கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

யானையின் எடை எவ்வளவு? - இன்றைய சிறுகதை (How much does an elephant weigh? -Today's Short Story)...

 


யானையின் எடை எவ்வளவு? - இன்றைய சிறுகதை (How much does an elephant weigh? -Today's Short Story)...


அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, எடை போடும் அளவிற்கு பெரிய பெரிய கற்களைப் ஒவ்வொன்றாய் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், மனம் தளறாமல் அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.




One day a king suddenly wanted to know how much his royal elephant weighed. There were no weight platforms at all in those days; There is no scale big enough to measure an elephant. How to know the weight of an elephant.? The king asked the ministers. No one knows how to do it. 


Then the ten-year-old son of a minister said, 'I will calculate its weight correctly and tell you.' Everyone laughed at that. But, the king also gave him a chance. The boy took the elephant to the river. He took the elephant in the biggest boat there. 


When the elephant got on, the boat sank into the water. Immediately he marked the water level on the boat. Then he took down the elephant from the boat and asked him to load the big stones into the boat one by one to weigh him down. Stones were loaded until the boat was submerged to the mark previously noted.


Then, showing the stones to the king, he said, "Their weight is the weight of that elephant." Everyone was amazed. They praised his intelligence. Everyone saw the elephant as a whole. Therefore, they are not confident that they can predict its weight. But the boy thought that the sum of the weights was the weight of the elephant; He found the answer easily.


No matter how big the task is, one should not give up and divide it into small tasks. Then, each of those actions should be completed by Sevan. Then, the whole project will be completed beautifully.



அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - 18-11-2022 அன்று பயிற்சி - சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - திட்டத்தின் செயல்பாடு கால அட்டவணை (Implementation of Mission Eyarkai Environment Program in Government Schools – Training on 18-11-2022 – Chief Minister Awards to 5 best performing schools and 25 students – Proceedings of Commissioner of School Education - Roll out Plan) ந.க.எண்: 56667/ எம்/ இ2/ 2021, நாள்: 15-11-2022...



>>> அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - 18-11-2022 அன்று பயிற்சி - சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - திட்டத்தின் செயல்பாடு கால அட்டவணை (Implementation of Mission Eyarkai Environment Program in Government Schools – Training on 18-11-2022 – Chief Minister Awards to 5 best performing schools and 25 students – Proceedings of Commissioner of School Education - Roll out Plan) ந.க.எண்: 56667/ எம்/ இ2/ 2021, நாள்: 15-11-2022...






அக்டோபர் 28...


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பொள்ளேபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் கல்வியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறந்த பசுமைப்பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர்,சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பருவநிலை மாற்ற இயக்கம் ஈரநிலங்கள் பாதுகாப்பு இயக்கம்,பசுமைத் தமிழ்நாடு, மீண்டும் மஞ்சப்பை போன்ற பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


பசுமைப் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான இந்த விருது பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.


பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில் மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தியா மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த தேவையான செயல்முறைகளை வழங்கும்.

மேலும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது, மேலும் மிஷன் இயற்கை மாணவர்களின் பசுமை பள்ளிகள் மற்றும் சமுதாயம் ஈடுபாட்டின் மூலம் இந்த முன்முயற்சியை வலுப்படுத்த இயற்கை இயக்கம் உதவும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பரிதா டாம்பல்,பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அமுதவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...



>>> நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...





புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Refresher Training for Newly Appointed Post Graduate Teachers – Proceedings of SCERT Director) ந.க.எண்: 5953 / F1/ 2022, நாள்: 16-11-2022...

 



 


>>> புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Refresher Training for Newly Appointed Post Graduate Teachers – Proceedings of SCERT Director) ந.க.எண்: 5953 / F1/ 2022,  நாள்: 16-11-2022...






இன்றைய (17-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 17, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 17, 2022



குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனம் சார்ந்த வீண் செலவுகள் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


ரோகிணி : ஆதரவான நாள்.


மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 17, 2022



மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். உறவினர்களின் மூலம் உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மறைமுகமான எதிர்ப்புகளால் உண்டான இன்னல்கள் நீங்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : தன்னம்பிக்கையான நாள்.


திருவாதிரை : தீர்வு கிடைக்கும். 


புனர்பூசம் : இன்னல்கள் நீங்கும். 

---------------------------------------



கடகம்

நவம்பர் 17, 2022



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூசம் : ஆர்வமின்மை குறையும். 


ஆயில்யம் : நன்மை ஏற்படும்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 17, 2022



ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : புதுவிதமான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும். 

---------------------------------------



கன்னி

நவம்பர் 17, 2022



வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும். 


அஸ்தம் : மாற்றமான நாள். 


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 17, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : எண்ணங்கள் ஈடேறும். 


சுவாதி : ஒத்துழைப்பான நாள்.


