கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – நவம்பர் நான்காவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - November 4th Week)...

            


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – நவம்பர் நான்காவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - November 4th Week)...



>>>  எண்ணும் எழுத்தும் - அலகு 6 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (18-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 18, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதுவிதமான இலக்கை மனதில் நிர்ணயம் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : இலக்குகள் பிறக்கும்.


கிருத்திகை : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 18, 2022



மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : ஈர்ப்பு ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 18, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : தடைகள் நீங்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 18, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


பூசம் : எண்ணங்கள் கைகூடும். 


ஆயில்யம் : மாற்றமான நாள்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 18, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாயம் நிமிர்த்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் குழப்பம் குறையும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : முடிவு கிடைக்கும்.


பூரம் : அனுசரித்து செல்லவும்.


உத்திரம் : குழப்பம் குறையும். 

---------------------------------------



கன்னி

நவம்பர் 18, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : ஆதாயம் ஏற்படும். 


சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 18, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும். 


சுவாதி : சுறுசுறுப்பான நாள்.


விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 18, 2022



தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டு வியாபார பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




விசாகம் : ஆதாயம் உண்டாகும். 


அனுஷம் : உதவி கிடைக்கும்.


கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 18, 2022



உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : செல்வாக்கு மேம்படும்.


உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 18, 2022



இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இணையம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தினை குறைத்து கொள்வது நல்லது. விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : குழப்பமான நாள்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 18, 2022



பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். காலதாமதமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : இன்னல்கள் குறையும். 


சதயம் : ஆதரவான நாள்.


பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

நவம்பர் 18, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : ஆதரவான நாள்.


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:அறத்துப்பால் 


இயல்:பாயிரவியல் 


அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள் : 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


பொருள்:

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.


பழமொழி :

Do well and have well.


நல்லதைச் செய்து நல்லதைப் பெறு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.


2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 


பொன்மொழி :


தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின்



பொது அறிவு :


1. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா எது ? 


ஹட்சன் விரிகுடா.( பரப்பு 317, 500 ச.மைல்). 


 2. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?


 ரஷியா.


English words & meanings :


Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms 


ஆரோக்ய வாழ்வு :


உடலில் நார்ச்சத்து நன்றாக இருப்பதால் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. நாவல் விதை பொடியை சாலட், பால் மற்றும் சாறுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.


NMMS Q


ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோதரர்களால்___________ தென்பகுதியில் நிறுவப்பட்டது. 


 விடை: கர்நாடகா


நவம்பர் 18


வ. உ. சி அவர்களின் நினைவுநாள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.


நீதிக்கதை


குறையா? நிறையா?


ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 


பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 


நீதி :

மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.


இன்றைய செய்திகள்


18.11.22


* ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்.


* பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுப்பது எப்படி என பிரம்மாண்டமான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.


* இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக பெண் நீதிபதிகள்: அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்.


* இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


* மின்னணு சாதனங்களை பழுதுபார்க்க இணையதளம் - மத்திய அரசு விரைவில் அறிமுகம்.


* ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலந்தை தாக்கியதால் பதற்றம்.


* முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.


* இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இந்த ஆண்டுக்கான தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் அணி வெற்றி.


Today's Headlines


* The High Court has directed the Tamil Nadu government to set up a mobile mental health counseling center in all schools in Tamil Nadu.


*   'Madras Eye' is spreading Rapidly in Chennai - Patients thronging hospitals.


* A grand security exercise was held across Tamil Nadu based on how to prevent terrorists from infiltrating.  10 thousand people participated in it.


 * Tamil Nadu has the  most women judges in India: Minister S. Raghupathi informed with pride.


*  India's first private rocket 'Vikram S' will be launched today from Sri Harikota.


* Central Government is going to Launch a Website platform for Repair of Electronic Devices Soon


* Tensions rise after missile fired by Ukrainian military to shoot down Russian missile hits Poland


 * First ODI: Warner, Smith wonderful play- Australia beat England


 * Indian table tennis player Sarath Kamal has been selected for this year's Dayanchand Gelratna Award.


 * 1st Division Hockey League Match: Minwariyam wins the opening match.




தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் - பணி நியமனம் முதல் பணி ஓய்வு வரை - தேவையான தகவல்கள், விதிகள், படிவங்கள் - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - பவானிசாகர் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - கணக்கு கையேடு - 204 பக்கங்கள் - மனித வள மேலாண்மை துறை - 2021ஆம் ஆண்டு (Government Officers Training Institute - Bhavanisagar - Concise Basic Training for Junior Assistants / Assistants - Accounts Manual - 204 Pages - Department of Human Resource Management - 2021)...



>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் - பணி நியமனம் முதல் பணி ஓய்வு வரை - தேவையான தகவல்கள், விதிகள், படிவங்கள் - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - பவானிசாகர் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - கணக்கு கையேடு - 204 பக்கங்கள் - மனித வள மேலாண்மை துறை - 2021ஆம் ஆண்டு (Government Officers Training Institute - Bhavanisagar - Concise Basic Training for Junior Assistants / Assistants - Accounts Manual - 204 Pages - Department of Human Resource Management - 2021)...




1. முகவுரை

2 அடிப்படை விதிகள்‌

3. தமிழ்நாடு விடுப்பு விதிகள்‌ -1933

4. பணி ஏற்பிடைக்காலம்‌

5. தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள்‌, 2017

6. ஊதிய உயர்வு

7. ஊதிய நிர்ணயம்

8. பயணப்படி

9. மாறுதல்‌ பயணப்படி

10. விடுப்புகாலப்‌ பயணச்சலுகை 

11. ஓய்வூதியம்‌ 

12. தமிழ்நாடு நிதித்‌ தொகுப்பு விதிகள்‌

13. தமிழ்நாடு கருவூல விதித்தொகுப்பு

14. தமிழ்நாடு வரவு செலவுக்‌ கையேடு 124 

15. தமிழ்நாடு கணக்கு விதித்தொகுப்பு

16. பொது வருங்கால வைப்பு நிதி

17. தமிழ்நாடு சிறப்பு சேமநல நிதி மற்றும்‌ பணிக்கொடைத்‌ திட்டம்‌ -1984

18. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ சேமநல நிதி மற்றும்‌ பணிக்‌ கொடைத்‌ திட்டம்‌: 2000

19. தமிழ்நாடு அரசு ஊழியர்‌ குடும்ப நல நிதித்‌ திட்டம்‌

20. பங்களிப்புடன்‌ கூடிய ஓய்வூதியம்‌ 

21. அரசு ஊழியர்களின்‌ வருமான வரி கணக்கீடு

22. பட்டியல்கள்‌ தயாரிப்பும்‌ - பொதுவான தணிக்கை தடைகளும்‌ 

23. முக்கிய படிவங்கள்‌ மற்றும்‌ அரசாணைகளின்‌ தொகுப்பு



மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் - குடியரசு தலைவர் (C.V.Ananda Bose appointed as the new Governor of West Bengal - President)...

 


மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் -  குடியரசு தலைவர் (C.V.Ananda Bose appointed as the new Governor of West Bengal - President)...


மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், புதிய கவர்னர் நியமனம்.


கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார்.


சி வி ஆனந்த போஸ்

பிறந்தது

2 ஜனவரி 1951 (வயது 71)

மன்னானம், கோட்டயம், கேரளா

தேசியம்

இந்தியன்

குடியுரிமை

இந்தியன்

கல்வி

வாழ்விடம் & சுற்றுச்சூழலில் PhD

அல்மா மேட்டர்

பிட்ஸ் பிலானி

செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரி , சங்கனாச்சேரி

கேஇ கல்லூரி

விருதுகள்

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய சிறந்த நடைமுறை

சிங்கப்பூர் அரசு விருது நகர்ப்புற பசுமை மேலாண்மை சிறப்பு

ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப்

சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்காளத்தின் கவர்னர் மற்றும் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நிர்வாக சேவையில் பணியாற்றிய முன்னாள் அரசு ஊழியர் ஆவார் . 


