கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC) கலந்துரையாடல் கூட்டம் - சிந்தனையில் மாற்றம்; சமூகத்தின் ஏற்றம் (School Management Committee Discussion Meeting for March on Inclusive Education Centers and Medical Camps for Children with Disabilities - Change in Thinking; The rise of society)...


>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC) கலந்துரையாடல் கூட்டம் - சிந்தனையில் மாற்றம்; சமூகத்தின் ஏற்றம் (School Management Committee Discussion Meeting for March on Inclusive Education Centers and Medical Camps for Children with Disabilities - Change in Thinking; The rise of society)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

03-03-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (03-03-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 01-03-2023...

 

 

  

>>> 03-03-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (03-03-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 01-03-2023...



>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் & மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம்...




>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.



⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡

நாள் - *வெள்ளிக்கிழமை* 

தேதி - *03/03/2023*

நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4:30*

 

*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*


காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்      

*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*

*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*

*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*

*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*

*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*


*    பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **


*வருகைப் பதிவு* -

 *தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்*


*வரவேற்பு*- தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்


*இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   

*திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*   


 *கூட்டப் பொருள் மீதான விவாதம்*

-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்

- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.

-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


*கூட்ட நிறைவு*

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.



 *அனைத்துவகை அரசு  பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு :*


(03-03-2023) இன்று நடைபெறும் *பள்ளி மேலாண்மை குழு(SMC)* கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை *TNSED parents app ல் login* செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்:


1. அதற்கு முன் திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான  கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.


 2. சக  ஆசிரியர்களுடன் கலந்துரையாடி  தகவல் பெறுதல் வேண்டும்.


3. இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு  எடுத்துக்கொள்ள வேண்டும்.


4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.


5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம்  செய்திட வேண்டும்.


6. 1372 அரசு   பள்ளிகளும் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை(School Development  Plan) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு  தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.


8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு  ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட  பள்ளிகளுக்கு  பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான  உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் *( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் )* தாங்கள் நிதி உதவி  கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.


10.நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் CSR மூலம்  பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி பெற TNSED parent app ல் SDP பதிவேற்றம் செய்வது நமது கடமை.


11.CSR  fund நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் வரும்  கனரா வங்கியில் SNA அக்கௌன்ட்( HM+SMC தலைவர் கொண்டு ) தொடங்கிட வேண்டும்.


11. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று  நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...


>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...



>>> முதல்வரின் அறிவிப்புகள் - Picture Cards...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...

 ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...



>>> பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு...







🛑🎤 *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் அறிவிப்புகள்*



📌 *மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.*


📌 *இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.*


📌 *ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.*



📌 *அரசின் நலத்திட்டங்களையும் மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


முதல்வர் அறிவிப்பு


மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது. 



மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.



மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.



உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.



அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.



இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இன்றைய (01-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (01-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 01, 2023



குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்புகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : புரிதல் உண்டாகும்.


பரணி : மாற்றங்கள் ஏற்படும்.


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 01, 2023



தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சில விஷயங்களில் அனுசரித்து செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.


ரோகிணி : முடிவுகள் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 01, 2023



உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை குறைத்து கொள்ளவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆதரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.


திருவாதிரை : மந்தமான நாள்.


புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 01, 2023



ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்கள் கைகூடும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நயமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 01, 2023



பேச்சுக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : ஆதாயம் ஏற்படும்.


பூரம் : தேடல் உண்டாகும்.


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 01, 2023



நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். வீண் செலவுகளால் மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திரம் : ஆதரவான நாள்.


அஸ்தம் : மேன்மை உண்டாகும்.


சித்திரை : மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 01, 2023



மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான வியூகங்களை கையாளுவீர்கள். மாமன்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 01, 2023



எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணைவரின் வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.


அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும்.


கேட்டை : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 01, 2023



சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மூலம் : ஒத்துழைப்பான நாள்.


பூராடம் : எதிர்ப்புகள் விலகும்.


உத்திராடம் : வரவுகள் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 01, 2023



மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 01, 2023



புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.


சதயம் : விருப்பம் நிறைவேறும்.


பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 01, 2023



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். இன்னல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : வருத்தங்கள் நீங்கும்.


உத்திரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் எண்: 136


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.


பொருள்:

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.


பழமொழி :

The early bird catches the worm 


முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 


2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :


ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.


பொது அறிவு :


1. கடித உரைகளை கண்டுபிடித்தவர் யார்? 


 பியர்சன்.


 2. ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்? 


 Dr. மன்மோகன் சிங்.


