Today's (13-07-2022) Wordle Answer: BLAND
Today's (13-07-2022) Wordle Answer: BLAND
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: சான்றாண்மை
குறள் : 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
பொருள்
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
பழமொழி :
what is done is done.
கறந்த பால் மடி புகாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.
2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்
பொன்மொழி :
உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்.
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
- புத்தர்
பொது அறிவு :
1.மனிதனின் இதயம் ஒரு நாளில் எத்தனை முறை சுருங்கி விரிகிறது?
ஒரு லட்சம் முறை.
2. மனித உடலில் உள்ள நீளமான சுரப்பி எது?
பித்த நீர் சுரப்பி
English words & meanings :
unilateral - one person's decision without others consent or agreement. Adjective. மற்றவர்களது ஒத்திசைவு இன்றி ஒருவரால் எடுக்க பட்ட முடிவு. பெயரளபடை
NMMS Q 23:
தந்தையின் வயது மற்றும் அவருடைய மகளின் வயது வித்தியாசம் 32. தந்தையின் வயது அவருடைய மகளின் வயதின் மூன்று மடங்கு எனில், தந்தையின் வயது
விடை : 48
நீதிக்கதை
குருடரின் விளக்கு
ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம். இவர் அவ்வாறு ஒருமுறை வெளியே கையில் விளக்கோடு சென்றபோது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலர் முதியவரை பார்த்தனர்.
முதியவரின் அருகே வந்த அவர்கள் மரியாதையின்றி, உனக்குத்தான் கண் தெரியாதே, பின் எதற்காக கையில் விளக்கை எடுத்து செல்கிறாய் என கேலி செய்து சிரித்தனர்.
வாலிபர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த அந்த முதியவர். எனக்கு கண் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த விளக்கை நான் எனக்காக கொண்டு வரவில்லை. உங்களைபோல கண் நன்றாக தெரிந்தவர்கள் என் மீது மோதாமல் இருக்கத்தான் இந்த விளக்கு என்றார். முதியவரின் பதிலை கேட்ட வாலிபர்கள் தங்களது முட்டாள்தனமான செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இன்றைய செய்திகள்
13.07.22
இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வரும் 17ம் தேதி நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், கொடைக்கானல் வனப்பகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உலகின் மிகப் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜூன் தங்கப்பதக்கம் வென்றார்.
உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில்
அரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, 94 வயதில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று, உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.
Today's Headlines
The hall ticket for the NEET examination has been published on the website . The examination for admission to MBBS and BDS courses is going to be held on 17th.
A total of 16 thousand hectares of exotic trees have been found in Dindigul and Kodaikanal forests under Dindigul district. The work of removing these will start soon.
Chennai Meteorological Department has informed that there is a possibility of rain in 5 districts of Tamil Nadu today.
Labour Provident Fund P.F. The organization has intensified measures to provide same-day pension to 73 lakh pensioners among its subscribers.
NASA has released a photograph taken in space by the James Webb Space Telescope.
A forest fire in Yosemite National Park in California, USA, is burning some of the world's oldest trees.
For the first time in the history of India, the 44th Chess Olympiad will be held in Mamallapuram in Tamil Nadu. Ticket sales for this have started through the website.
India's Arjun won tbe gold medal in World Cup shooting
World Masters Athletics Tournament
Bhagwani Devi from Haryana has become an inspiration to the world by winning 1 gold and 2 bronze medals at the age of 94.
மேஷம்
ஜூலை 13, 2022
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அஸ்வினி : முயற்சிகள் கைகூடும்.
பரணி : மந்தத்தன்மை குறையும்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 13, 2022
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : சேமிப்பு குறையும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 13, 2022
நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 13, 2022
தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தடைகள் குறையும்.
பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 13, 2022
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகம் : இலக்குகள் பிறக்கும்.
பூரம் :நம்பிக்கையை ஏற்படுத்தும்.
உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 13, 2022
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : நுட்பங்களை அறிவீர்கள்.
சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 13, 2022
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மேம்படும். சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மனப்பக்குவம் மேம்படும்.
சுவாதி : மந்தமான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 13, 2022
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாறுபட்ட தருணங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அனுஷம் : தடைகள் அகலும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 13, 2022
உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூராடம் : நன்மையான நாள்.
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 13, 2022
பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் குறையும். கவலை அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : தீர்வு உண்டாகும்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 13, 2022
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : சேமிப்பு மேம்படும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 13, 2022
தாய்வழி உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவியை வாங்கி மகிழ்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கையான நாள்
ரேவதி : தடைகள் விலகும்.
---------------------------------------
நீட் தேர்வு - விதிமுறைகள் (NEET Exam – Rules)...
ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம். வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும்.
வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம்- தேசிய தேர்வு முகமை.
ஹால்டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி.
தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.
ஜூலை 17ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை- தேசிய தேர்வு முகமை.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் அவர்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து அணிந்து தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...