ஆனந்த போஸ் மேற்கு வங்க ஆளுநராக உள்ளார். அரசு ஊழியர், வீட்டு வசதி நிபுணர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், அவர் அரசாங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். இந்தியாவின் தலைமைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர். அவர் UN உடன் ஆலோசனை அந்தஸ்தில், Habitat Alliance இன் தலைவராக உள்ளார் மற்றும் UN வாழ்விடம் ஆளும் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.


ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப்பைப் பெற்ற போஸ், முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார்.


போஸ், கல்வி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் பொது நிர்வாகம் போன்ற பல்வேறு அமைச்சகங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைச் செயலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.


நிர்மிதி கேந்திரா (கட்டிட மையம்), மாவட்ட சுற்றுலா கவுன்சில் மற்றும் வாழ்விடக் கூட்டணி போன்ற மலிவு விலை வீடுகள், நல்லாட்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்வித் துறையில் போஸ் பல இயக்கங்களையும் நிறுவனங்களையும் நிறுவியுள்ளார்.


அவர் ஜெனீவாவில் உள்ள அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய கவுன்சில் (CERN) மற்றும் சர்வதேச ஃப்யூஷன் எனர்ஜி ஆர்கனைசேஷன், ITER, பிரான்சில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் அணுசக்தி கல்வி சங்கத்தின் தலைவராக இருந்தார்.


ஐக்கிய நாடுகள் சபை அவரது முயற்சிகளை 'உலகளாவிய சிறந்த நடைமுறை' என நான்கு முறை தேர்வு செய்துள்ளது. இந்திய அரசு அவருக்கு தேசிய (சிறப்பு) வாழ்விட விருதை வழங்கியது.


ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பொக்கிஷங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றக் குழுவின் தலைவராக இருந்தார் .


போஸ் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் உட்பட ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 32 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.


தொழில்

1977 இல் ஐ.ஏ.எஸ்-ல் சேர்ந்த போஸுக்கு, நல்லாட்சியில் புதுமைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது, இது மக்களுக்கு விரைவாகவும் பயனுள்ளதாகவும் பொது சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.


1985 ஆம் ஆண்டு கொல்லம் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர், மக்களுக்கு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதற்காக அவர் நிறுவிய நிர்மிதி கேந்திரா (கட்டிட மையம்) தேசிய நெட்வொர்க்காக உருவெடுத்து தேசிய வீட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான பிரதமரின் முடிவிற்கு ஒரு தூண்டுதலாக மலிவு விலை வீடுகளில் இந்த தனித்துவமான முன்முயற்சி கருதப்படுகிறது. போஸ் 4 மார்ச் 2014 அன்று நரேந்திர மோடியை சந்தித்து முன்மொழிவை சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


1986 ஆம் ஆண்டு போஸால் தொடங்கப்பட்ட மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கவுன்சில், கேரள அரசால் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதியெடுக்கப்பட்டது, கேரளாவை கடவுளின் சொந்த நாடாக மாற்றியதன் பின்னணியில் முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது. தேசிய சுற்றுலாக் கொள்கையானது, இந்த நிறுவனத்தை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.


மருத்துவமனைகளில் துணை மருத்துவ வசதிகளை வழங்கும் நிறுவனங்களாக போஸால் தொடங்கப்பட்ட தன்வந்திரி கேந்திராக்கள் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நகலெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முதன்முதலில் மருந்துகளை தள்ளுபடி விலையில் வழங்கும் முயற்சி தன்வந்திரி கேந்திராவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. பின்னர் கேரள அரசு நியாயமான விலையில் மருந்துகளை தொடர்ந்து வழங்க நிறுவனங்களை அமைத்தது. பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா கேந்திரா, 32 ஆண்டுகளுக்கு முன்பு போஸால் எடுக்கப்பட்ட அந்தத் திசையில் ஒரு பணிவான முயற்சியின் ஒரு சிறந்த உச்சமாகப் பார்க்கப்படலாம்.


ஒரு பயனுள்ள மக்கள் தொடர்புத் திட்டமாக கேரளாவின் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட 'File to Field' திட்டம், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து, பின்தங்கிய கிராமப்புறங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தக்கூடிய நிர்வாகப் புதுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், அப்போதைய கேரள முதல்வரால் வழிநடத்தப்பட்ட ஐநா விருது பெற்ற பொதுச் சேவை வழங்கல் முறையின் முன்னோடி இது என்று பதிவு செய்துள்ளார்.


