ளிக் கல்வி ஆணையர் விளக்கம் (The Department of School Education does not collect any information about caste among the students - Information on Communal Category is collected to ensure benefit based on reservation - School Education Commissioner Explanation)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Jallikattu - Guidelines Released
ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Jallikattu Competition - Guidelines Released ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்...