EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024...
>>> EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?
EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் / மாற்றுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 009350/ ஜெ2/ 2024, நாள்: 09-05-2024...
>>> EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?
மாவட்டங்கள் மற்றும் கல்வி மாவட்டங்கள் வாரியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் அலைபேசி எண்கள் - District & Educational District wise All BEO's (Block Educational Officer) Mobile Contact Numbers...
SBI FASTag Balanceஐ பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணிலிருந்து 7208820024 என்ற எண்ணுக்கு Missed Call கொடுப்பதன் மூலம் அறியலாம் (SBI FASTag Balance can be checked by giving a Missed Call to 7208820024 from the registered mobile number)...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம்,
திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.
தொலைபேசி எண்கள் : ++91-044-2953 5806 / 2953 5816
தொலைநகல் : ++91-044-2953 5893
மின்னஞ்சல்: tnerc@nic.in
இணையதளம்: www.tnerc.gov.in
தேதி: 02.06.2022
செய்திக்குறிப்பு
இந்தச் செய்திக் குறிப்பானது, தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.
அத்தகைய வசதிகள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது:
1. தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :
நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.
2. சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி/ மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன:
நுகர்வோர்கள் தங்கள் கைபேசியில் நிழல்படம் எடுத்து அவைகளை கீழ்காணும் “வாட்ஸ் அப்” எண்ணிற்கு அனுப்பலாம்.
வ.எண் மாவட்டங்கள் அழைப்பு எண்
1 சென்னை 9445850829
2 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 9444371912
3 கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி 9442111912
4 சேலம், ஈரோடு, நாமக்கல் 9445851912
5 மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 9443111912
6 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் 8903331912
7 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் 9486111912
8 வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி 6380281341
9 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768
3. மற்ற வகை புகார்கள், அதாவது மின்மாற்றி / கம்பம்/ தெருவிளக்குப் பெட்டி/ மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான / அதிகமான மின் அழுத்தப்புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள் முதலியன:
புகார்கள் / குறைகளை மின்னகம் - மின்நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யாலாம்.
மேலும், புகார்களை www.tangedco.gov.in Reach us Consumer’s Complaint என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைய தள பக்கத்தில் பதிவு செய்யலாம்.
மேலும், புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.
மேற்கண்ட வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட, அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் வலையதளம் www.tnerc.gov.in Consumer Corner என்ற பக்கத்திலும், மேலும் www.tangedco.gov.in Consumer Info Consumer Guidance Consumer Grievance என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலையதளத்திலும் உள்ளது.
மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ அல்லது மன்றத்தின் ஆணையினால் நுகர்வோர் திருப்தி அடையவில்லையென்றாலோ, அவராகவோ அல்லது அவருடைய சார்பாளர் மூலமாகவோ முப்பது நாட்களுக்குள் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு அதிகார அமைப்பான மின்சாரக் குறை தீர்ப்பாளரிடமும் மேல்முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டாளர் சம்பந்தப்பட்ட அனைத்து நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள், நுகர்வோர்களின் வழிகாட்டுதலுக்காக www.tnerc.gov.in Regulations Final Regulations Consumer Grievance Redressal Forum and Electricity Ombudsman என்ற பகுதியில் உள்ளது.
4. மின் திருட்டு, தவறான மின் உபயோகம் முதலியன:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, என்கிற 4 கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு உதவி செயற்பொறியாளரின் தலைமையின் கீழும் 21 அமலாக்கக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டுக்கொண்டுள்ளன. இந்த அமலாக்கக் குழுக்களுக்கு கூடுதலாக இரண்டு பறக்கும் குழு /சென்னை மற்றும் உளவுத்துறை பிரிவுகள் அமலாக்கத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து 23 குழுக்களும் சென்னையிலுள்ள அமலாக்கப்பிரிவின் மேற்பார்வை பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் காவல்துறை தலைமை இயக்குனர் / லஞ்ச ஒழிப்பு / சென்னை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.
ஆகவே, நுகர்வோர்கள் இது சம்பந்தமான புகார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அமலாக்கப்பிரிவிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு www.tangedco.gov.in consumer info enforcement .
புகார்களை ig@tnebnet.org மற்றும் ceapts@tnebnet.org என்ற மின்னஞ்சல்கள் மூலமும் அனுப்பலாம்.
5. ஒழுங்கின்மை, கடமை புறக்கணித்தல், ஊழல், லஞ்சம் முதலியவை பற்றிய புகர்கள்:
இந்த வகையிலான புகார்களை உரிமம்தாரரின் மேலதிகாரிகளுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவிற்கும் அனுப்ப வேண்டும்.
