கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

03-02-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (23-12-2022) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 01-02-2023...

 

  



>>> 03-02-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - February Month Meeting to be held on (03-02-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 01-02-2023...



>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡

நாள் - *வெள்ளிக்கிழமை* 

தேதி - *03/02/2023*

நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4:30*

 

*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*


காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்      

*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*

*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*

*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*

*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*

*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*


*    பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **


*வருகைப் பதிவு* -

 *தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்*


*வரவேற்பு*- தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்


*இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   

*திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*   


 *கூட்டப் பொருள் மீதான விவாதம்*

-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்

- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.

-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


*கூட்ட நிறைவு*

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.



 *அனைத்துவகை அரசு  பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு :*


(03-02-2023) இன்று நடைபெறும் *பள்ளி மேலாண்மை குழு(SMC)* கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை *TNSED parents app ல் login* செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்:


1. அதற்கு முன் திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.


 2. சக  ஆசிரியர்களுடன் கலந்துரையாடி  தகவல் பெறுதல் வேண்டும்.


3. இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு  எடுத்துக்கொள்ள வேண்டும்.


4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.


5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம்  செய்திட வேண்டும்.


6. 1372 அரசு   பள்ளிகளும் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை(School Development  Plan) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு  தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.


8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு  ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட  பள்ளிகளுக்கு  பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான  உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் *( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் )* தாங்கள் நிதி உதவி  கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.


10.நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் CSR மூலம்  பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி பெற TNSED parent app ல் SDP பதிவேற்றம் செய்வது நமது கடமை.


11.CSR  fund நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் வரும்  கனரா வங்கியில் SNA அக்கௌன்ட்( HM+SMC தலைவர் கொண்டு ) தொடங்கிட வேண்டும்.


11. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று  நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...

 

 

 

 கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...


 கனமழை காரணமாக இன்று (03.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


நாகப்பட்டினம் (பள்ளிகள் 1-8 வகுப்புகள்) 

தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

காரைக்கால் (பள்ளிகள்) 




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





EMIS Websiteல் ஒவ்வொரு ஆசிரியரின் IFHRMS Employee ID (Number)ஐ பதிவு செய்யும் வழிமுறை (Procedure for registering IFHRMS Employee ID (Number) of each teacher on EMIS Website)...



>>> EMIS Websiteல் ஒவ்வொரு ஆசிரியரின் IFHRMS Employee ID (Number)ஐ பதிவு செய்யும் வழிமுறை (Procedure for registering IFHRMS Employee ID (Number) of each teacher on EMIS Website)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (02-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

இன்றைய (02-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 02, 2023



திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


பரணி : ஆதரவு மேம்படும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 02, 2023



குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவின் மூலம் நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் 



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : அறிமுகம் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 02, 2023



மனதளவில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேவைகளை அறிந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை உண்டாகும். தடைபட்ட சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மிருகசீரிஷம் : குழப்பம் மறையும்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : தடைகள் விலகும்.  

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 02, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் குழப்பம் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



புனர்பூசம் : செலவுகள் உண்டாகும்.


பூசம் : குழப்பம் நீங்கும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 02, 2023



பூர்வீக சொத்துக்களின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் 



மகம் : சேமிப்பு அதிகரிக்கும். 


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 02, 2023



புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். சிக்கல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


அஸ்தம் : லாபம் கிடைக்கும்.


சித்திரை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 02, 2023



எதிர்பார்த்த சில பணிகள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பெரியோர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : தாமதம் உண்டாகும். 


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். 


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 02, 2023



இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அனுபவம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : குழப்பம் உண்டாகும். 


அனுஷம் : இழுபறியான நாள்.


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 02, 2023



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விரும்பியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மை ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூராடம் : சிக்கல்கள் குறையும். 


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 02, 2023



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : குழப்பம் நீங்கும். 


திருவோணம் : தேவைகள் நிறைவேறும். 


அவிட்டம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 02, 2023



மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எழுத்து தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.


சதயம் : அனுபவம் உண்டாகும். 


பூரட்டாதி : புதுவிதமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 02, 2023



தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். மனை விற்றல், வாங்கலில் லாபம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 116

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.


பொருள்:

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.


பழமொழி :

Face the danger boldly than live with in fear.

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 


2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :


தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.


பொது அறிவு :


1. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார் ?


 H.டேவி, 1808.


 2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? 


 F.ஹோலர், 1827.


English words & meanings :


when you bring ant from another country it is - import(+)ant - important 


ஆரோக்ய வாழ்வு :


இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட்டுகள் ஆபத்தான கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது.

