கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SSLC பொதுத் தேர்வு - 2022 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 14.10.2022 முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (SSLC Public Examination 2022 - Original Marks Certificates will be issued in respective schools from 14.10.2022 by Directorate of Government Examinations)...


>>> SSLC பொதுத் தேர்வு - 2022 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 14.10.2022 முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (SSLC Public Examination 2022 - Original Marks Certificates will be issued in respective schools from 14.10.2022 by Directorate of Government Examinations)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் : 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


பொருள்:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


பழமொழி :

Diligence is the mother of good fortune


முயற்சி திருவினையாக்கும். 


இரண்டொழுக்க பண்புகள் :


1. நீரின்றி அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 


2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன். 


பொன்மொழி :


உலகின் எந்த கோடீஸ்வரனாலும் தன் கடந்த காலத்தை வாங்க முடியாது. எனவே ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் சந்தோசமாக இருங்கள் ... அன்னை தெரேசா


பொது அறிவு :


1. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது?


 ஜூன் 5 .


 2. பப்பாளி பழத்தின் தாயகம் எது?


 மெக்சிகோ.


English words & meanings :


acou-stic - relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans". Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு :


கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது, அதன் நார்ச்சத்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுடன் பிணைக்கிறது மற்றும் உடலில் இருந்து அதை வெளியே இழுக்க உதவுகிறது. இது முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் முகப்பரு, மனநிலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு ஹார்மோன் இடையூறுகளுக்கு வழிவகுக்கும்



அக்டோபர் 10


உலக மனநல நாள்


உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


முரசு சத்தம்


ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது. 


பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது. 


நீதி :

ஆசையும், அறியாமையும் துன்பத்திற்குக் காரணம்.


இன்றைய செய்திகள்


10.10.22


* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


* குறைந்த நீர்வரத்து: வைகை, முல்லைபெரியாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு.


* மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.


* டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


* இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.


* கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.


* குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் சேதம்.


* பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.


* உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.


* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி.


Today's Headlines


* Minister KN Nehru has said that 85 percent of the rainwater drainage works in Chennai have been completed.


*  Low water flow: Reduction of water opening in Vaigai and Mullaperiyar dams.


 * Rapid Transport Corporation Managing Director K. Ilangovan has warned that strict disciplinary action will be taken if drivers and other employees are found to be working under the influence of alcohol.


 * Due to unprecedented rains in Delhi, people are suffering due to waterlogged roads.


 * Air Chief Marshal VR Chaudhary has said that 3,000 Agni soldiers will be selected for the Indian Air Force by December and they will be given initial training.


 * Earthquake in Greece: 5.1 on the Richter scale.


 * Damage to bridge connecting Russia to Crimea due to bombing.


 * Team India tasted their 4th win and qualified for the semi-finals of the Women's Asia Cup cricket tournament after defeating Bangladesh in the league match.


* Indian player Pankaj Advani won the title of 'Champion' in the World Billiards Tournament.


* ISL  Bengaluru team won the football match.

 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (10-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

அக்டோபர் 10, 2022




வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் தொடர்பான வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம்  மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : மேன்மை உண்டாகும். 


பரணி : வாய்ப்புகள் ஏற்படும். 


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 10, 2022




வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில்நுட்ப செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பயணம் சார்ந்த தொழிலில் லாபம் மேம்படும். மாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 10, 2022




வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதரவான சூழல் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும். 


திருவாதிரை : மாற்றம் ஏற்படும். 


புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 10, 2022




பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டு வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம்  அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அமைதி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 


ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 10, 2022




வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் மூலம்  பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம்  நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மகம் : சிந்தித்து செயல்படவும்.


பூரம் : கவனம் வேண்டும். 


உத்திரம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 10, 2022




வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் : பயணங்கள் கைகூடும்.


அஸ்தம் : புத்துணர்ச்சியான நாள்.


சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 10, 2022




வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெருக்கமானவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


சுவாதி : அனுபவம் ஏற்படும். 


விசாகம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 10, 2022




குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.


அனுஷம் : லாபகரமான நாள்.


கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 10, 2022




நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம்  மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை 



மூலம் : சிந்தனைகள் மேம்படும். 


பூராடம் : இழுபறிகள் குறையும் 


உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 10, 2022




நவீன மின்னணு சாதனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : ஆர்வம் மேம்படும். 


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 10, 2022




வியாபார பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சதயம் : எண்ணங்கள் மேம்படும். 


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 10, 2022




தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 



பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கைகூடும். 


ரேவதி : புரிதல் உண்டாகும். 

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Today's (10-10-2022) Wordle Answer...

                                                                                              

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (10-10-2022) Wordle Answer: ENJOY












 

10.10.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education seeking details of vacant Post Graduate Teacher Posts as on 10.10.2022)...


>>> 10.10.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education seeking details of vacant Post Graduate Teacher Posts as on 10.10.2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எஸ்எஸ்எல்சி தேர்வு 2022 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் (SSLC Exam 2022 - Original Marksheet Distribution Proceedings by DGE)...


>>> எஸ்எஸ்எல்சி தேர்வு 2022 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் (SSLC Exam 2022 - Original Marksheet Distribution Proceedings by DGE)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10.10.2022 முதல் 12.10.2002 வரை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகையை TNSED Schools Appல் பதிவு செய்யும் முறை (From 10.10.2022 to 12.10.2002 Elementary, Middle, High and Higher Secondary Schools Teacher and Student Attendance Registration Procedure in TNSED Schools App)...




10.10.2022 முதல் 12.10.2002 வரை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகையை TNSED Schools Appல் பதிவு செய்யும் முறை (From 10.10.2022 to 12.10.2002 Elementary, Middle, High and Higher Secondary Schools Teacher and Student Attendance Registration Procedure in TNSED Schools App)...


அனைவருக்கும் வணக்கம்.


தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கீழ்க்கண்டவாறு 10.10.2022 முதல் 12.10.2002 வரை ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை TNSED Schools App ல் பதிவு செய்ய வேண்டும்.


தொடக்கப்பள்ளிகள் :


Today status ல் Fully not working என பதிவு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி என பதிவு செய்ய வேண்டும்.


நடுநிலைப்பள்ளிகள்:


Today status ல் Partially working day என பதிவு செய்து 6,7,8 மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.


பயிற்சி சென்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி எனவும், மற்ற ஆசிரியர்களுக்கு வருகையும் பதிவு செய்ய வேண்டும்.


 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் :


Today status ல் Fully working day என பதிவு செய்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...