கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022...



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022... 


ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022


பொருள் : தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தொடர்பாக,


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 202223ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.



 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே, மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். * மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்


- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.



 * தொடக்கக் கல்வி பதிவேடு

பள்ளிவாரியாக 5+ மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை வீடுகள்தோறும் சென்று சரியாகவும் துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். 



* பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்


அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.



* விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை பேரணி நடத்துதல்


அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின் படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை கோடை விடுமுறை இறுதியில் பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நடைபெறச் செய்யுமாறு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும். 


* விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்


பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். பேரணி நடத்துவதற்கான இடம், நேரம், நிகழ்வுகள், விளம்பரம் போன்ற விவரங்களை விரிவாக கலந்துரையாடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக பேரணி நடத்திடவும் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.


பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை இனம் கண்டு, அவர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கிப் பேரணியில் இடம் பெறச் செய்திட வேண்டும். இப்பேரணிக்காகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. > கல்வி தொலைக்காட்சி, TAC TV மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல்


பேரணி பற்றிய சுவரொட்டிகள். > வரவேற்பு வளைவுகள்  - துணி / Flex board விளம்பரங்கள். > ஆட்டோ / வேன் மூலம் ஒலிபெருக்கி விளம்பரம்.



>>> 2022-2023ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் பங்கு தொடர்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Tamil Nadu Elementary Education Regarding, 2022-2023 Academic Year - Student Admission in Government Schools - Duties of Headmaster and Teachers, The role of the School Management Committee and Illam Thedi Kalvi Scheme Volunteers) ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022... 

எண்ணும் எழுத்தும் பயிற்சி (Ennum Ezhuthum Training) - Teaching Learning Materials - Module...

 


>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி (Ennum Ezhuthum Training) - Teaching Learning Materials - Module...


எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - (Ennum Ezhuthum Training - Tamil ) PowerPoint Slides...

 


>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ் - (Ennum Ezhuthum Training - Tamil ) PowerPoint Slides...



இன்றைய (04-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 04, 2022



ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : எண்ணங்கள் மேம்படும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 04, 2022



வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.


ரோகிணி : விருப்பம் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 04, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். வரவுக்கேற்ப செலவுகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : தாமதமான நாள்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





கடகம்

ஜூன் 04, 2022



நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : மாற்றமான நாள்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 04, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவினை ஏற்படுத்தும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 04, 2022



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : அனுகூலமான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.


சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 04, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.


சுவாதி : போட்டிகள் குறையும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 04, 2022



செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சோர்வின்றி செயல்படவும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




விசாகம் : வரவு கிடைக்கும். 


அனுஷம் : முயற்சிகள் கைகூடும். 


கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 04, 2022



பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நிலம்




மூலம் : ஏற்ற, இறக்கமான நாள்.


பூராடம் : காலதாமதம் உண்டாகும். 


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 04, 2022



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும் 


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 04, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். மனதை உறுத்திய விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் முடிவுகள் சாதகமாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.


சதயம் : தெளிவு கிடைக்கும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 04, 2022



செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




பூரட்டாதி : சேமிப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------


எண்ணும் எழுத்தும் செயலி பயன்படுத்துதல் (Ennum Ezhuthum App) Demo...



>>> எண்ணும் எழுத்தும் செயலி பயன்படுத்துதல் (Ennum Ezhuthum App) Demo...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட)  மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...


 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

       4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம்,

 திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.


  தொலைபேசி எண்கள் : ++91-044-2953 5806 / 2953 5816 

தொலைநகல் : ++91-044-2953 5893

மின்னஞ்சல்: tnerc@nic.in

இணையதளம்: www.tnerc.gov.in


தேதி: 02.06.2022                                                              


செய்திக்குறிப்பு


இந்தச் செய்திக் குறிப்பானது, தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில்  (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.



அத்தகைய வசதிகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது:


1. தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :

நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.


2. சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன:

நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.


வ.எண் மாவட்டங்கள் அழைப்பு எண்

1 சென்னை 9445850829

2 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 9444371912

3 கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி 9442111912

4 சேலம், ஈரோடு,  நாமக்கல் 9445851912

5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912

6 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் 8903331912

7 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் 9486111912

8 வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி 6380281341

9 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768


3. மற்ற வகை புகார்கள், அதாவது மின்மாற்றி / கம்பம்/ தெருவிளக்குப் பெட்டி/ மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான / அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள் முதலியன:


புகார்கள் / குறைகளை மின்னகம் - மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம். 


மேலும், புகார்களை www.tangedco.gov.in   Reach us  Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.


மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.


மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட,  அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in  Consumer Corner என்ற பக்கத்திலும், மேலும் www.tangedco.gov.in  Consumer Info  Consumer Guidance  Consumer Grievance என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலையதளத்திலும் உள்ளது.

மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ முப்பது நாட்களுக்குள் ஒழுங்கு முறை  ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக்  குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம்.  

மேல் முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட அனைத்து  நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள், நுகர்வோர்களின்  வழிகாட்டுதலுக்காக  www.tnerc.gov.in  Regulations  Final Regulations  Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது.


4. மின் திருட்டு, தவறான மின் உபயோகம் முதலியன:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின்  கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும்  21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன.   இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள்  அமலாக்கத் துறையில் செயல்பட்டுக்  கொண்டிருக்கின்றன. அனைத்து 23  குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.


இவை அனைத்தும் காவல்துறை தலைமை இயக்குனர் / லஞ்ச ஒழிப்பு / சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.


ஆகவே, நுகர்வோர்கள் இது சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி  மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  தொடர்புக்கு www.tangedco.gov.in  consumer info  enforcement .

புகார்களை ig@tnebnet.org  மற்றும் ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல்கள் மூலமும் அனுப்பலாம்.


5. ஒழுங்கின்மை, கடமை புறக்கணித்தல், ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள்:

இந்த வகையிலான புகார்களை உரிமம்தாரரின் மேலதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.  


6. செந்தர விதிகளில் (Codes and Regulations) மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள்:

ஆணையத்தால் இயற்றப்பட்ட  விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம்  செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான  குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன்  கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review  Panel) விற்கு அனுப்பலாம்.

அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட  விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின்  கருத்துரு , உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.


7.பொதுமக்களுக்கான செய்தி:

ஆகவே குறைகள்/ புகார்கள் மேற்கண்ட மின்சார உரிமைதாரரின்  பல நிலைகளைக் கொண்ட குறைகளைத்    தீர்க்கும் செயல்பாட்டு அமைப்புகளை நேரடியாக அணுகி மேலே விளக்கியுள்ளவாறு பயன்படுத்தி தங்களுடைய குறைகளையும்/ புகார்களையும் உரிய நேரத்திற்குள் நிவர்த்தி செய்து  பயனடையுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



         செயலாளர்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்




இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை - பாடத்திட்டக் கையேடு - முதல் பருவம் - அனைத்துப் பாடங்கள் - தமிழ் வழி (II - V Standard - Lesson Plan - Term I - All Subjects - Ganga Guide - Tamil Medium)...

 


இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை - பாடத்திட்டக் கையேடு - முதல் பருவம் - அனைத்துப் பாடங்கள் - தமிழ் வழி (II - V Standard - Lesson Plan - Term I - All Subjects - Ganga Guide - Tamil Medium)...


>>> இரண்டாம் வகுப்பு...


>>> மூன்றாம் வகுப்பு...


>>> நான்காம் வகுப்பு...


>>> ஐந்தாம் வகுப்பு...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...