கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NILP - 19-03-2023 அன்று நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு குறித்து முறைசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குனரின் கடிதம் (NILP - Letter from Director of Non-formal & Adult Education regarding Basic Literacy Assessment Test held on 19-03-2023)...


 NILP - 19-03-2023 அன்று நடைபெற்ற அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு குறித்து முறைசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குனரின் கடிதம் (NILP - Letter from Director of Non-formal & Adult Education regarding Basic Literacy Assessment Test held on 19-03-2023)...


அன்புள்ள அனைவருக்கும், 

மாலை வணக்கம். 

இன்று, மாநிலம் முழுவதும் 28848 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டது. 

4.80 லட்சம் கற்பவர்களின் இலக்கு இருந்தபோதிலும், 5.28 லட்சம் மாணவர்களை சேர்க்க முடிந்தது. அவர்களில், 5.274 லட்சம் மாணவர்கள் அந்தந்த மையங்களில் தங்கள் மதிப்பீட்டுத் தேர்வை எழுதினர். கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 587 கற்பவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. 

இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் அளித்த தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக உங்களுக்கும், DEO, APO, BEOக்கள், தலைமையாசிரியர்கள், DCகள், BRTEகள் மற்றும் ஆசிரியர்களின் குழுவிற்கும் எனது தனிப்பட்ட மற்றும் உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பின்தங்கிய/ குரலற்ற வயது வந்த எழுத்தறிவு இல்லாதவர்களுக்காக தங்கள் உன்னத சேவையை ஆற்றிய தன்னார்வலர்களுக்கு நான் ஒரு சிறப்புக் குறிப்பு/ நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல், இது நடந்திருக்காது. 

அட்டவணை வடிவில் மாவட்ட வாரியான செயல்திறனை இங்கே இணைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 

அன்புடன்,

டாக்டர் பி.குப்புசாமி 

இயக்குனர், 

முறைசாரா & வயது வந்தோர் கல்வி 

சென்னை-6.



Dear all, 

Good evening. 


Today, the Basic Literacy Assessment Test conducted in 28848 Centers across the state. 


Though, the target was 4.80 lakh learners, we were able to enroll as many as 5.28 lakh learners. Among them, 5.274 lakh learners took their assessment test in their respective centers. A total of 587 learners were unable to attend this test in Coimbatore, Dindigul and Vellore District. 


I would like to convey my personal and sincere thanks to you and your team of DEO's, APO, BEOs, Headmasters, DCs, BRTEs and Teachers for your continous support and co-operation you have extended all through these period. And I want to make a Special mention/ thanks to the volunteers who have rendered their noble service for the down-trodden/ voiceless adult Illiterates. Without your/ their support, this would not have happened. 


I have attached here, District wise performance in the tabular format. 


Thank you all. 


With Regards.

Dr. P. Kuppusamy

Director, 

Non-Formal& Adult Edn

Chennai-6.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.23 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 159

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.


பொருள்:

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.


பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.


பொது அறிவு :


1. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?


 கோலாலம்பூர் (மலேசியா ). 


 2. யூதர்களின் புனித நூல் எது? 


 டோராஹ்.


English words & meanings :


Illustrates - to give examples in order to understand easier. verb. எடுத்துக் காட்டுகள் உடன் உள்ள எளிய விளக்கங்கள். வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான பழம். இதில் ஏராளமான ஊட்டச்ச்ததுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கூடுதலாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கோடையில் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும்.


கணினி யுகம்


Ctrl + X


Cut the selected item.


Ctrl + C (or Ctrl + Insert)


Copy the selected item.



மார்ச் 13


உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.




நீதிக்கதை


கதை :

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 


சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 


ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 


அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 


முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 


சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 


இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 


நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.


இன்றைய செய்திகள்


13.03. 2023


* 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.


* மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டுள்ளது.


* ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.


* எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.


* தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.


* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு ஆகியோர் வெற்றி.


* உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்.


* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ரைபகினா, சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Finance Minister PDR Palanivel Thiagarajan is scheduled to present the financial statement for the financial year 2023-24 in the Legislative Assembly today at 10 am.


 * An early Pandyan era stone inscription dating back to the 9th century has been found in Periyakatlai village near Beraiyur in Madurai district.


 * A sniffer unit has been started in Hosur Forest Reserve to prevent forest crimes.


 * Tamil Nadu rains for 4 days - Meteorological Department Information.


*  Chinese threat persists at border - External Affairs Minister Jaishankar comments.


*  So far 13 people have been died in a powerful earthquake in the South American country of Ecuador.


 * Indian players Nitu Kanghas, Preeti, Manju won in the women's world boxing.


 * Indian team has moved up to 4th place in the world hockey rankings.