இதிலுள்ள அல்லிசின் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதன் மூலம் இரத்த நாளங்களின் விறைப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 


NMMS Q


விடுபட்ட எண்ணைக் காண்க: 2,5,9,19,37, ?


 விடை: 75. 


விளக்கம்: 2x2+1 =5; 5x2-1 = 9; 9x2+1=19; 19x2-1=37; 37x2+1=75; 


 பிப்ரவரி 02


உலக சதுப்பு நில நாள் 


உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.


நீதிக்கதை


கல்வியின் பெருமை


பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.


ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார். 


ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும். 


என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.


என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.


நீதி :

மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். 


இன்றைய செய்திகள்


02.02.2023


* நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் என்று ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்.


* தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி.


* வங்கக்கடலில் புயல் சின்னம்: மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.


* மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


* 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.


* பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு.


* ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.


* ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்.


Today's Headlines


* Education is the best tool for sustainable development.  IIT Chennai Director Kamakody stressed that all countries should work together to create quality education at the G20 Education Conference.


 * Breakfast program across Tamil Nadu soon: Chief Minister Stalin assured.


 * Storm warning in Bay of Bengal: Fishermen banned from fishing in Gulf of Mannar.


* Union Budget 2023-24 Announces New One Time Saving Scheme for Women


* Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy has announced that Visakhapatnam will be the new capital of Andhra Pradesh.


 * Union Finance Minister Nirmala Sitharaman presented the budget for the financial year 2023-24 in the Lok Sabha yesterday.


* Death toll rises to 100 in Pakistan mosque blast. 


*   26 Indian sportsmen will be competing in the Asian Indoor Athletic meet.


 * ICC T20 ranking list : Indian cricketer Suryakumar Yadav set a new record. 


கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...

 

 

 கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...


 கனமழை காரணமாக இன்று (02.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

நாகப்பட்டினம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பட்ஜெட் 2023 - வருமான வரி உச்சவரம்பு மாற்றம் - உள்ளிட்ட முக்கிய தகவல்களின் தொகுப்பு (Budget 2023 - Income Tax Ceiling Change - A compilation of key information)...

பட்ஜெட் 2023 - வருமான வரி உச்சவரம்பு மாற்றம் - உள்ளிட்ட முக்கிய தகவல்களின் தொகுப்பு (Budget 2023 - Income Tax Ceiling Change - A compilation of key information)...


 பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்


பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள் - 2023-2024ஆம் நிதியாண்டு (2024-2025ஆம் மதிப்பீட்டு ஆண்டு):


0-3 லட்சம் - 0%

3- 6 லட்சம் - 5%

6- 9 லட்சம் - 10%

9-12 லட்சம் - 15%

12-15 லட்சம் - 20%

15 லட்சத்திற்கு மேல் - 30%


- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 



பட்ஜெட் 2023: வருமான வரி உச்சவரம்பு மாற்றம்


புதிய வருமான வரி திட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.


பழைய வருமான வரி திட்டத்தில் வரி செலுத்துவோருக்கான அடுக்குகள்:


0-3 லட்சம் - 0%

3- 6 லட்சம் - 5%

6- 9 லட்சம் - 10%

9-12 லட்சம் - 15%

12-15 லட்சம் - 20%

15 லட்சத்திற்கு மேல் - 30%


- நிதியமைச்சர் அறிவிப்பு.




விலை குறையும் பொருட்கள்!


லித்தியம் ஐயான் பேட்டரி இறக்குமதி வரி குறைப்பட்டுள்ளது. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைப்பு. இதனால் டிவி, செல்போன் மற்றும் மின்சார வாகனங்கள் விலை குறையும்.


சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மொபைல் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது. இதனால் இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு டெபாசிட் வரம்பு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளது.


பட்ஜெட் 2023: பிணையில்லா கடன்


ஏப்ரல் 1 முதல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும். அதற்கான ரூ. 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


- பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு



பட்ஜெட் 2023: தொழில்நுட்பம்!


5ஜி சேவைக்கான செயலிகளை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 100 ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.


செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கு 3 மையங்கள் தொடங்கப்படும்.


- பட்ஜெட்டில் அறிவிப்பு


மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்ற மத்திய மாநில அரசுகள் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.


இயற்கை விவசாயம்!


ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்து ஊக்குவிக்கப்படும்.


மின்னணு நீதிமன்ற 2ம் கட்டப்பணிகளுக்கு ரூ. 7000 கோடி ஒதுக்கீடு.


நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு. 


போக்குவரத்து துறைக்கு ரூ. 75,000 கோடி ஒதுக்கீடு.




சிகரெட் மீதான சுங்க வரி உயர்வு!


சிகிரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களும் விலை உயர்கிறது.  16 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என அறிவிப்பு


பட்ஜெட் 2023: நிதிபற்றாக்குறை


மொத்த ஜிடிபியில் நிதிபற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.


மனிதர்களால் மனிதக் கழிவுகள் அகற்றும் நிலை மாற்றப்பட்டு, நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை கொண்டுவரப்படும்.


கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் 100% இயந்திரங்களை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.


இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில்துறை தேவையையும் இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா மையங்கள்' அமைக்கப்படும். ஏஐ, கோடிங் உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.


சிறுதானியங்கள் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள மிகவும் உதவுகின்றன. அந்த வகையில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தினை ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.


பசுமை வளர்ச்சி: 2070 -க்குள் ஜிரோ எமிஷன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


வாலன்டரி செட்டில்மென்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


டிஜிட்டல் லாக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


5ஜி ஆப் டெவலப்மென்டுகளுக்கு 100 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்.


தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து, 4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.


வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமும் விவசாயிகளுக்கு ரூ.63 கோடி கடன் கொடுக்க திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த ஜன் விஷ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கான தேசிய தரவுகள் நிர்வாக கொள்கை கொண்டுவரப்படும்.


டிஜிட்டல் இந்தியா இலக்குக்கு கேஒய்சி நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும்.


டிஜிட்டல் தொடர்பான சேவைகளுக்கு பான் கார்ட் பொதுவான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.


அரசு ஊழியர்கள் தங்களின் திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்மயோகி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.


நகர மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுக்கும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.


மாநிலங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தேவையான கடன்களைப் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும்.


வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி மற்றும் விவசாயிகளுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு.


பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆதிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பு.


மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். மேலும் படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.


இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும்.


மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்" என அறிவிப்பு.



மத்திய பட்ஜெட் 2023 : 7  முக்கிய இலக்குகள்...

1.எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி


2.ஏழைகளின் முன்னேற்றம்


3.பசுமை வளர்ச்சி


4.பழங்குடியினர் மேம்பாடு.


5. விவசாயிகள், பெண்கள் வளர்ச்சி


6.இளைஞர்களின் எதிர்காலம்


7. உட்கட்டமைப்பு வளர்ச்சி.


விவசாயத் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும்..


மீனவர் நலனுக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு..


நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும்..


அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.


தோட்டகலைத்துறைக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு.


தனிநபர் வருமானம் 9 வருடங்களில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக அதிகரித்துள்ளது..


விவசாயத் துறையில் ஸ்டாட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு..


வரும் 2023-2024-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம்...


விவசாயக் கடன் வளர்ச்சி இலக்கு 20 லட்சம் கோடியாக உயர்வு.


இந்தக் கடன்கள் கால்நடை வளர்ப்பு, பால் சார்ந்த தொழில்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.


சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


4 மண்டலங்களில் 157 புதிய நர்ஸிங் கல்லூரிகள் அமைக்க திட்டம்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பாதால், இந்திய உலக நாடுகளின் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது..


ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கடைகோடி மக்களுக்கும் சேவை உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன என நிர்மலா  சீதாராமன் தெரிவித்துள்ளார். 


பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்" - நிர்மலா சீதாராமன் உறுதி!


உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா இருக்கிறது. இந்திய தனிநபர்களின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது.


பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கான வலிமையும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நிறைய வாய்ப்புகளையும் இந்தியப் பொருளாதாரம் கொண்டிருக்கிறது. தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.97 லட்சம் என இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.


11.74  கோடி வீடுகளுக்கு டாய்லெட்,


9.6 கோடி உஜ்வாலா கேஸ் கனெக்‌ஷன்,


47.5 கோடி ஜன் தன் வங்கிக் கணக்கு,


44.5 கோடி பேருக்கு காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


Income up to Rs 7 lakh will not be taxed. Only if you are under the New Tax Regime. 


Income Tax slabs announced


Tax rates under the Old Tax Regime will be


0-3 lacs - Nil

3-6 lacs will be 5%

6-9 lacs will be10%

9-12 lac lacs will be15%

above 15 Lac will be 30%


AMRIT KAAL பட்ஜெட் என்றால் என்ன?

அம்ரித் கால் என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பிரதமர் மோடி பயன்படுத்திவருகிறார். பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர்.


நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் 'அம்ரித் கால்' இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். அம்ரித் கால் என்றால் 'புதிய தொடக்கம்' என்று பொருள். இந்தியா @100 என்ற இலக்கை முன்வைத்து புதிய பாய்ச்சலுக்கு முன்னெடுக்கும் பட்ஜெட் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...