கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய பொன்மொழிகள் (Mottoes of Today)...

 


📜📜📜📜📜📜📜📜📜📜📜📜📜


இன்றைய பொன்மொழிகள் (Mottoes of Today)...



🏀தோல்வியின் அடையாளம் தயக்கம்,

வெற்றியின் அடையாளம் துணிச்சல்.

துணிந்தவர் தோற்றதில்லை,

தயங்கியவர் வென்றதில்லை.



🏀எங்கே விழுந்தாயென பார்க்காதே, எப்படி வழுக்கினாயென பார்.



🏀நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.



🏀முன்நோக்கி செல்லும் போது கனிவாய் இரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவ நேரிடும்.



🏀ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்ப மாட்டார்கள்.



🏀யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு, உனக்கும் சேர்த்து.



🏀மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. அவை, நீ சேகரித்த நினைவுகள்!



🏀பயமில்லாமை தைரியமல்ல. பயந்த நேரங்களிலும் சரியாக செயல்படுவதே தைரியம்.



🏀எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.



🏀நாளைய மழை அறியும் எறும்பாய் இரு.

நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே!



🏀நீங்கள் நேசிக்க பட வேண்டும் என்றால் உங்களை முதலில் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.



🏀தனக்கு நேரக்கூடிய துன்பத்தை சமநிலையோடு பொறுத்துக்  கொள்கிறவனே பக்குவப்பட்ட மனிதன்.



🏀ஒரு செடி வளர்வதற்கான முழு ஆற்றலுடன் இருக்கும்போது காற்றும், மழையும், கடுமையான வெப்பமும் அதை என்ன செய்துவிடமுடியும்? 

துணிவும் அறிவும் கொண்ட உள்ளம் எந்த நிலையிலும் கலக்கமோ, குழப்பமோ அடையாது.



🏀ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்து மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.



⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நேர்மையின் ருசி - இன்றைய சிறுகதை (The Taste of Honesty - Today's short story)...


நேர்மையின் ருசி - இன்றைய சிறுகதை (The Taste of Honesty - Today's short story)...


 ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனார்.


ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தார்.


ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 


வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னார்.


அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தார். அவரால் முடியவில்லை.


தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னார்..


ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தார்.


அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவருடைய கண்கள் விரிந்தன. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.


அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தார்.


உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டார்.


பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நாமே வைத்து கொண்டால் என்ன? தாங்கள் அதிகமாக வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சமாகக் கொடுங்கள்" என மிகவும் வற்புறுத்தினார்.


வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் ஒட்டகம் விற்ற வியாபாரியைப் பார்த்து ஒப்படைக்கப் புறப்பட்டுப் போனார்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவர், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, "உங்கள் நேர்மையை நான் பெரிதும் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள்" என்று நீட்டினார்.


அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக் கொண்டே " உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்து கொண்டேன் " என்றார்.


உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினார்.


உடனே அந்த வியாபாரி -

" நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

*1. எனது நேர்மை.

*2. எனது சுயமரியாதை

என்றார்" கம்பீரமாக 

சிறிது கர்வமாகக் கூட -


*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.


*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.


நேர்மை கூட ஒரு போதை தான், அதை அனுபவித்து விட்டால், அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாது - ஆனால் மன நிம்மதி கிடைக்கும்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - ஆங்கில வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - English Medium)...

  


>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான கையேடு - ஆங்கில வழி (10th Standard - Mathematics - Guide for Slow Learners - English Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)...



 பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)...


1.ஒரு நபரின் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படாதபோது அது செயலிழந்துவிடும்.


2. ஏப்ரல் 1 முதல் எந்த ஒரு வங்கிகளும் உங்களால் கணக்கு புதிதாக தொடங்க முடியாது. 


3. ஏற்கனவே இருந்த வங்கிக் கணக்கில் உங்களது டெபிட் கார்டு வேலிடிட்டி முடிவடைந்து விட்டால் புதிய கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்


4.பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், மானியம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பெறுவது கடினம்.


5.பேங்கிலேயே அல்லது போஸ்ட் ஆபீஸ்லயோ, ஒரு நாளைக்கு50,000 ரூபாய்க்கு மேல் உங்களால் டெபாசிட் பண்ண முடியாது 


6.பான்-ஆதார் இணைக்கப்படாதபோது, ​​புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்பதால், பழையது சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ புதிய பான் கார்டைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.


7.வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்யவோ அல்லது செயல்படாத PAN கார்டுகளுடன் ITR ஐ கோரவோ முடியாது.

நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாது, மேலும் செயல்படாத பான் கார்டுகளுக்கு நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற முடியாது. TCS/TDS அதிக விகிதத்தில் பொருந்தும்.


8.அபராதமும் விதிக்கப்படும்


பான்-ஆதார் இணைப்பிற்கான விலக்கு வகையின் கீழ் யார் வருவார்கள்?


ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள்.


வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாத வரி விதிக்கக்கூடிய நபர்.


80 வயதுக்கு மேற்பட்டவர்கள் (சூப்பர் மூத்த குடிமக்கள்).


இந்திய குடிமக்கள் அல்லாத நபர்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for Class 10, 11 and 12 Public Examination)...

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for X, XI & XII Standard Public Examination)...



>>> 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு  - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the set of Sample Question Papers for 10th Standard Public Examination)...



>>> 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 1 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 1 of Sample Question Papers for 11th Standard Public Examination)...



>>> 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 2 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 2 of Sample Question Papers for 11th Standard Public Examination)...



>>> 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 1 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 1 of Sample Question Papers for 12th Standard Public Examination)...



>>> 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Model Question Papers) தொகுப்பு 2 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (The Directorate of Government Examinations has released the Set 2 of Sample Question Papers for 12th Standard Public Examination)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?)...



 தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?)



அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.?


அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்குப் படிப்பு தேவையில்லை என்று தானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?"


உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது.


பழமொழியின் உண்மையான அர்த்தம்:


அந்தக் காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.


இப்போது போல அந்தக் காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.


அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும்.


அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது  

ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும்.


அந்தக் காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து,


"நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவைத் தலையில் வைத்துக் கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகிப் போகும்.


ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்"


அப்படிக் கூறும் அறிவுரை தான்,


அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு? என்பது.


"அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி  பூ எதற்கு என்பது தான் மருவி படிப்பு எதற்கு என்றானது.


இப்படி எத்தனையோ பழமொழிகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு,இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவை குறித்தும், அவற்றின் உண்மையான அர்த்தம் குறித்தும் தொடர்ந்து காண்போம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு 31-03-2023க்குள் விண்ணப்பிக்கலாம் (Apply for Indian Air Force Agniveer Vayu Recruitment Exam by 31-03-2023)...

 இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு 31-03-2023க்குள் விண்ணப்பிக்கலாம் (Apply for Indian Air Force Agniveer Vayu Recruitment Exam by 31-03-2023)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Primary and Middle Schools - Manarkeni App - Use of Textbook Videos on Smart Boards - Instructing - Regarding - DEE Proceedings

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் ...