கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (25-07-2022) Wordle Answer...

                  

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (25-07-2022) Wordle Answer: ELOPE








பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் எண் : 991


குறள்:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


பொருள்:

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.


பழமொழி :

A bad day never hath a good night.


முதல் கோணல். முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


கல்வி என்பது

பல மூட்டை நூல்களை

வாசிப்பது இல்லை..

அடக்கம்.. ஒழுங்கு.. அறம்..

மற்றும் நீதி இவற்றின்

முன்மாதிரி ஆகும்.!


பொது அறிவு :


1.மனிதனின் கைவிரல் அடையாளத்தை போன்று இருப்பது எந்த விலங்கில்? 


உராங் உட்டான்.


 2. பனிச்சிறுத்தை எங்கு வசிக்கின்றது? 


இமயமலை பிரதேசத்தில்.


English words & meanings :


Dwarf - a person of unusually short stature, Adjective, சித்திரகுள்ளன். பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உடல் நலத்திற்கு பல அறிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை கொத்தமல்லி இலை.


NMMS Q 31:


RATION என்ற சொல்லைக் கொண்டு எழுத்துக்களின் வரிசை மாறாமலும் ஓர் எழுத்தை ஒரே முறை பயன்படுத்தி உருவாக்கப்படும் சொற்களின் எண்ணிக்கை : 


விடை: 5. விளக்கம்: RAT, AT, ON ,ION, RATIO


ஜூலை 25


ஜிம் கார்பெட் 

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.



நீதிக்கதை


புத்திசாலி அம்மா


ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான். 


பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 


நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். 


சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன். 


நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். 


இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது. 


நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. 


இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. 


அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. 


மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். 


புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 


வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 


நீதி :

எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.


இன்றைய செய்திகள்


25.07.22


◆ தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்.


◆ சேலம் அருகே கொளத்தூரில் மின் வேலியில் சிக்கி  யானை உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை.


◆ டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி: இந்தியாவில் 4 பேருக்கு பாதிப்பு.


◆ 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்.


◆ உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.


◆ உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க உக்ரைன் - ரஷ்யா இடையே ஒப்பந்தம்.


◆ உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.


◆ தேசிய சீனியர் கபடி: கால்இறுதியில் தமிழகம்.


◆ 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது இங்கிலாந்து.


Today's Headlines


 ◆ Tamilnadu Transport Corporation workers will protest across Tamil Nadu tomorrow.


 ◆ Elephant dies after getting caught in the electric fence at Kolathur near Salem: Forest department officials investigate.


◆ One person was confirmed with monkeypox in Delhi: 4 people were affected in India.


 ◆ 4 crore people have not received even a single dose of the vaccine - the Union government informs Lok Sabha.


 ◆The World Health Organization (WHO) has declared the spread of monkey measles an international public health emergency.


 ◆Agreement between Ukraine - Russia to eliminate the shortage of food products.


◆ India's Neeraj Chopra won the silver medal in the javelin event at the World Athletics Championships.


 ◆National Senior Kabaddi: Tamil Nadu in quarter-finals.


 ◆England bowled out South Africa in the 2nd ODI.

இன்றைய (25-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 25, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும். 


பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------






ரிஷபம்

ஜூலை 25, 2022



குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தினை உருவாக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆபரணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 25, 2022



கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய அணுகுமுறையின் மூலம் காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவாதிரை : காலதாமதமான நாள்.


புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 25, 2022



வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். எதிலும் தனித்து செயல்படுவீர்கள். மந்திரம் சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.


பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


ஆயில்யம் : சோர்வு நீங்கும். 

---------------------------------------





சிம்மம்

ஜூலை 25, 2022



தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பூரம் : லாபம் மேம்படும். 


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------






கன்னி

ஜூலை 25, 2022



இளைய சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேளாண்மை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடலில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வகை ஆடைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : குழப்பம் நீங்கும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 25, 2022



தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சுவாதி : பொறுமை வேண்டும்.


விசாகம் : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 25, 2022



உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில்  மந்தத்தன்மை உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அனுஷம் : கவனம் வேண்டும்.


கேட்டை : மந்தமான நாள்.

---------------------------------------






தனுசு

ஜூலை 25, 2022



புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூலை 25, 2022



மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதில் இருந்துவந்த கடன் தொடர்பான கவலைகள் குறையும். பயணங்கள் செல்லும் பொழுது உடைமைகளில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : மாற்றமான நாள்.

---------------------------------------






கும்பம்

ஜூலை 25, 2022



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். பொறுமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும். 

---------------------------------------





மீனம்

ஜூலை 25, 2022



பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தொழிற்சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




பூரட்டாதி : பொறுமை வேண்டும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் மனசு பெட்டி வைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (A Teacher's Mind Box will be kept to fulfill the demands of the Teachers - Minister of School Education)...



>>> ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் மனசு பெட்டி வைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (A Teacher's Mind Box will be kept to fulfill the demands of the Teachers - Minister of School Education)...





இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Tamil Question Paper & Tentative Answer Key)...

  


>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Tamil Question Paper & Tentative Answer Key)...



>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...





இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...

 


>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...



>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள்...





எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு சேவைகளை வழங்குவதற்கான நிறுவனங்களின் தேர்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Selection of Firms for providing Monitoring and Evaluation Services under the Ennum Ezhuthum Mission)...



>>> எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு சேவைகளை வழங்குவதற்கான நிறுவனங்களின் தேர்வு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Selection of Firms for providing Monitoring and Evaluation Services under the Ennum Ezhuthum Mission)...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...