 * Indian Wells Tennis: Rybakina, Sabalenka advance to finals

 

 

எண்ணும் எழுத்தும் - புதிய சின்னங்கள் (Ennum Ezhuthum - New Logos)...



>>> எண்ணும் எழுத்தும் - புதிய சின்னங்கள் (Ennum Ezhuthum - New Logos)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நம்ம ஊரு பள்ளி (Namma School) திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள் (School Education Minister appeals to the public to help the Namma School project)...

 


>>>  நம்ம ஊரு பள்ளி (Namma School) திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள் (School Education Minister appeals to the public to help the Namma School project)...


பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...


அனைவருக்கும் வணக்கம்!

கல்வி என்பது நம் இரு கண்கள் போல. இவ்வுலகைக் காண, நம் புரிதலை வளர்த்துக்கொள்ள, புதிய மனிதர்களை சந்திக்க, புதிய புதிய இடங்களுக்குப் பயணப்பட  நம்மை கல்விதான் அழைத்துச் செல்லும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - பாடல் களம், படித்தல் களம், கதைக்களம், செயல்பாடு களம், பேச்சு மற்றும் தனி நடிப்புக் களம், வினாடி வினா களம், கலையும் கைவண்ணமும் களம், பொம்மலாட்டக் களம் - படங்கள் (Ennum Ezhuthum - Song Corner, Reading Corner, Story Corner, Activity Corner, Speech & Mono Acting Corner, Quiz Corner, Art & Craft Corner, Puppetry Corner - Picture Lables)...



>>> எண்ணும் எழுத்தும் - பாடல் களம், படித்தல் களம், கதைக்களம், செயல்பாடு களம், பேச்சு மற்றும் தனி நடிப்புக் களம், வினாடி வினா களம், கலையும் கைவண்ணமும் களம், பொம்மலாட்டக் களம் - படங்கள் (Ennum Ezhuthum - Song Corner, Reading Corner, Story Corner, Activity Corner, Speech & Mono Acting Corner, Quiz Corner, Art & Craft Corner, Puppetry Corner - Picture Lables)...



>>> எண்ணும் எழுத்தும் - பாடல் களம், படித்தல் களம், கதைக்களம், செயல்பாடு களம், பேச்சு மற்றும் தனி நடிப்புக் களம், வினாடி வினா களம், கலையும் கைவண்ணமும் களம், பொம்மலாட்டக் களம் - படங்கள் - மாதிரி 2 (Ennum Ezhuthum - Song Corner, Reading Corner, Story Corner, Activity Corner, Speech & Mono Acting Corner, Quiz Corner, Art & Craft Corner, Puppetry Corner - Picture Lables - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்


*தமிழ்

1. பாடல் களம் 

2. கதைக் களம்

3. படித்தல் களம் 

4. படைத்தல் களம்

5. செயல்பாட்டுக் களம் 



*English

1. Song corner 

2. Story corner

3. Reading corner

4. Activity corner

5. Craft corner


*கணக்கு

1. பாட்டுக் களம் 

2. கலையும் கைவண்ணம்

3. பொம்மலாட்டக் களம்

4. செயல்பாட்டுக் களம் 

5. வினாடி வினா 

6. பேச்சும் தனி நடிப்பும் .. 



  வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது   சில களங்கள்  பொதுவானதாக உள்ளது..


*வகுப்பறை களங்கள்

1. பாடல் களம் / song corner 

2. கதைக் களம்/ story corner

3. படித்தல் களம் / reading corner 

4. படைத்தல் களம் / creativity corner 

5. செயல்பாட்டுக் களம் / activity corner

6. கலையும் கைவண்ணமும் / 

Art and craft corner  

7. பொம்மலாட்டக் களம் / puppet corner 

8.  வினாடி வினா களம் / Quiz corner

9. பேச்சும் தனி நடிப்பும்.


10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium)...

 


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி - விழுப்புரம் மாவட்டம் (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium - Villupuram District)...



>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - தமிழ் வழி - கள்ளக்குறிச்சி மாவட்டம் (10th Standard - Mathematics - Guide for Slow Learners - Tamil Medium - Kallakkurichi District)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தங்களால் இயன்றவற்றை உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு விட்டுக் கொடுங்கள் - இன்றைய சிறுகதை (Give what you can to those who really need it - Today's Short Story)...


தங்களால் இயன்றவற்றை உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு விட்டுக் கொடுங்கள் - இன்றைய சிறுகதை (Give what you can to those who really need it - Today's Short Story)...


ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய தேர்வை நடத்தினார்.


அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.


இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டுத் தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.

அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.


அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.


பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ந்தார்.


எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க  " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து  காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய "தமிழ்ச்செல்வி"யின் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.


நீதி:

"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் / ஆசிரியரின் கடமையாகும். தங்களால் இயன்றவற்றை, உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்"






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...