விசாகம் : லாபம் மேம்படும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 17, 2022



வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : மாற்றமான நாள்.


அனுஷம் : புரிதல் ஏற்படும்.


கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 17, 2022



உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத தனவரவின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மூலம் : உயர்வு உண்டாகும்.


பூராடம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திராடம் : லாபம் ஏற்படும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 17, 2022



எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பெரியோர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்




உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.


திருவோணம் : காலதாமதம் ஏற்படும்.


அவிட்டம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 17, 2022



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் இருந்து புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.


சதயம் : அனுபவம் கிடைக்கும்.


பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 17, 2022



மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




பூரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்: அறத்துப்பால். 


அதிகாரம்: இல்வாழ்க்கை: 


குறள்: 


துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.


விளக்கம்:

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.


பழமொழி :

Do your duty and then ask for your rights


கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 


2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஊன்றுகோலாக அல்ல. --ஜான் எஃப். கென்னடி.


பொது அறிவு :


1. விசைத்தறியை கண்டுபிடித்தவர் யார் ? 


இ .கார்ட்ரைட்.


 2. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல் எது? 


 பசிபிக் பெருங்கடல் .(ஆழம் 12 ,925 அடி).


English words & meanings :


ba-nd -a ring noun மோதிரம்,ba-nd -a group noun குழு, ba-nned- prohibited. verb தடை செய்யப்பட்டது. all homophones 


ஆரோக்ய வாழ்வு :


நாவல் பழ விதை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது, இது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு போதுமான பொட்டாசியம் கிடைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.


NMMS Q


பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர் யார்? 


 விடை: சுல்தான் பிரோஸ்


நவம்பர் 17


லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.


நீதிக்கதை


முயற்சி செய்வோம்


ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான். 


ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள். 


நீதி :

முயன்றால் முடியாதது எதுவுமில்லை.


இன்றைய செய்திகள்


17.11.22


* மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


* ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன.


* தமிழகத்தில் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், இம்மாதம் 20-ம் தேதியன்று 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


* ‘நிலவையும் தாண்டி’ - விண்ணில் பாய்ந்தது நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்.


* ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு.


* இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு சென்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக  பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர்.


* சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் தமிழ்நாடு தபால் துறை, ரிசர்வ் வங்கி, அசோக் லேலண்ட், தமிழ்நாடு மின்சார வாரியம், ஏர் இந்தியா, எம்.சி.சி., செயின்ட் பால்ஸ் உள்பட 34 அணிகள் கலந்து கொள்கின்றன.


* டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார்: சாம் கரன், ஹேல்ஸ் முன்னேற்றம்.


* புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் 'டை'.


Today's Headlines


* The Madras High Court has directed the Medical Examination Committee to verify the certificates of non-resident Indians of all applicants applying under the Non-Resident Indian quota for post-medical studies.


* Tamil Nadu Biodiversity Protection and Green Climate Change Response Project is going to be implemented at a cost of 920 crores, Chief Minister M. K. Stalin has said.


* Cases filed against the ordinance banning online gaming have been withdrawn in the Madras High Court.


* According to the Chennai Meteorological Department, there is a possibility of moderate rain in a few places in Tamil Nadu till 19th and heavy rain in 6 districts on 20th of this month.


* The Central Government has informed the Supreme Court that the Tenpenna River Water Distribution Arbitration Board will be set up in 4 weeks.


 *'Beyond the moon' - NASA's Artemis rocket flew into space.


 *New leadership of G-20 alliance handed over to India.


* The G-20 summit is being held on the 14th in Bali, Indonesia.  As part of the conference, the visiting world leaders visited the mangrove forests of Bali Island.


* The first Division Hockey League match on behalf of the Chennai Hockey Association started yesterday at the Mayor Radhakrishnan Stadium in Egmore.  34 teams including Tamil Nadu Postal Department, Reserve Bank, Ashok Leyland, Tamil Nadu Electricity Board, Air India, MCC, St Paul's are participating in this tournament.


 * Suryakumar retains top spot in T20 rankings: Sam Karan, Hales progress


* Pro Kabaddi League: Tamil Thalaivas- Patna Pirates Match 'Tie'.


2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Conduct of Art Festival Practice & Competitions in Government Schools during the academic year 2022-23 - Issuing Guidelines - Co-Proceedings of the Commissioner of School Education, Director of Elementary Education and State Project Director) ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 21-09-2022...


>>> 2022-23ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநரின் இணைச் செயல்முறைகள்  (Conduct of Art Festival Practice & Competitions in Government Schools during the academic year 2022-23 - Issuing Guidelines - Co-Proceedings of the Commissioner of School Education, Director of Elementary Education and State Project Director) ந.க.எண்: 3195/ ஆ7/ கலை/ ஒபக/ 2022, நாள்: 21-09-2022...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...