கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளிகள், ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு அறிவிப்புகள் (Announcements for Schools, Teachers & Students in Greater Chennai Corporation Budget)...



>>> பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளிகள், ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு   அறிவிப்புகள் (Announcements for Schools, Teachers & Students in Greater Chennai Corporation Budget)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

யாருக்கெல்லாம் ₹1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் த.நா.ச.பே. எண்: 011, நாள்: 27-03-2023 (Who will get ₹1000 Women's Rights Allowance - Chief Minister's explanation in the Legislative Assembly TNLA No: 011, Date: 27-03-2023)...



>>> யாருக்கெல்லாம் ₹1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் த.நா.ச.பே. எண்: 011, நாள்: 27-03-2023 (Who will get ₹1000 Women's Rights Allowance - Chief Minister's explanation in the Legislative Assembly TNLA No: 011, Date: 27-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...


 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் (Students appearing for 10th Standard Public Examination can download the Hall Ticket from today onwards)...


10ஆம் வகுப்பு தேர்வு- இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.



www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு - அரசாணை வெளியீடு (100 Day Work Scheme Wage Hike - Central Government Notification - G.O. Issued)...



100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு -  மத்திய அரசு அறிவிப்பு - அரசாணை வெளியீடு (100 Day Work Scheme Wage Hike - Central Government Notification - G.O. Issued)...


புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.


இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.331-ல் இருந்து ரூ.357 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரூ.231-ல் இருந்து ரூ.255 ஆகவும், பிஹார், ஜார்க்கண்டில் ரூ.210-ல் இருந்து ரூ.228 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.204-ல் இருந்து ரூ.221 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டுக்கு இந்ததிட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.281 வழங்கப்படுகிறது. வரும் 2023-24 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது 4.63 சதவீத உயர்வு ஆகும்.


ராஜஸ்தானுக்கு அதிக அளவாக 10.39% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா (2.2%),கர்நாடகா (2.27%), மணிப்பூர் (3.59%), அருணாச்சல பிரதேசம் (3.7%), நாகாலாந்து (3.7%), அசாம் (3.93%), தமிழ்நாடு (4.63%), புதுச்சேரி (4.63%)உள்ளிட்ட மாநிலங்களுக்கு 5 சதவீதத்துக்குகுறைவாகவே ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...



 பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...


சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். 


சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.


சென்னை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.


முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறு தீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் ஏப்ரல் மாதம் வரை மாலையில் சிறுதீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 இலட்சம் செலவில் வழங்கப்படும்.


3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


சென்னையில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.


பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-24:


10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில்,கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ்,ஐஐஎம்-பெங்களூர்,டெல்லி பல்கலைக்கழகம்)  அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.


10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்வு.


சென்னையில் பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்....


மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூபாய் 35 லட்சத்திலிருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிக்கப்படும்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...


டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றப் பேரவையில் விளக்கம் (TNPSC Exam Controversy - Minister Palanivel Thiagarajan explains in Legislative Assembly)...


தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்.


TNPSC தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருச்சி ஆசிரியர் இல்லம் - தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் - தொடர்பு எண்கள் & முகவரி (Trichy Teacher's Home - Rs.100/- per day only as accommodation rent - Contact Numbers & Address)...

 தமிழ்நாட்டின்  மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.


🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012.  நாள்-04.07.2017


🌟 மேற்காணும் செயல்முறைகளின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.


🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.


🌟 முகவரி:

ஆசிரியர் இல்லம்,

பிளாக் எண்.36,

கஸ்தூரி மஹால் சாலை,

கோ.அபிஷேகபுரம்,

திருச்சிராப்பள்ளி,

(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),

(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).



🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...