கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (13-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 13, 2023



பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான போக்குகள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் நிலவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 




அஸ்வினி : அமைதி உண்டாகும். 


பரணி : பொறுமை வேண்டும்.


கிருத்திகை : மேன்மையான நாள்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 13, 2023



நீண்ட நாள் வைப்பு திட்டங்களை பற்றிய எண்ணம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு   


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும். 


ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : ஆசைகள் பிறக்கும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 13, 2023



வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடலில் தோன்றும் ஒருவிதமான சோர்வின் மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சோர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : குழப்பங்கள் குறையும். 


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 13, 2023



எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். சிறிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




புனர்பூசம் : மாற்றங்கள் பிறக்கும்.


பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 13, 2023



புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தொழில் சார்ந்த உதவி மற்றும் தனலாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : தனலாபம் அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 13, 2023



கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பயணங்களில் தகுந்த ஆவணங்களை கொண்டு செல்லவும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை செய்து முடிப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------



துலாம்


ஜனவரி 13, 2023



வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்துகொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.


சுவாதி : தெளிவு ஏற்படும்.


விசாகம் : திறமைகளை அறிவீர்கள்.

---------------------------------------



விருச்சிகம்


ஜனவரி 13, 2023



உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வசதிகளை பெருக்குவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு  


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


அனுஷம் : வசதிகள் மேம்படும்.


கேட்டை : அறிவு வெளிப்படும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 13, 2023



மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : சோர்வு நீங்கும். 


உத்திராடம் : அனுகூலமான நாள். 

---------------------------------------



மகரம்

ஜனவரி 13, 2023



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு அமையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.


அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 13, 2023



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 




அவிட்டம் : சேமிப்பு குறையும். 


சதயம் : புரிதல் அதிகரிக்கும். 


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 13, 2023



குழந்தைகளின் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். பொறுமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 




பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 103:


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.


குறள் விளக்கம்:


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.


பழமொழி :

A journey of a thousand miles begins with a single step


ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது



இரண்டொழுக்க பண்புகள் :


1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.


2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :


எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்? 


 ரீட்டா பிரியா.


 2. இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் யார்?


 ஜெனரல் கே. எம் .கரியப்பா.


English words & meanings :


hole - opening. noun. துளை. பெயர்ச் சொல். whole - entire. adjective. பெயரடைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


ஆளிவிதையை பாலுடன் கலந்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, இந்த பாலை வடிகட்டிக் குடிக்கலாம். வேண்டுமானால் ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.


NMMS Q


அண்டம் மற்றும் விண்மீன்களில் காணப்படும் மிக முக்கியமான தனிமங்கள்_________ 


விடை: H, He


நீதிக்கதை


சமாதானம் அவசியம்


காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.


இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.


மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.


இன்றைய செய்திகள்


13.01.2023


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.17 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.


* 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது.


* இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்.


* 2வது ஒருநாள்கிரிக்கெட் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.


* உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சரத்கமல், மணிகா தகுதி.


Today's Headlines


* On the occasion of Pongal, the Tamil Nadu government has announced that 1.17 lakh transport corporation employees will be given an 'achievement incentive' of Rs 7 crore.


* The Chennai Meteorological Center has reported that the Northeast Monsoon has receded over Tamil Nadu, Puduwai and Karaikal.


* Defense Ministry approves procurement of indigenously manufactured missiles worth Rs 4,276 crore


 * After 50,000 years a comet from outside our solar system will come close to Earth and the Sun.


*  Do not use India's AMBRONOL, DOK-1 Max cough medicine: World Health Organization.


*  2nd ODI: India beat Sri Lanka by 4 wickets to win the series.


 * India's Sarathkamal, Manika qualify for World Table Tennis Championship.


பள்ளிகளில் ஜனவரி மாதம் மாடர்ன் டைம்ஸ் சிறார் திரைப்படம் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Screening of Modern Times Juvenile Film in January in Schools - Instructions on Additional Procedures to be Followed - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 10-01-2023...



>>> பள்ளிகளில் ஜனவரி மாதம் மாடர்ன் டைம்ஸ் சிறார் திரைப்படம் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Screening of Modern Times Juvenile Film in January in Schools - Instructions on Additional Procedures to be Followed - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 10-01-2023...



>>> திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...



>>> பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...


6, 7, 8ஆம் வகுப்புகள் - பருவம் 3 - பாடத்திட்டம் - அனைத்துப் பாடங்கள் (Term 3 - Syllabus - 6, 7 & 8th Standard - All Subjects)...


>>> 6, 7, 8ஆம் வகுப்புகள் - பருவம் 3 - பாடத்திட்டம் - அனைத்துப் பாடங்கள் (Term 3 - Syllabus - 6, 7 & 8th Standard - All Subjects)...



புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...




>>> புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


பொருள்:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.


பழமொழி :

Don't judge a book by its cover.


 புறத்தோற்றம் கண்டு மயங்காதே


இரண்டொழுக்க பண்புகள் :


1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.


2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்


பொன்மொழி :


ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது


பொது அறிவு :


1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?


18 முறை. 


 2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ? 


 செவ்வாய்.


English words & meanings :


hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.


NMMS Q


IUPAC ன் விரிவாக்கம்_______________ 


விடை: International Union Of Pure And Applied Chemistry


ஜனவரி 12


தேசிய இளைஞர் நாள்


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.


1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.


நீதிக்கதை


ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்


ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.


அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.


மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.


அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.


அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.


இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.


இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.


விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.


விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.


இன்றைய செய்திகள்


12.01.2023


* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.


* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.


* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.


* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.


* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.


Today's Headlines


* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.


* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.


 * 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.


 * The central government informed that the new parliament building will be ready by the end of this month.


* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll. 


 * ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress


* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8th Pay Commission - Union Cabinet Approval - Expected Pay Hike (Fitment Factor) - Information

  8ஆவது ஊதியக்குழு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு (ஃபிட்மெண்ட் காரணி) - தகவல்கள் 8th Pay Commission - Union C...