6. செந்தர விதிகளில் (Codes and Regulations) மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகள்:
ஆணையத்தால் இயற்றப்பட்ட விதிகளில், நுகர்வோர்கள் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அந்த மாற்றத்தையும் அதற்கான குறிப்பிட்ட கராணங்களையும் எழுத்து வடிவாக மின் வழங்கல் விதி பிரிவு 27 / மின்பகிர்மான விதி பிரிவு 51ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதித்தொகுப்பு மீள்பார்வைக் குழு (Code Review Panel) விற்கு அனுப்பலாம்.
அத்தகைய மாற்றமும், காரணங்களும் கொண்ட விதித்தொகுப்பு மீள் பார்வைக் குழுவின் கருத்துரு , உறுப்பினர் செயலராக உள்ள தலைப்பொறியாளர் / வணிகம் / தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் / சென்னை அவர்களுக்கு அனுப்பலாம்.
7.பொதுமக்களுக்கான செய்தி:
ஆகவே குறைகள்/ புகார்கள் மேற்கண்ட மின்சார உரிமைதாரரின் பல நிலைகளைக் கொண்ட குறைகளைத் தீர்க்கும் செயல்பாட்டு அமைப்புகளை நேரடியாக அணுகி மேலே விளக்கியுள்ளவாறு பயன்படுத்தி தங்களுடைய குறைகளையும்/ புகார்களையும் உரிய நேரத்திற்குள் நிவர்த்தி செய்து பயனடையுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
ஆசிரியர்கள் அனைவரும் 15-08-2021க்குள் EMIS Websiteல் தங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் - State EMIS Team...
அன்புள்ள அனைவருக்கும், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் அடிப்படையிலான அறிவிப்புகள் மற்றும் OTP அடிப்படையிலான அங்கீகார சேவைகள் பல்வேறு தரவு புதுப்பிப்புகள் மற்றும் சரிபார்ப்புகளுக்காக EMIS இல் செயல்படுத்தப்படும். வரும் நாட்களில் எஸ்எம்எஸ் மூலமாகவும் பல முக்கியமான தொடர்புகள் அனுப்பப்படும். எனவே, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், HM கள், BRTE க்கள் பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் அவர்களின் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் விவரங்கள் சரியானவை மற்றும் EMIS இல் புதுப்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1. அவர்களின் 8 இலக்க EMIS ஐடி & கடவுச்சொல்லை பயன்படுத்தி EMIS இல் உள்நுழைக 2. அவர்களின் சுயவிவரத்தில் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும் மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், சமீபத்திய தரவு அவர்களின் உள்நுழைவில் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்வது தனிப்பட்ட ஆசிரியரின் பொறுப்பாகும். மின்னஞ்சல் ஐடி / மொபைல் எண் தவறாக இருந்தால், ஆசிரியர் முக்கியமான புதுப்பிப்புகளை / தகவலை இழக்க நேரிடும். மொபைல் எண் / இமெயில் ஐடியில் மாற்றம் செய்யப்பட்ட கடவுச்சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை தயவுசெய்து கவனிக்கவும். ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமைக்குள் புதுப்பிப்புகளை முடிக்குமாறு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளவும். மேலும், ஆசிரியர்களின் தடுப்பூசி விவரங்களை புதுப்பிப்பதற்கான ஏற்பாடு அந்தந்த ஆசிரியர் உள்நுழைவு அடையாள அட்டைகளில் வழங்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் தங்களின் செலுத்திக் கொணட தடுப்பூசிகளின் விவரங்களை மட்டுமே புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனி வரவிருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ள தேதியை பதிவு செய்ய கூடாது.
Dear All,
SMS & e-mail based notifications and OTP based authentication services are going to be activated in EMIS for various data updates and validations. Several critical communications will also be sent through SMS in the coming days. Therefore, each teacher in Government & Aided School, HMs, BRTEs are requested to ensure that their email and mobile number details are correct and updated in EMIS by doing the following.
1. Login to EMIS using their 8 digit EMIS ID & Password
2. Update the email address and mobile number in their profile
Whenever there is any change to the mobile number / email address, it is the responsibility of the individual teacher to make sure that the latest data is updated in their login. If email ID / mobile number is incorrect, the teacher may miss critical updates / information. Please note that the change in mobile number / email ID will not result in any changes to the password assigned. Please request all teachers to complete the updates by Sunday, 15th August.
Also, provision to update the vaccination details of teaching staff is provided in the respective Teacher login IDs. All teachers are requested to update the details of their completed vaccinations only. The provision is not for updating upcoming vaccination date.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...