கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance App - Version 3.0 - Download Link - Updated on 23-12-2022 - Size 6.72MB...



>>>> TNSED Attendance App - Download Link - Updated on 23-12-2022 - Version 3.0 - Size 6.72MB...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.


🪷 மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.


🪷 ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.


🪷 Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


🪷 ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.


🪷 உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.


🪷 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


🪷 புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


🪷 புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 


i) Do not log out from the app


ii) Do not click on the sync


iii) Do not clear the app data or app caches


மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


TNSED Attendance App - Download Link - Updated on 22-12-2022 - Version 2.0 - Size 6.72MB...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis



The attendance of students, teachers & all staff of School Education Department.


As part of the exercise to improve the efficiency of the various mobile applications and to simplify the update life cycle of various apps for the end user, the mobile based attendance has been separated from the main TNSED Schools app and deployed as a separate app on the play store. This will ensure better user experience and decreased number of updates for the staff of School Education Department, Government of Tamil Nadu.


What's new

Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.


01-01-2023 முதல் புதிய TNSED ATTENDANCE App பயன்படுத்தும் முறை - காணொளி (How to use New TNSED ATTENDANCE App from 01-01-2023 - Video) ...



>>> 01-01-2023 முதல் புதிய TNSED ATTENDANCE App பயன்படுத்தும் முறை - காணொளி (How to use New TNSED ATTENDANCE App from 01-01-2023 - Video) ...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும்  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.


🪷 மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.


🪷 ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.


🪷 Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


🪷 ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.


🪷 உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.


🪷 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


🪷 புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


🪷 புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். 


🪷 இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும் 


i) Do not log out from the app


ii) Do not click on the sync


iii) Do not clear the app data or app caches


மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இன்றைய (24-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (24-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 24, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




அஸ்வினி : இழுபறிகள் குறையும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : போட்டிகள் குறையும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 24, 2022



கூட்டு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். வாகன பயணங்களின்போது நிதானம் வேண்டும். மற்றவர்களை பற்றி கருத்துக்களை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




கிருத்திகை : நிதானம் வேண்டும். 


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 24, 2022



பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் மேம்படும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் அமையும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 


திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும். 


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 24, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.  நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவுபெறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : புரிதல் உண்டாகும். 


பூசம் : நெருக்கடிகள் குறையும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 24, 2022



பணிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த சூட்சுமங்களை அறிவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : காரியசித்தி உண்டாகும்.


பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள். 


உத்திரம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 24, 2022



பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை கூறவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையை பற்றிய கவலைகள் மனதில் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.


அஸ்தம் : கவலைகள் அதிகரிக்கும்.


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 24, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




சித்திரை : காலதாமதமான நாள்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


விசாகம் : இலக்கினை அடைவீர்கள். 

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 24, 2022



தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலருடைய அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : நெருக்கடிகள் குறையும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : சுபமான நாள்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 24, 2022



வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தற்காலிக செயல்பாடுகளில் எண்ணிய தனவரவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : காலதாமதம் குறையும். 


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 24, 2022



அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புத்திரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நண்பர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : இழுபறியான நாள்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும். 


அவிட்டம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 24, 2022



திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். லாபம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும். 


சதயம் : புரிதல் உண்டாகும். 


பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------



மீனம்

டிசம்பர் 24, 2022



திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் மேம்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.


ரேவதி : பொறுப்புகள் கிடைக்கும்.



பள்ளிகள் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (School Re-Opening - CoSE & DEE Joint Proceedings)...

 


>>> பள்ளிகள் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (School Re-Opening - CoSE & DEE Joint Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




*24.12.2022 முதல் 04.01.2023 வரை  தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு (1-5 வகுப்புகள்) விடுமுறை.

*2023 ஜனவரி 2,3,4 தேதிகளில் "எண்ணும் எழுத்தும்"  நடைபெறுவதால் 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

*02.01.2023 முதல் 4,5 வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி செல்லவேண்டும்.

*02.01.2023 முதல் ஆறு முதல் 12  வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளி செல்லவேண்டும்.

புதிய TNSED ATTENDANCE App அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல் செயல்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையர் CoSE & தொடக்கக்கல்வி இயக்குநரின் DEE இணை செயல்முறைகள் ந.க.எண்: 043443/ பிடி1/ இ1/ 2022, நாள்: 23-12-2022 (Implementation of New TNSED ATTENDANCE App for all Districts from 01-01-2023 - Commissioner of School Education (CoSE) & Director of Elementary Education (DEE) Joint Proceedings No: 043443/ PD1/ E1/ 2022, Dated: 23-12-2022)...


