கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.8.2022) தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை (பக்கம் 8ல் அகவிலைப் படி குறித்த செய்தி) செய்தி வெளியீடு எண்: 1411, நாள்: 15-08-2022 [Tamil Nadu Chief Minister's speech today (15.8.2022) on the occasion of Independence Day by hoisting the national flag in front of the Chief Secretariat Fort (Dearness Allowance news on page 8)]......



>>> சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.8.2022) தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை (பக்கம் 8ல் அகவிலைப் படி குறித்த செய்தி) [Tamil Nadu Chief Minister's speech today (15.8.2022) on the occasion of Independence Day by hoisting the national flag in front of the Chief Secretariat Fort (Dearness Allowance news on page 8)]...



சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:



எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.


குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.


மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.


இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி  கூடுதலாக செலவாகும்.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.


எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.


இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.


சென்னையில் விடுதலை நாள் அரங்காட்சியகம் அமைக்கப்படும்.


சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.


கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


இன்றைய முக்கிய நிகழ்வுகள் சில:

சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில், தேசியக் கொடியேற்று விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்...




சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பா. எழிலரசி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்...




சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்...


பரிசுத்தொகை ரூ.10,00,000உடன் ரூ.5000 சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார் திரு.நல்லகண்ணு அவர்கள்...





சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்...


அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 01.07.22 முதல் அகவிலைப்படியானது 3% உயர்த்தி 31%ல் இருந்து  34% ஆக  வழங்க உத்தரவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...




சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் 76ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.


நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து அவரது காரின் முன்னாலும் பின்னாலும் சென்னை போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத்தின் முன் அணிவகுப்பு மரியாதை மேடை அருகே இறங்கிய ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார்.


தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தென்னிந்திய தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிமுகம் செய்துவைத்தார்.


 பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


அப்போது , 'மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.


வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன்.


ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘விடுதலை நாள் அருங்காட்சியகம்’ ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.


எளிமை - இனிமை - நேர்மை - ஒழுக்கம் - மனித நேயம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தி அவர்கள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.


 சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.



Today's (15-08-2022) Wordle Answer...

                                       

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (15-08-2022) Wordle Answer: POKER








இன்றைய (15-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 15, 2022



வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : முதலீடுகள் அதிகரிக்கும். 


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 15, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 




கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : இழுபறியான நாள்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேம்படும். 

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 15, 2022



வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 15, 2022



மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த தொழிலில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவினை பெறுவீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 




புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 15, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் புதிய நபர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். உடல் சோர்வின் மூலம்  செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : அலைச்சல்கள் ஏற்படும். 


உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 15, 2022



மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பாராட்டுகளும், மதிப்புகளும் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் 




உத்திரம் : மதிப்பு மேம்படும். 


அஸ்தம் : உதவி கிடைக்கும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 15, 2022



உடல் ஆரோக்கியத்தில்  இருந்துவந்த இன்னல்கள் குறையும். சொத்துக்களின் மீதான கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். சிறிய வருமானம் தரும் தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பொருட்கள் மீதான ஆசைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்கள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




சித்திரை : இன்னல்கள் குறையும்.


சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 15, 2022



இன்ப சுற்றுலா தொடர்பான முயற்சிகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கான பயணங்கள் கைகூடும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. செயல்பாடுகளின் தன்மையை அறிந்து முடிவு எடுக்கவும்.  அனுபவ அறிவின் மூலம் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 




விசாகம் : முயற்சிகள் கைகூடும். 


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 15, 2022



நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 




மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 15, 2022



அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




உத்திராடம் : உதவி கிடைக்கும். 


திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும். 


அவிட்டம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 15, 2022



ஆடம்பர சிந்தனைகள் அதிகரிக்கும். கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுயமான சிந்தனைகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். உண்மை நிலையை அறிந்து பேசுவது நல்லது. கணிதம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய கலை சார்ந்த ஆர்வமும், தேடலும் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




அவிட்டம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.


சதயம் : மாற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : தேடல் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 15, 2022



சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


கல்வி அஞ்சல் வலைதளத்தின் இனிய சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்துகள் (Happy Independence Day - Wishes from Kalvi Anjal Website)...

 கல்வி அஞ்சல் வலைதளத்தின் இனிய சுதந்திர தின அமுதப் பெருவிழா வாழ்த்துகள் (Happy Independence Day - Wishes from Kalvi Anjal Website)...