கிராமப்புறங்களின் காலக்கெடுவுக்கான வளர்ச்சிக்காக, சப்-கலெக்டராக இருந்த போஸ் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமோத்ஸவா திட்டம், கேரள அரசால் அதிகாரப்பூர்வமாக நகலெடுக்கத் தகுந்த ஒரு பயனுள்ள வளர்ச்சி மாதிரியாக மதிப்பிடப்பட்டது மற்றும் அரசாங்கம் 200 பஞ்சாயத்துகளில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது.


ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான வசதிகளுடன் கூடிய விரிவான மருத்துவத் தோட்டத்துடன் கூடிய ராம்சர் தளம், சாஸ்தம்கோட்டா ஏரியின் கரையில் அமைக்கப்பட்ட சஞ்சீவனி கேந்திரா, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நகலெடுக்கப்பட்டது மற்றும் வனத் துறையின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக அதை ஏற்றுக்கொண்டது.


பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களிடையே தொழில்முனைவோரை வளர்க்கவும், 1986ல் கொல்லத்தில் அன்னபூர்ணா சொசைட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் பணிபுரியும் பெண்கள் விடுதியை நடத்தலாம், வெளிப்புற உணவு வழங்கலாம், தெரு உணவுக்காக நடமாடும் உணவகங்களை நிறுவலாம், மேலும் பெண்களை வருமானம் ஈட்டுவதற்கு திறன் மேம்பாட்டை மேற்கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள். இது முன்னோடியாக அல்லது கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குடும்பஸ்ரீ சுயஉதவி குழுக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.


கொல்லம் மாவட்டத்தில் உள்ள மீனவப் பெண்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட நுண்கடன் திட்டம், ரேஷன் கார்டு கடன் என்று பிரபலமாக அறியப்பட்டால், சமூகத்தின் இந்த விளிம்புநிலைப் பிரிவை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும்.


போஸ் காலத்தில் கொல்லத்தில் முதன்முதலாக ஹவுஸ் போட் அறிமுகப்படுத்தப்பட்டது, இன்று சுற்றுலாத் துறையில் அதிக வருமானம் ஈட்டித் தருவது படகுகள்தான். 1985 ஆம் ஆண்டு கொல்லத்தில் அமைக்கப்பட்ட சாகசப் பூங்காவின் மூலம் சாகச விளையாட்டுகள் மாநிலத்தில் ஊக்கம் பெற்றன. அதைத் தொடர்ந்து, அவர் இதற்காக ஒரு சாகச அகாடமியை நிறுவினார்.


சாஸ்தம்கோட்டா நன்னீர் ஏரியைப் பாதுகாக்கும் வகையில், ஏரியைச் சுற்றி பசுமைப் பட்டையை உயர்த்தி, மண் அரிப்பைத் தடுத்ததோடு, கட்டுப்பாடுகளை நீக்கியும் பிரச்சார முறையில் தொடங்கப்பட்ட வாட்டர் சேவ் திட்டம், ஜெர்மனியிடமிருந்து ஐ.நா.வின் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரெமன் பார்ட்னர்ஷிப் விருதைப் பெற்றது.


போஸால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நிகழ்ச்சி நிரலானது, தொழிலாளர்களிடையே நிலையான வளர்ச்சி மற்றும் நலன்புரி திட்டங்களை செயல்படுத்துவதற்காக கேரள அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஐ.நா.வால் உலகளாவிய நல்ல நடைமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.


அணுசக்தி கல்வி சங்கத்தின் தலைவராக , போஸ் கல்விக்காக ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவை அமைத்து அறிவியல் கண்காட்சிகள் மற்றும் இளைஞர் விழாக்களை அறிமுகப்படுத்தினார்.