>>> புதிய TNSED ATTENDANCE App அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல்  செயல்படுத்துதல் - பள்ளிக்கல்வி ஆணையர் CoSE & தொடக்கக்கல்வி இயக்குநரின் DEE இணை செயல்முறைகள் ந.க.எண்: 043443/ பிடி1/ இ1/ 2022, நாள்: 23-12-2022 (Implementation of New TNSED ATTENDANCE App for all Districts from 01-01-2023 - Commissioner of School Education (CoSE) & Director of Elementary Education (DEE) Joint Proceedings No: 043443/ PD1/ E1/ 2022, Dated: 23-12-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல் - தமிழ்நாட்டில் உள்ள 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து விவரம் கோருதல் - கூட்டுறவுத்துறை பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை (April 2023 Co-operative Societies Election - Elections for about 4684 Co-operative Societies in Tamil Nadu decided to be held in April next year and Asking Details Registrar of Department of Co-operatives circular to all regional registrars) ந.க.எண் : 86373/ 2022/ கூதே1, நாள்: 22-12-2022...



>>> 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல் - தமிழ்நாட்டில் உள்ள 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்  நடத்த முடிவு செய்து விவரம் கோருதல் - கூட்டுறவுத்துறை பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை (April 2023 Co-operative Societies Election - Elections for about 4684 Co-operative Societies in Tamil Nadu decided to be held in April next year and Asking Details  Registrar of Department of Co-operatives circular to all regional registrars) ந.க.எண் : 86373/ 2022/ கூதே1, நாள்: 22-12-2022...



2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்

❥❥❥══════❥❥❥══════❥❥❥

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்..


அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியீடு..


கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.


பொருள்:

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


பழமொழி :

A true friend is the best possession

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து


இரண்டொழுக்க பண்புகள் :


1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.


 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "


பொன்மொழி :


ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்.


பொது அறிவு :


1. மிகப்பெரிய நீர் பறவை எது ? 


அன்னம்.


 2. பின்னோக்கி பறக்கும் பறவை எது?


ஹம்மிங் பறவை.


English words & meanings :


flea - a biting insect. noun. உண்ணி பூச்சி. பெயர்ச் சொல். flee - run away, verb ஓடிப் போதல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தச் செய்யும்.


NMMS Q


0.5,. 0.55, 0.65, 0.80, _______. 


a) 0.82 b) 0.9 c) 0.95 d) 1 


விடை: 1


நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே


ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.


அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...


ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.


உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.


மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன


இன்றைய செய்திகள்


23.12.22


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், இதனை ஜன.2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


* காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார்.


* சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


* நாகையில் இருந்து 600 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிச.25, 26-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


* 1.11 லட்சம் சைபர் கிரைம் வழக்கில் ரூ.188 கோடி மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்.


* ஆப்கன் பல்கலை.களில் பெண்கள் படிக்க தடை: தலிபான் உத்தரவுக்கு ஐ.நா. எதிர்ப்பு.


* எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.


* சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை ஷெரின் தங்கம் வென்றார்.


* பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.


* இந்தியாவில் முதன்முறையாக உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Today's Headlines


* On the occasion of the Pongal festival, the Tamil Nadu government has announced that Rs.1000 Pongal gift will be given to rice family card holders and this will be inaugurated by Chief Minister Stalin on January 2.


 * Environment Minister Siva V Meiyanathan said that quarries operating near reserve forests will be closed.


 * The consultation for Siddha, Ayurveda, Unani, and Homeopathy courses will start on 27th in Chennai.


 * Depression 600 km from Nagai: Chance of heavy rain in delta districts on Dec 25, 26.


 * A mutated Omicron virus that is spreading rapidly in China has been confirmed in 4 people in India.  Accordingly, intensive inspection has been ordered at international airports.


 * 1.11 lakh cybercrime case recovery of Rs 188 crore: Union Minister informs.


 * Ban on women studying in Afghan universities: Taliban orders UN  Resistance.


* Tedros Adhanom Ghebreyesus, the head of the World Health Organization, said that the unexpected increase in the spread of corona in China is worrying.


 * Chennai University Athletics: Loyola College's Sherin wins gold in women's 100m.


* The 7th 20-over cricket tournament for school teams will start on 26th in Tamil Nadu.


* For the first time India has been given permission to host the World Table Tennis Tournament.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...