கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


 அதிகாரம்:வாழ்க்கைத் துணை நலம்


குறள் : 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.


பொருள்:

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.


பழமொழி :

when you obey the superior, you instruct your inferior

முன் ஏர் போன வழியேதான் பின் ஏறும் போகும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.


 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :


"நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்


பொது அறிவு :


1. நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது? 


 ரஷ்யா.


 2. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 


 கிழக்கு சகாரா பாலைவனம்.


English words & meanings :


ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.


ஆரோக்ய வாழ்வு :

பாதாமில் வைட்டமின் பி1, தயாமின், வைட்டமின் பி3 மற்றும் ஃபோலேட், வைட்டமின் பி9 போன்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இதை ஊட்டச்சத்து நிறைந்த பிரதான உணவாக கூறலாம்.  நல்ல கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள பாதாம், ஒரு அவுன்ஸ் அதாவது 23 பாதாம் சாப்பிடும்போது, தாவர புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நன்மைகள் மற்றும் போதுமான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


NMMS Q


6, 13, _______, 33. 


விடை : 22. 


 விளக்கம்: 6+3 =9 ; 13+3 = 16; 33+3 = 36; மூன்றின் வர்க்கம் 9. 4 வர்க்கம் 16. 6ன் வர்க்கம் 36 என வந்துள்ளது. எனவே இடையில் உள்ள எண்ணானது ஐந்தின் வர்க்கமாக அமையும். ஆகையால் 25ல் மூன்றை கழித்தால் 22 கிடைக்கிறது.


நீதிக்கதை


பாசமுள்ள சிறுவன்


மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை. 


அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை 


அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். 


மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. 


அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 


நீதி :

அன்பால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்


22.11.22


* தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு.


* அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


* தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 4000 முதல் 4500 பேருக்கு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு.


* தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.


* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 44 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


* 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது.


* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.


* இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


* விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர்: உலக சாதனை படைத்தது தமிழ்நாடு அணி.



Today's Headlines


* The Supreme Court again refused to ban the Tamil Nadu government's increase in electricity tariffs.


 * The Government of Tamil Nadu has announced that a temporary solution has been found to the issue of Government Cable TV and the public can contact the Deputy Managers for help.


* Every day 4000 to 4500 people are affected by 'Madras Eye' across Tamil Nadu.


* Chennai Meteorological Center has informed that there is a possibility of heavy rain in 6 districts of Tamil Nadu today and tomorrow.


* Rs 22,842 crore bank fraud: CBI files chargesheet against APG Shipyard founder


 * A powerful earthquake hit West Java, Indonesia yesterday. It scored a 5.6 on the recorder scale. According to reports, 44 people have died and 300 people have been injured so far in this earthquake.


 * NASA says humans could live and work on the moon by 2030.


 * Men's Tennis Championship - Djokovic wins the title.


* It has been reported that a case has been registered against Indian football clubs and the CBI investigation has started.


 * Vijay Hazare Cup Cricket Series: Tamil Nadu team set a world record.



2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education Sanctioning additional 254 posts of Post Graduate Teachers in the Academic year 2022-2023) ந.க.எண்:039965/ டபிள்யு2/ இ3/ 2019, நாள்: 21-11-2022...

 


>>> 2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education Sanctioning additional 254 posts of Post Graduate Teachers in the Academic year 2022-2023) ந.க.எண்:039965/ டபிள்யு2/ இ3/ 2019, நாள்: 21-11-2022...



>>> 2022-2023ஆம் கல்வியாண்டில் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள 254 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்  விவரம் (254 additional posts of Post Graduate Teachers in the Academic year 2022-2023)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி - ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு தொடர்பு எண்கள் - செய்தி வெளியீடு எண்: 2089, நாள்: 21-11-2022(Tamil Nadu Government Cable TV - Operators and Customers Contact Numbers for Technical Assistance - Press Release No: 2089, Dated: 21-11-2022)...

 


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி  ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப உதவிக்கு  கீழ்கண்ட  எண்களை தொடர்பு கொள்ளவும்...


>>> தமிழ்நாடு அரசு கேபிள் டிவி  - ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு  தொடர்பு எண்கள் - செய்தி வெளியீடு எண்: 2089, நாள்: 21-11-2022(Tamil Nadu Government Cable TV - Operators and Customers Contact Numbers for Technical Assistance - Press Release No: 2089, Dated: 21-11-2022)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.68, Dated: 21-10-2022) வெளியீடு (Anganwadi children will now be given 3 eggs per week - G.O.Ms.No.68, Dated: 21-10-2022 Released)...


>>> அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும் - அரசாணை (G.O.Ms.No.68, Dated: 21-10-2022) வெளியீடு (Anganwadi children will now be given 3 eggs per week - G.O.Ms.No.68, Dated: 21-10-2022 Released)...


அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மற்றும் சத்து மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவையும் அளிக்கும் பொருட்டு சிற்றுண்டி திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது.


அதனை தொடர்ந்து தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


அதில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.


இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


விலங்குகள், பறவைகள் படங்கள் - வண்ணம் தீட்டுதல் புத்தகம் (Animals, Birds Pictures - Colouring Book)...



>>> விலங்குகள், பறவைகள் படங்கள் - வண்ணம் தீட்டுதல் புத்தகம் (Animals, Birds Pictures - Colouring Book)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தும் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு- ஒன்றிய அரசின் நிதி துறை, சட்டத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs)...



 ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தும் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு- ஒன்றிய அரசின் நிதி துறை, சட்டத்துறை செயலாளர்கள் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs)...


₹2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு


₹8 லட்சம் வருவாய் பெறும் EWS பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந்தாதா - மனு


High Court Madurai Branch orders Union Government Finance Department, Law Department Secretaries to respond to case seeking ban on tax payment law for people with Annual income above Rs.2.50 lakhs... 


A case in Madurai High Court seeking an interim stay on the law requiring people with an annual income of more than ₹2.50 lakh to pay income tax. 


If EWS category earning ₹8 lakh is poor, does it not apply to others - Petition





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




25-11-2022 அன்று நவம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்புகள்: 1. பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் - 2.சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் உறுதிமொழி - 3. இந்திய அரசமைப்பு சட்டம் முகப்புரை...(School Management Committee - November Month Meeting to be held on (25-11-2022) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachments: 1. School Management Committee Meeting Events - 2. Children With Special Needs Pledge - 3. Constitution of India Preamble) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 21-11-2022...

 



>>> 25-11-2022 அன்று நவம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்புகள்: 1. பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - November Month Meeting to be held on (25-11-2022) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachments: 1. School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 21-11-2022...



>>> இணைப்பு: 2.சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் உறுதிமொழி (Children With Special Needs Pledge)...



>>> இணைப்பு: 3. இந்திய அரசமைப்பு சட்டம் முகப்புரை (Constitution of India Preamble)...



>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Final Answers

  கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - Learning Management System LMS - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - கட்டகம் 1 முதல் கட்டக...