>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (08-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
இன்றைய (08-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 08, 2023
வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : சேமிப்பு அதிகரிக்கும்.
பரணி : ஆதாயம் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 08, 2023
பணி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். திடீர் திருப்பங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 08, 2023
எதிர்ப்புகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நவீன தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 08, 2023
வியாபாரம் ரீதியான பணிகளில் ஆதாயம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : ஆதாயம் மேம்படும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 08, 2023
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் அனுபவம் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முடிவுகளில் விவேகம் வேண்டும். மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 08, 2023
உத்தியோக ரீதியான பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
அஸ்தம் : மந்தமான நாள்.
சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 08, 2023
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 08, 2023
அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 08, 2023
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உயர்கல்வி சார்ந்த குழப்பம் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மூலம் : புரிதல் அதிகரிக்கும்.
பூராடம் : தடைகள் நீங்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 08, 2023
பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அனுசரித்து செல்லவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : நெருக்கடிகள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 08, 2023
மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 08, 2023
சிறு மற்றும் குறுந்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
பூரட்டாதி : திருப்தியான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
பொருள்:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை
பழமொழி :
Beauty without modesty is infamous.
பணிவில்லாத அழகு பாராட்டுப் பெறாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்
பொன்மொழி :
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
பொது அறிவு :
1. சென்னையின் முதல் பெண் மேயர் யார் ?
தாரா செரியன்.
2. முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கலம் எது?
ஆரியபட்டா.
English words & meanings :
A proud ant - arrogant
ஆரோக்ய வாழ்வு :
தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
NMMS Q
சர்வேஷ் புகைப்படத்தில் உள்ள நபரை காண்பித்து, " இவள் என் தந்தையின் மனைவியின் ஒரே மகனின் மகள்" எனக் கூறினார் எனில் சர்வேஷிற்கு புகைப்படத்தில் உள்ளவர் என்ன உறவு?
விடை: மகள்
பிப்ரவரி 08
சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்
சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.
நீதிக்கதை
அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்?
தன் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வரண்டது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன். ஒருவன் கிணற்றில் தண்ணீர் இரைத்து பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார்.
தாகம் தீர்த்த மகிழ்ச்சியில் முதியவர் தம்பி, எங்கும் வறட்சி நிலவுகிறதே, ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது. அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்றார். ஐயா, உழைப்பின் தன்மையை அதிர்ஷ்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.
அத்தனையும் என் உழைப்பு. அவ்வப்போது என் கிணற்றை தூர்வாரி பராமரிப்பு செய்ததால் இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை. விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான் இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியிருக்கிறது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும் என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக்கொடுத்து புறப்பட்டார்.
[07/02, 6:06 pm] Ammu: தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இன்றைய செய்திகள்
08.02.2023
* கரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
* நோய்களை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்.
* வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
* இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தகுதித் தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11 வரை நடக்கிறது.
* தொற்று நோய்களை எதிர்த்துப் போராட எஸ்சிஓ அமைப்பு நாடுகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு.
* இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
* துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர்.
* பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார்.
* தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது: அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
* இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது.
Today's Headlines
* Chief Minister M.K.Stalin has written to Prime Minister Narendra Modi urging him to take a one-time measure of relaxing the age limit for the candidates who were unable to write the civil service exams during the Corona pandemic period.
* Artificial Intelligence Technology for Accurate Diagnosis of Diseases: Introduced at Apollo Hospitals.
* Doctors cannot refuse to work in primary health centers citing lack of facilities: HC orders.
* Physical Fitness Eligibility Test for Constable Second Level Start: All over Tamil Nadu will be held till February 11.
* Union Minister calls on SCO countries to fight infectious diseases.
* Tejas, the Indian Navy's light combat aircraft, successfully landed for the first time aboard INS Vikrant on a trial basis.
* Turkey, Syria earthquake: Dutch researcher who predicted and warned 3 days in advance.
*Turkey's ambassador to India Frat Sunel said that India's assistance to earthquake-affected Turkey is commendable and that India is helping like a true friend.
*Sports competitions for Chief Minister's Cup have started across Tamil Nadu: Competitions will be held till the 24th for everyone to participate.
* India-Nepal women's international football match: It will be held in Chennai on the 15th and 18th.
பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Juvenile film of February ("Malli") - Proceedings of Commissioner of School Education regarding procedures to be followed while screening in Schools) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 02-02-2023...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations
மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...