கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மதுரை மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - அமைச்சர் தலைமையில் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேரம் மாற்றம் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (Madurai Zonal wise Review Meeting - Review Meeting for Officers chaired by the Minister Time Change - Letter from the Commissioner of School Education) ந.க.எண்: 59699/ பிடி1/ இ2/ 2021, நாள்: 28-03-2022...
இன்றைய (29-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 29, 2022
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மேன்மையை ஏற்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : பாராட்டுகள் கிடைக்கும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 29, 2022
உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் செயல்களில் இருக்கக்கூடிய குறைகளை நிதானமாக சுட்டிக்காட்டுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரோகிணி : இடமாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 29, 2022
நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதாயமான நாள்.
---------------------------------------
கடகம்
மார்ச் 29, 2022
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதளவில் எதையோ இழந்தது போன்ற உணர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 29, 2022
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : இழுபறிகள் மறையும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 29, 2022
பூர்வீக சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அனுபவங்கள் ஏற்படும்.
அஸ்தம் : உதவி கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 29, 2022
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : விரயம் ஏற்படும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : நன்மை ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 29, 2022
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியான சில விஷயங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------
தனுசு
மார்ச் 29, 2022
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 29, 2022
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனை சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 29, 2022
செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் அலைச்சல்களுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
---------------------------------------
மீனம்
மார்ச் 29, 2022
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் வாடிக்கையாளரிடம் விட்டுக்கொடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். கொடுக்கல், வாங்கல் காரியங்களில் நிதானம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : விவாதங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
---------------------------------------
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ஆம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழப்பு - சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (2nd Standard student Theeksheth died in private school van accident in AlwarThirunagar, Chennai - Chennai Chief Educational Officer Notice)...
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தீக்சித்தின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். மிகுந்த கவலைக்குரிய இந்தச் சம்பவத்தின் முழு விவரம்:
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம்போல், பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர் தீக்சித். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த மதிய உணவு பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி வந்துள்ளார்.
அப்போது வேனை பார்க்கிங்க செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மாணவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
வேன் ஓட்டுநர் கைது: இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், பள்ளி வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர்.
பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் குழந்தைகளை பள்ளி வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அஜாக்கிரதையாக பணியாற்றிய குழந்தைகளை பள்ளி வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் பணியாளர் ஞானசக்தியையும் கைது செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை: மாணவர் பலியான ஆழ்வார் திருநகர் தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். மாணவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
உடலை வாங்க மறுப்பு: ஒரே மகனான மாணவர் தீக்சித்தின் உடலை வாங்க மறுத்த அவரது தாய் ஜெனிபர் கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "காலை வழக்கம்போல் பள்ளிக்கு வேன் ஏற்றிவிட்டேன். 8.40 மணிக்கு குழந்தைக்கு ஆக்சிடென்டாகி விட்டதென்று போன் வந்தது. என்னவென்றுகூட அவர்கள் சொல்லவில்லை. குழந்தை சீரியஸாக உள்ளது, விஜயா மருத்துவமனைக்கு போக சொல்லிவிட்டனர். அங்கு சென்று பார்த்தபோது என் குழந்தைக்கு உயிரே இல்லை. காலையில் வெள்ளை நிற ஆடை போட்டுச் சென்ற என மகனை தூக்குறேன், உடம்பு முழுவதும் ரத்தம். 7 வயது குழந்தை, மூக்கில், வாயிலிருந்து ரத்தம். என்ன நடந்ததென்று பள்ளியிலிருந்து யாரும் வந்து சொல்லவில்லை.
பள்ளியிலிருந்து எந்தத் தகவலும் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று கேட்டால், குழந்தை லஞ்ச் பேக்கை விட்டுவிட்டான், தவறி விழுந்துவிட்டான். அதே வேன் அவன் வயிற்றில் ஏறி அங்கேயே இறந்துவிட்டதாக கூறுகின்றனர்.
அந்த வேன் ஓட்டுநரை கைது செய்திருக்கின்றனர். அந்தப் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யாமல், என் குழந்தை உடலை நான் வாங்கமாட்டேன். என் குழந்தையே இல்லை, நானெல்லாம் இனி உயிரோடு இருந்து என்ன செய்வது?" என்று கதறி அழுதார்.
பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை: இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்தும், பள்ளிகளில் உள்ள வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்ல உஷா தலைமையில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ்: இதைத்தொடர்ந்து, விபத்து நடந்த பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 6 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க தனியார் பள்ளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
>>> சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
> பள்ளி நிர்வாகத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்புப் பணியாளர் நியமனம் செய்யப்படாதது, பள்ளி அளவில் பேருந்துக் குழு அமைக்கப்படாதது ஏன்?
> மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையுமின்றி 64 வயது முதியவரை பேருந்து ஓட்டுநராக நியமனம் செய்தது எப்படி?
> பள்ளி வளாகத்தில் பேருந்துகள் வந்துச்செல்லக்கூடிய நிலையில், பள்ளி வளாகத்தில் வேகத்தடை அமைத்திடாதது ஏன்?
> பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிய பின்னர், அந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்குச் சென்றுவிட்டனரா என்பதை கவனிக்க பள்ளி முதல்வர் கவனிக்கத் தவறியது ஏன்?
> பள்ளியின் முதல் பாடவேளை தொடங்குவதற்கு முன்பு வரை பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை ஒழுங்குப்படுத்திட வேண்டிய கடமையிலிருந்து உடற்கல்வி ஆசிரியரைக் கொண்டு கவனிக்கத் தவறியதும், உடற்கல்வி ஆசிரியர் விடுப்பு எனும்போது மாற்று பொறுப்பாசிரியரை நியமிக்காதது ஏன்?
> பள்ளி தாளாளர் விபத்து குறித்து அறிந்திருந்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை தராததற்கான காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் 24 மணி நேரத்தில் நேரடியாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உடலை வாங்க சம்மதம்: இந்நிலையில், மாணவர் தீக்சித்தின் உடலை வாங்க மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தைதையைத் தொடர்ந்து, தீக்சித்தின் உடலை வாங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
>>> சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வில் (TRUST) தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education based on the submission of details of those who have passed the Tamil Nadu RurTalent (TRUST) Exam) ந.க.எண்: 022230/ எம்/ இ4/ 2021, நாள்: -03-2022...
இன்றைய (28-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 28, 2022
பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : பயணங்கள் சாதகமாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 28, 2022
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 28, 2022
வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கடன் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : சேமிப்பு குறையும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 28, 2022
புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நட்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 28, 2022
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சுகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : எதிர்ப்புகள் நீங்கும்.
பூரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 28, 2022
எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : துரிதம் ஏற்படும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 28, 2022
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். வியாபாரத்தில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : லாபம் உண்டாகும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 28, 2022
எந்தவொரு செயலிலும் முன் கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : தடுமாற்றம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 28, 2022
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : விருப்பம் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
மகரம்
மார்ச் 28, 2022
குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : சோர்வு நீங்கும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 28, 2022
புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை காணப்படும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : காலதாமதம் உண்டாகும்.
பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 28, 2022
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவு கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
உத்திரட்டாதி : வரவு கிடைக்கும்.
ரேவதி : முடிவு ஏற்படும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்
டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...