MD NAFED ஆக, போஸ் ஊழலைச் சரிபார்த்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து, அமைப்பை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்த முடியும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, ​​போஸ் 'ஈஸி மார்க்கெட்' திட்டத்தையும், காய்கறிகள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கான 'பண்ணை வாசல் முதல் வீட்டு வாசல்' நேரடி சந்தைப்படுத்தும் திட்டத்தையும் தொடங்கினார். டெல்லியில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தபோது, ​​சந்தை விலையை விட முப்பது சதவிகிதம் குறைவாக வெங்காயத்தை விற்க வெற்றிகரமான சந்தை தலையீடு செய்யப்பட்டது.


தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகியாக, போஸ் 100 நாள் திட்டத்தைத் தொடங்கினார், இது நிறுவனத்தை புதுப்பிப்பதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தது. மூடப்பட்ட கேலரிகளைத் திறப்பது, காட்சி மற்றும் விளக்குகளை நவீனப்படுத்துவது, அருங்காட்சியகத்தை சமூகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அவுட்ரீச் திட்டங்களைத் தொடங்குவது, இந்தியாவின் தேசிய பாரம்பரியத்தின் மகத்துவத்தை இளம் மனதைக் கவரும் வகையில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற பெரும்பாலான மேம்பாடுகள் 60 நாட்களில் எட்டப்பட்டன. , சர்வதேச கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் மக்கள் அருங்காட்சியக இயக்கத்தைத் தொடங்குதல், போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.




C. V. Ananda Bose

Born

2 January 1951 (age 71)

Mannanam, Kottayam, Kerala

Nationality

Indian

Citizenship

Indian

Education

PhD in Habitat & Environment

Alma mater

BITS Pilani

St. Berchmans College, Changanacherry

KE College

Awards

United Nations Global Best Practice

Singapore Government Award for Urban Green Management Excellence

Jawaharlal Nehru Fellowship

C. V. Ananda Bose is the Governor of West Bengal and an Indian politician and former civil servant who served in the Indian Administrative Service.


Ananda Bose is the Governor of West Bengal. Civil servant, housing expert, writer and orator, he has held the rank of Secretary to Govt. of India, Chief Secretary, and University Vice Chancellor. He is Chairman of the Habitat Alliance, in consultative status with UN and was member of the UN Habitat Governing Council.


Recipient of the Jawaharlal Nehru Fellowship, Bose is also Fellow of the Lal Bahadur Shastri National Academy of Administration, Mussoorie.


Bose has worked as District Collector, and Principal Secretary and Additional Chief Secretary in various ministries such as Education, Forest and Environment, Labour, and General Administration.


Bose has founded several movements and institutions in the field of affordable housing, good governance, science and technology, agriculture, rural development and education, such as Nirmithi Kendra (Building Centre), District Tourism Council and Habitat Alliance.


He has represented India in the European Council for Nuclear Research (CERN), Geneva and the International Fusion Energy Organisation, ITER, France. He was Chairman of the Atomic Energy Education Society.


United Nations have selected his initiatives as 'Global Best Practice' four times. Government of India awarded him the National (Special) Habitat award.


He was the Head of the Supreme Court Committee on the treasures of Sree Padmanabhaswamy temple.


Bose has published 32 books in English, Malayalam and Hindi including novels, short stories, poems and essays.


Career

Having joined IAS in 1977, Bose had the opportunity to introduce innovations in good governance which could ensure speedy and effective delivery of public services to the people.


The Nirmithi Kendra (Building Centre) founded by him as District Collector of Kollam in 1985 to provide cost effective and environment friendly houses to the people, has emerged into a national network and become part of the national housing policy. This unique initiative in affordable housing is seen as a trigger for the Prime Minister's decision to provide affordable houses for all by 2022. Bose had the opportunity to meet and submit the proposal to Narendra Modi on 4 March 2014.


The District Tourism Promotion Council started by Bose in 1986 and replicated by the Government of Kerala in all the districts in the state, has been the nodal institution behind making Kerala God's own country. The national tourism policy recommends that this institution be replicated in all districts in the country.


Dhanwanthari Kendras initiated by Bose as institutions which provide ancillary medical facilities in hospitals, have been replicated in all districts in Kerala. The first ever attempt in India to provide medicines at discounted rate was started as part of Dhanwanthari Kendra. Later on Kerala government set up institutions to provide medicines at fair price on a regular basis. Pradhan Mantri Bhartiya Jan Aushadhi Pariyojana Kendra may be seen as a great culmination of a humble initiative in that direction taken 32 years back by Bose.


