கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல் - 2023 பள்ளி நாட்காட்டி (School Diary April 2023)...



ஏப்ரல் - 2023 பள்ளி  நாட்காட்டி (School Calendar April 2023)...


*03-04-2023 -- திங்கள் -- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.*


*17-04-2023 -- 21-04-2023 வரை 1- 3 ஆம் வகுப்பு-- எண்ணும், எழுத்தும் SA தேர்வு*


*20-04-2023 --28-04-2023* *வரை 4 - 9 வகுப்புகளுக்கு* 

*மூன்றாம் பருவத் தேர்வு.

 ( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி)


*24-04-2023 -- 26-04-2023-- எண்ணும், எழுத்தும் பயிற்சி.*


*🌸அரசு விடுமுறை நாட்கள்


04-04-2023 - செவ்வாய் --- மகாவீரர் ஜெயந்தி.


07-04-2023 - வெள்ளி -- புனித வெள்ளி


14-04-2023 - வெள்ளி _ தமிழ் புத்தாண்டு


22-04-2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை


*🌸RL நாட்கள்


06-04-2023 -- வியாழன் -- பெரிய வியாழன்


18-04-2023 -- செவ்வாய் -- ஷாபே காதர்.


*🌸28-04-2023 -- வெள்ளி -- கல்வியாண்டு இறுதி வேலை நாள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்திய விமானப்படை - அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு (Indian Air Force - Online Application for Agniveer Vayu (Both Male & Female) under Agnipath Scheme - Notification Released)...



>>> இந்திய விமானப்படை - அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு (Indian Air Force - Online Application for Agniveer Vayu (Both Male & Female) under Agnipath Scheme - Notification Released)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2023 - School Morning Prayer Activities...

     

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 165

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.


பொருள்:

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்


பழமொழி :

Better be sure than sorry

வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.


2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்


பொன்மொழி :


தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.திருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றியை காணவேண்டும்.


பொது அறிவு :


1. கறுப்புச்சட்டம் என்று அழைக்கப்பட்டது எது?


 ரௌலட் சட்டம் . 


 2. இந்தியாவின் நைல் நதி எனப்படுவது எது? 


 கங்கை.


English words & meanings :


 leaners - people who are not fat and thin. My father is a leaner. மெலிந்து ஆரோக்கிய உடல் கொண்டவர். பெயரடை


ஆரோக்ய வாழ்வு :


அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கொழுப்புச்சத்து அதிகமில்லாத லீன் மீட் வகைகளை தேர்வு செய்வது நல்லது.


கடல் உணவுகள், ஆட்டிறைச்சி, சிக்கன் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 அதிகம். உடலில் ஏற்படும் வைடட்டமின் பி12 பற்றாக்குறை ஆபத்தைக் குறைப்பதோடு இதில் போதிய அளவு புரதச்சத்து, ஜிங்க், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருக்கின்றன. இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் உள்ளிட்டவற்றை தடுக்க உதவும்


கணினி யுகம்


Ctrl + Del - Cut selected item. Ctrl + Ins - Copy the selected item



மார்ச் 30


வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள் 


வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (About this soundகேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..


இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.


நீதிக்கதை


வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 


அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 


அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 


கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 


இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 


நீதி :


தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள்


30.03. 2023


* 2022-23-ஆம் ஆண்டில் 6.61 லட்சம் புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கல்: தமிழக அரசு தகவல்.


* ரூ.44 கோடியில் சென்னை குடிநீர் பணிகள், 8 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: நீர்வளத் துறையின் 12 அறிவிப்புகள்  வெளியீடு.


* கரூரில் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.


* நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரியவித்துள்ளது.


* இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.


* பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20: 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்.


* இந்திய தடகள சம்மேளனம் சார்பில் நடைபெற்ற  'இந்திய கிராண்ட்பிரி2'  தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  தமிழக வீராங்கனை அர்ச்சனா இரட்டை தங்கத்தை கைப்பற்றினார்.


* தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்: தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 2-வது முறையாக சாம்பியன்.


Today's Headlines


* 6.61 lakh new driving licenses to be issued in 2022-23: Tamil Nadu Govt.


 * Chennai drinking water works at Rs 44 crore, new barrages in 8 districts: 12 notifications issued by water resources department.


*  High Court orders submission of inspection report on illegal sand mining in Cauvery river at Karur.


* The Union Ministry of Health has informed that a new strain of Corona virus XPB1 virus is spreading in the country.


 * Union Aviation Minister Jyotiraditya Scindia has said that flying taxis will be in public use in India within the next 5 years.


 * A devaluation of the currency has led to a shortage of life-saving medicines in Pakistan.


 * T20 vs South Africa: West Indies won the series by 7 runs.


 * Tamil Nadu player Archana won the double gold in the 'Indian Grand Prix 2' athletics championship organized by the Athletics Federation of India.


 * National Table Tennis Championship Series: Tamil Nadu's Sathyan Gnanasekaran got champion for the 2nd time.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமனம் குறித்த அரசாணைகளின் தொகுப்பு (G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, Proceedings of the Director of School Education R.C.No. 11304/ WE/ 78, Dated: 01-09-1979, G.O.Ms.No. 1965, Dated: 18-10-1979, G.O.Ms.No. 731, Dated: 28-04-1981, G.O.Ms.No. 1312, Dated: 22-06-1982, G.O.Ms.No. 469, Dated: 25-03-1988, G.O.3(D).No. 25, Dated: 13-10-1988, G.O.Ms.No. 898, Dated: 26-05-1988, G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, G.O.Ms.No. 887, Dated: 05-06-1979 -Collection of G.O.s on Appointment of Assistant HeadMaster in Government High / Higher Secondary Schools)...

 

  • G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, 
  • Proceedings of the Director of School Education R.C.No. 11304/ WE/ 78, Dated: 01-09-1979, 
  • G.O.Ms.No. 1965, Dated: 18-10-1979, 
  • G.O.Ms.No. 731, Dated: 28-04-1981, 
  • G.O.Ms.No. 1312, Dated: 22-06-1982, 
  • G.O.Ms.No. 469, Dated: 25-03-1988, 
  • G.O.3(D).No. 25, Dated: 13-10-1988,
  • G.O.Ms.No. 898, Dated: 26-05-1988, 
  • G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, 
  • G.O.Ms.No. 887, Dated: 05-06-1979...


>>> அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் நியமனம் குறித்த அரசாணைகளின் தொகுப்பு (G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, Proceedings of the Director of School Education R.C.No. 11304/ WE/ 78, Dated: 01-09-1979, G.O.Ms.No. 1965, Dated: 18-10-1979, G.O.Ms.No. 731, Dated: 28-04-1981, G.O.Ms.No. 1312, Dated: 22-06-1982, G.O.Ms.No. 469, Dated: 25-03-1988, G.O.3(D).No. 25, Dated: 13-10-1988, G.O.Ms.No. 898, Dated: 26-05-1988, G.O.Ms.No. 887, Dated: 05-06-1979, G.O.Ms.No. 887, Dated: 05-06-1979 -Collection of G.O.s on Appointment of Assistant HeadMaster in Government High / Higher Secondary Schools)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை, பெண்களுக்கு தனி இருக்கைகள், விபத்தில் உதவுவோருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை - போக்குவரத்துத்துறை அமைச்சர் (50% fare concession in State Express Transport Corporation (SETC) buses, separate seats for women, Rs 5000 incentive for accident responders - Transport Minister)...



 போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது - சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் உறுதி.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை (50% fare concession from the 6th journey onwards for passengers booking more than 5 trips in a month on State Express Transport Corporation (SETC) buses)



இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.





சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.






பேருந்துகளில் பெண்களுக்கும் தனி இருக்கை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென 4 இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.


- சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


விபத்தில் உதவுவோருக்கு ரூ. 5000 ஊக்கத்தொகை"


* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 வழங்கப்படும்


* மத்திய அரசால் ரூ. 5,000 வழங்கப்படும் நிலையில், மாநில அரசு சார்பிலும் ரூ. 5,000 வழங்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்


சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சட்டப்பேரவையில் அளித்த பதில்:


போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது. 


அரசின் வழித்தடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுமே தவிர, தனியாருக்கு வழித்தடம் தரப்படவில்லை. 


உள்ளூர், நகர, கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 1.70 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். 


தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தினை நாட்டின் முதலாவது இடத்திற்கு கொண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது. 


கட்டணமில்லா பேருந்து மூலம் பெண் பயணிகள் ரூ.888 சேமித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது. 


மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


மின்சார செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்து கழக வாகனங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதன் எண்ணிக்கை 64.65%ஆக உயர்ந்துள்ளது. 


திருநங்கைகள் 14.66 லட்சம், மாற்றுத்திறனாளிகள் 1.93 கோடி, மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10.2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு (Announcement of Dates of Exhibitions in Botanical Gardens in Nilgiri District)...



 நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு (Announcement of Dates of Exhibitions in Botanical Gardens in Nilgiri District)...


ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்:


கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி மே 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும்.


நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. 


கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது.


மே 12,13,14 தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மே 13,14,15 தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது. 


மே 19,20,21,22,23 ஆகிய 5 நாட்களில் பிரசித்தி பெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மே 27, 28 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி நடக்கிறது.


- உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



UPI Payment Charges: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணம் - ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை பரிந்துரைந்துள்ளது NPCI...

 UPI Payment Charges: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்...




ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான  UPI/Wallet கட்டணங்களை பரிந்துரைந்துள்ளது NPCI

எரிபொருளுக்கு 0.5%, 

தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, 

பல்பொருள் அங்காடிக்கு 0.9%

Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக  கட்டணம் பரிந்துரை...


UPI Payment Charges: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்...


இனி 2000ரூபாய்க்கு மேல் UPI மூலம் வணிக பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இனி 2000ரூபாய்க்கு மேல் UPI மூலம் வணிக பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையை தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை சூடுபிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் உலகில் அதிகம் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை தொட்டது. அமெரிக்காவில் கூட இப்போது தான் வென்மோ போன்ற வற்றின் பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தை தொட்டது.


இப்போது நடைபாதையில் சாக்ஸ் விற்பதில் தொடங்கி பெரிய பெரிய மால்கள் வரை யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை சர்வ சாதாரணமாக கையாளப்படுகிறது. மற்றொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்துக்கும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது.


இதற்கிடையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் மாதம் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று நேஷனல் பேமென்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.


யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது - பேடிஎம்.


கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் கூறிய நிலையில் பேடிஎம் விளக்கம்.


யுபிஐ வழியாக ₹ 2,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்திருந்தது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: புல்லறிவ...