சுதந்திர தினம் , இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் 1947இல் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு மற்றும் சுதந்திரமான இந்திய தேசத்தை நிறுவுவதைக் குறிக்கிறது. 



தேர்வுநிலை வருவதற்கு முன் பதவி உயர்வு கிடைத்து விட்டால் தேர்வுநிலை பெறும் வரை கீழ்நிலைப்பணியில் தொடர முடியாது என்பதற்கான அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் Letter No. 13677/C2/2018-14. Dated: 13.07.2021 (Not to allow any person to continue in the lower post without relinquishing the right for promotion, in order to get Selection Grade after getting promotion - Principal Secretary to Government)...

 


>>> தேர்வுநிலை வருவதற்கு முன் பதவி உயர்வு கிடைத்து விட்டால் தேர்வுநிலை பெறும் வரை கீழ்நிலைப்பணியில் தொடர முடியாது என்பதற்கான அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் Letter No. 13677/C2/2018-14. Dated: 13.07.2021 (Not to allow any person to continue in the lower post without relinquishing the right for promotion, in order to get Selection Grade after getting promotion - Principal Secretary to Government)... 



Selection Grade - Sanction of Selection Grade - after promotion to a Higher post - strict instruction issued - Regarding...


Secretariat Chennai - 600 009 

Fax No: 044-25671253 

E-mail:hfwcsection@gmail.com 

27 JUL 2021 

HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT 

Letter No. 13677/C2/2018-14. Dated: 13.07.2021 

Pilava, Aani-29, Thiruvalluvar Aandu 2052 


From 

Dr. J.Radhakrishnan,I.A.S. 

Principal Secretary to Government. 


To 

The Director of Medical Education,  Chennai- 600 010. 

The Director of Medical and Rural Health Services, Chennai-600 006. 

The Director of Medical and Rural Health Services (ESI), Chennai-600 006. 

The Director of Public Health and Preventive Medicine, Chennai-600 006. P11 


Sir/Madam, 


Sub: Selection Grade - Sanction of Selection Grade - after promotion to a Higher post - strict instruction issued - Regarding. 


Of late it has been brought to the attention of the Government that a person holding a post in Tamil Nadu Government Service who is in the verge of completing 10 years in the lower post and is promoted to a higher post, has continued in the lower post for a few months till completion of 10 years in the lower post, so as to avail monetary benefit on awarding Selection Grade and after that joined in the promoted post. The concerned officials have not relieved the individual from the lower post immediately on promotion and have allowed the individual to continue in the lower post. Had the authorities relieved the individual from the lower post on promotion the individual would have either joined in the promoted post or relinquished the right for promotion and continued in the lower post. As a result of the lapse on the part of the administration the individual bags two monetary benefits at a time, one for selection grade and another for promotion. This is highly irregular. 


2. I am therefore directed to request you to issue clear instruction to your subordinate officers not to give way to such lapses in future and not to allow any person to continue in the lower post without relinquishing the right for promotion, in order to get Selection Grade after getting promotion. If any deviation is noticed in this regard, necessary departmental action should be taken against the concerned officers who are responsible for the lapse. 


3. The receipt of this letter may be acknowledged immediately. 


Yours faithfully,  

for Principal Secretary to Government. 

Copy to: Stock file / Spare copy




'ஆசிரியர் மனசு' திட்டம் தொடக்கம் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரிகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் (Initiation of Aasiriyar Manasu 'Teachers' Mind' Project - E-mail addresses to express teachers' demands - Minister Anbil Mahesh Poiyamozhi informed)...



 'ஆசிரியர் மனசு' திட்டம் தொடக்கம் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரிகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் (Initiation of Aasiriyar Manasu 'Teachers' Mind' Project - E-mail addresses to express teachers' demands - Minister Anbil Mahesh Poiyamozhi informed)...


*ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 


புதுக்கோட்டை  மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கமம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.


 *இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 


'ஆசிரியர் மனசு' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


 *இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம் (Career Path Degree Program in IIT Madras for SC/ST students completed Class XII and equivalent to Diploma with TAHDCO) செய்தி வெளியீடு எண்: 1396, நாள்: 12-08-2022...



>>> 12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம் (Career Path Degree Program in IIT Madras for SC/ST students completed Class XII and equivalent to Diploma with TAHDCO) செய்தி வெளியீடு எண்: 1396, நாள்: 12-08-2022...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...