'The File to Field' program successfully launched in various places in Kerala as an effective mass contact program, has proved to be an administrative innovation which could redress the grievance of the public and accelerate development of backward rural areas. Union Minister of Tourism, Alphons Kannanthanam, is on record that this is the precursor to UN award-winning public service delivery system spearheaded by the then Chief Minister of Kerala .


The Gramotsava program initiated by Bose as sub collector, for the time bound development of rural areas, was officially evaluated by the Kerala Government as an effective development model worthy of replication and Government repeated the program in 200 panchayaths.


Sanjeevani Kendra, setup on the banks of the Ramsar site, Sasthamcotta Lake, with an extensive medicinal garden with facilities for Ayurveda treatment and research, was replicated in other parts of the state and Forest department adopted it as one of their flag ship projects.


In order to empower women and develop entrepreneurship among them, the Annapoorna society was set up in Kollam in 1986. They could run working women's hostel, undertake outdoor catering, establish mobile restaurants for street food, and undertake capacity building to equip women for income generating economic development activities. This has been evaluated as the forerunner or the renowned Kudumbashri Self Help Groups in Kerala.


The micro credit scheme introduced among the fisherwomen in Kollam district, popularly known as ration card loan, could save this marginalised section of society from the clutches of the usurious money lenders.


The first house boat in the state was introduced in Kollam during Bose's tenure and today houseboats are a major source of income in the tourism sector. Adventure sports got a boost in the state through the Adventure Park set up in Kollam in 1985. Subsequently, he could establish an Adventure Academy for this purpose.


The project Water Save launched to protect the Sasthamcotta fresh water lake in a campaign mode by raising a green belt around the lake, preventing soil erosion and removing restrictive practises, received the UN – sponsored Bremen Partnership Award from Germany.


The Labour Agenda initiated by Bose was adopted by the Government of Kerala for implementing sustainable developmental and welfare programs among the workers, was selected by the UN as Global Good Practice.


As Chairman of the Atomic Energy Education Society, Bose could set up a television studio for edutainment and introduce science fairs and youth festivals.


As MD NAFED, Bose could check corruption, bring the guilty to books and put the organization back on rails. When the price of essential commodities spiralled, Bose initiated the 'Easy market' scheme and the 'Farm gate to Home gate' direct marketing scheme for vegetables and horticulture produce. When onion price skyrocketed in Delhi, successful market intervention was made to sell onions at thirty percent less than the market price.


As the Administrator of the National Museum, Bose launched a 100-day programme which spelt out specific measures to revamp and revitalise the institution. Most of the improvements suggested were achieved in 60 days, such as opening the closed down galleries, modernising the display and lighting, launching outreach programmes to take the Museum to the community, arranging children's programme to ignite young minds to the greatness of India's national heritage, organising international exhibitions and launching the People's Museum movement, to mention a few.


நன்றி விக்கிபீடியா...


மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுக்கலாம் - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு (Madras Eye Affected Students and Teachers May Take Compulsory Leave - Chief Educational Officer Announced)...

  மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுக்கலாம் - முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு (Madras Eye Affected Students and Teachers May Take Compulsory Leave - Chief Educational Officer Announced)...






வரும் சனிக்கிழமை (19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு - தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிப்பு (Tamil Nadu Government orders schools and colleges to function Next Saturday (19.11.2022) - Notification as working day to make up for the holiday given the day after Diwali)...

 வரும் சனிக்கிழமை (19.11.2022) பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு - தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய பணி நாளாக அறிவிப்பு (Tamil Nadu Government orders schools and colleges to function Next Saturday (19.11.2022) - Notification as working day to make up for the holiday given the day after Diwali)...


வரும் சனிக்கிழமை (19-11-22) அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு...


சென்னை: வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பவதாவது: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.,19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும். தீபாவளிக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறை காரணமாக, வரும் சனிக்கிழை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pongal Gift Package Notification 2025 - TN Government Order

2025-ஆம் ஆண்டிற்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும...