கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோள் (School Education Minister Mr. Anbil Mahesh Poyyamozhi's request to the HeadMasters)...





>>> தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோள் (School Education Minister Mr. Anbil Mahesh Poyyamozhi's request to the HeadMasters) - PDF File...



>>> தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வேண்டுகோள் - காணொளி (School Education Minister Mr. Anbil Mahesh Poyyamozhi's request to the HeadMasters - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு - 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (10th class student killed in clash in school premises - Case registered against 3 students - 3 Teachers Suspended)...

 


பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - 3 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு - 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் (10th class student killed in clash in school premises - Case registered against 3 students - 3 Teachers Suspended)...


திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.


திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 



இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி மாணவன் மௌலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.



இதில் படுகாயம் அடைந்த மௌலீஸ்வரனை பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.



மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் திருச்சி - நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அம்மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கவனக்குறைவாக இருந்த தலைமையாசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.










>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


28-02-2023ன் படி தமிழ்நாடு முழுவதும் 67,55,466 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (67,55,466 people registered and waiting for employment across Tamil Nadu As on 28-02-2023 - Tamil Nadu Government Notification)...



>>> 28-02-2023ன் படி தமிழ்நாடு முழுவதும் 67,55,466 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பு -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு (67,55,466 people registered and waiting for employment across Tamil Nadu As on 28-02-2023 - Tamil Nadu Government Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..


திருச்சி - முசிறி அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவர் மவுலீஸ்வரன் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இரங்கல் செய்தி வெளியீடு (School Education Minister Anbil Mahesh Poiyamozhi issued a condolence message regarding the death of Class 10 student Mauleeswaran in a clash between students at Balasamuthram Government Higher Secondary School near Musiri in Trichy District)...


>>> திருச்சி - முசிறி அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ஆம் வகுப்பு மாணவர் மவுலீஸ்வரன் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இரங்கல் செய்தி வெளியீடு (School Education Minister Anbil Mahesh Poiyamozhi issued a condolence message regarding the death of Class 10 student Mauleeswaran in a clash between students at Balasamuthram Government Higher Secondary School near Musiri in Trichy District)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..



பள்ளி மாணவர்களுக்கான ‘புன்னகை‘ பல் பாதுகாப்புத் திட்டம் - நந்தனம் பள்ளியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (Minister Anbil Mahesh launched 'Punnagai (Smile)' dental care program for school students in Nandhanam School)...

 பள்ளி மாணவர்களுக்கான ‘புன்னகை‘ பல் பாதுகாப்புத் திட்டம் - நந்தனம் பள்ளியில் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (Minister Anbil Mahesh launched 'Punnagai (Smile)' dental care program for school students in Nandhanam School)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..

ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...



 ரேசன் கார்டு தொடர்பான சேவைகளை செய்து தர, தமிழ்நாடு முழுவதும் இன்று (11-03-2023) குறைதீர் முகாம் அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது (Today (11-03-2023) Grievance camp is being held in respective area and Block Distribution Offices across Tamilnadu to provide ration card related services)...


பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர் முகாம் குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று சனிக்கிழமையில் நடக்கிறது இந்த முகாம் காலை 10 மணி முதல் 1-மணி வரை நடைபெறும்.


இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் மற்றும் இதர குறைபாடுகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவரிடம் வழங்கி தீர்வு பெறலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்றைய (11-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

இன்றைய (11-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 11, 2023



வாழ்க்கைத் துணைவருடன் அதிக நேரம் பொழுதை கழிப்பீர்கள். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றமும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். கூட்டாளிகளை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : புதுமை உண்டாகும். 


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 11, 2023



பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கடன் நிமிர்த்தமான சில இன்னல்கள் குறையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும். 


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 11, 2023



குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




மிருகசீரிஷம் : ஆர்வமின்மை குறையும்.


திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------



கடகம்

மார்ச் 11, 2023



புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.


பூசம் : மேன்மை உண்டாகும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 11, 2023



விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 11, 2023



வியாபார ரீதியான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். மனதை உறுத்திய சில கவலைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : ஆதரவு மேம்படும். 


அஸ்தம் : கவலைகள் நீங்கும்.


சித்திரை : புரிதல் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 11, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். எதிலும் தற்பெருமையின்றி செயல்படவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : நம்பிக்கை ஏற்படும்.


விசாகம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 11, 2023



சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். செல்வாக்கான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : தன்னம்பிக்கையான நாள்.


கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 11, 2023



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்புகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : தெளிவு பிறக்கும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 11, 2023



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 




உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : லாபம் மேம்படும். 


அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 11, 2023



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.


சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



மீனம்

மார்ச் 11, 2023



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




பூரட்டாதி : நெருக்கடியான நாள்.


உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.


ரேவதி : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...