English words & meanings :


catheter - a flexible tube inserted into bladder to remove fluid. noun. medicine. சிறுநீர் நீக்க குழாய். பெயர்ச் சொல். மருத்துவம்


ஆரோக்ய வாழ்வு :


சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.


 மார்ச் 01


பாகுபாடுகள் ஒழிப்பு நாள்


பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது.


நீதிக்கதை


நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை


தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான். அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். அப்போது அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். ராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் சென்றான். 


அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. இராமா! போயும், போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? உடனே ராமனுக்கு ரோஷம் வந்து விட்டது. 


அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை பயன் படாது. என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். எப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா? முடியும், வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன் செய் பார்க்கலாம். என்றார். 


இருவரும் பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர். அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு சென்றார். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை நீருக்குள் தள்ளி விட்டுடான். அரசர் பதறினார். 


இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள். 


ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார். அரசர், இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா? என்றார். அரசர் வருத்தத்தோடு. அரசே! நோய்வாய்ப்பட்டு வயோதியான நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். 


இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் செலவும் இனி இல்லை. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது. எனவேதான் இப்படிச் செய்தேன். என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. என்றான்.


இன்றைய செய்திகள்


01.03.2023


* 1.50 கோடி பேர் ஆதாரை இணைக்கவில்லை; இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி.


* 5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள் என முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


* நீர்வாழ் உயிரினங்களின் நோய்களை கண்டறிய தேசிய அளவிலான கண்காணிப்பு திட்டம்: மத்திய அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.


* அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்.


* நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.


* ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்.


* வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.


* சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.


* சிறந்த ஃபிஃபா வீரர் விருது வென்றார் லயோனல் மெஸ்ஸி.



Today's Headlines


* 1.50 crore people have not linked Aadhaar;  No more time will be given: Minister Senthil Balaji.


*  Former space researcher VK Hariharan has said that Indians will also go to space in 5 years.


 * National Surveillance Program for Aquatic Diseases: Union Ministers Launch


 * Duty of Governor to accept recommendation of Cabinet: Supreme Court.


 * In the context of increasing heat wave across the country, the Central Health Department has written to the state governments to monitor the diseases caused by heat wave.


 * Chinese Foreign Minister arrives in India to participate in G20 summit.


*  Following North Korea's food shortages, President Kim has called for a drastic change in agricultural production.


 * Serbia's Novak Djokovic has topped Steffi Graf's record for 378 weeks at the top of the international tennis rankings.


*  Lionel Messi won the best FIFA player award.

 

 

இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர் (Individual) முன்னாள் மாணவர்கள் (Alumini / Alumini Association) வழங்கும் நிதி மற்றும் குறு/ பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (Corporate Social Responsibility) போன்ற எவ்வகை நிதி / ரொக்கம்/ பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதளம் (https://nammaschool.tnschools.gov.in/#/) வாயிலாக மட்டுமே அளிக்கப்படுவதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திடல் வேண்டும் - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் ந.க. எண்: 002/ ஆ6/ நஊப/ 2023, நாள்: 28-02-2023 (Any type of funds/cash/goods and services provided by individual alumni (Alumini/Alumini Association) and corporate social responsibility (Corporate Social Responsibility) for government schools in the future will be provided through our school's website. All Chief Educational Officers shall ensure that the provision is made only through https://nammaschool.tnschools.gov.in/#/) – Member Secretary's Proceedings No. No: 002/ A6/ NOP/ 2023, Dated: 28-02-2023)...

 


>>> இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர் (Individual) முன்னாள் மாணவர்கள் (Alumini / Alumini Association) வழங்கும் நிதி மற்றும் குறு/ பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (Corporate Social Responsibility) போன்ற எவ்வகை நிதி / ரொக்கம்/ பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதளம் (https://nammaschool.tnschools.gov.in/#/) வாயிலாக மட்டுமே அளிக்கப்படுவதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திடல் வேண்டும் - உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் ந.க. எண்: 002/ ஆ6/ நஊப/ 2023, நாள்: 28-02-2023 (Any type of funds/cash/goods and services provided by individual alumni (Alumini/Alumini Association) and corporate social responsibility (Corporate Social Responsibility) for government schools in the future will be provided through our school's website. All Chief Educational Officers shall ensure that the provision is made only through https://nammaschool.tnschools.gov.in/#/) – Member Secretary's Proceedings No. No: 002/ A6/ NOP/ 2023, Dated: 28-02-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

சமூக பங்களிப்பு நிதி (CSR) மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளம் வாயிலாக மட்டுமே பெற வேண்டும் என அதன் உறுப்பினர் செயலர் உத்தரவு....

☝️☝️☝️

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...