கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனவு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு (Kanavu Aasiriyar Results Published)...



 கனவு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு (Kanavu Aasiriyar Results Published)...



வழக்கம் போல emis.tnschools.gov.in 

என்ற இணையதளத்தில் தங்களின் 8 இலக்க User name & Password உள்ளீடு செய்து வலது மேல் மூலையிலுள்ள 3 கோடுகளை click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பசியே வெற்றியின் அடித்தளம் (தேவையே கண்டுபிடிப்பின் தாய் - இன்றைய சிறுகதை - Need is the mother of invention - Today's Short Story)...



பசியே வெற்றியின் அடித்தளம் (தேவையே கண்டுபிடிப்பின் தாய் - இன்றைய சிறுகதை -  Need is the mother of invention - Today's Short Story)...


     🐱 பசி 🐭


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.

மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.

அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.

உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!

ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.*

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.

ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்...

          👍👍👍👍👍💥💥






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கால அட்டவணை (Ennum Ezhuthum Training Schedule)...

 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கால அட்டவணை (Ennum Ezhuthum Training Schedule)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)...

 


தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)...


தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.


சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த விதிகள், அரசியல் சாசனம்  சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி,  பல்வேறு திருச்சபைகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.  அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான  ஐசக்மோகன்லால் , வக்கீல் காட்சன், மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், வக்கீல் அருள்மேரி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், 'கடந்த 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, உயர் நீதிமன்றத்தால். 1975-ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் கொண்டு வரப்பட்டுள்ளதாக  வாதிட்டனர்.


மேலும், 1975-ம் ஆண்டு உத்தரவை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியதாகவும், அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 1973-ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012-ல் உத்தரவிடப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.


இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளதையும், 1973-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நலனையும் சுட்டிக்காட்டி, புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் ஆண்டிற்கான புதிய இணைப்புகள் விவரம் (Ennum Ezhuthum - New Attachments Details for 2023-24)...

 எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் ஆண்டிற்கான புதிய இணைப்புகள் விவரம் (Ennum Ezhuthum - New Attachments Details for 2023-24)...


பார்வை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒளி பாடங்கள்


பாடநூலை முழுமையாக பயன்படுத்த வாய்ப்பு 


ஒவ்வொரு செயல்பாட்டிற்கான கற்றல் விளைவுகள்


படைப்பாற்றலுக்கான வாய்ப்பு 


பேச எழுத- இது எங்கள் நேரம்


மூன்று வகுப்புகளையும் இணைத்த பாடப்பொருள்


சிறகுகள் விரியட்டும் நிலை வாரியாக 


மூன்று வகுப்பிற்கான பாடநூல் இணைப்பு


கற்பித்தலுக்கான தோராயமான நாள்கள்..







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - தமிழ் - முதல் பருவம் - பயிற்சிக்கு தேவையான பொருட்கள் - நகல் எடுக்க வேண்டிய பாடநூல் மற்றும் பயிற்சி நூல் பக்கங்கள் (Ennum Ezhuthum - Tamil - First Term - Training Materials - Textbook and Practice book pages to be photocopied)...

 

>>> எண்ணும் எழுத்தும் - தமிழ் - முதல் பருவம் - பயிற்சிக்கு தேவையான பொருட்கள் - நகல் எடுக்க வேண்டிய பாடநூல் மற்றும் பயிற்சி நூல் பக்கங்கள் (Ennum Ezhuthum - Tamil - First Term - Training Materials - Textbook and Practice book pages to be photocopied)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை - 21-04-2023 - தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் (No Teacher Eligibility Test Required - 21-04-2023 - Dinathanti Daily Editorial)...



“ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு.


"ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும். கொரியாவில் ஒரு அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் உடையவர்கள்தான் ஆசிரியர்கள்' என்று புகழாரம் சூட்டினார்.


ஆக ஆசிரியர்களை எந்த சமுதாயம் போற்றுகிறதோ, அந்த சமுதாயம்தான் சிறந்த சமுதாயமாக இருக்கும், அந்த நாடுதான் வளர்ந்த நாடாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அத்தகைய ஆசிரியர் பணிக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், தகுதித் தேர்வில் தேறினால்தான் மட்டுமே முடியும் என்ற நடைமுறை இருக்கிறது. 2009ஆம் ஆண்டு இலவச கல்வி மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெறவேண்டுமானால், அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.


தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அறிவிக்கைப்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக்கான 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பும், 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர்கள் பி.எட். பட்டப்படிப்பும் பெற்று இருக்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்த தேர்வுகளை எழுதியவர்களில், முதல் தாள் தேர்வில் 14 சதவீதம் பேரும், 2-ம் தாள் தேர்வில் 6 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு பெறாத நிலையில் என்ன செய்வோம்? என்று அந்த ஆசிரியர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆசிரியர்களை பொறுத்தமட்டில், இந்த தகுதித் தேர்வு தேவையே இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஆசிரியர் கல்வியில் சேரும்போதே, பிளஸ்-2 அல்லது பட்டப்படிப்பு தேர்வுகளில் வெற்றி பெற்று, ஆசிரியர் கல்வியிலும் சேர்ந்து, அதிலும் பட்டயப்படிப்பு தேர்வு அல்லது பட்டப்படிப்பு தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் அரசு பள்ளிக்கூட பணியில் சேர வேண்டுமென்றால், மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இவ்வளவு தேர்வுகளை எழுதி தேர்வு பெறும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு என்பது தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும். எனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேவையே இல்லை என்ற கொள்கை முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுத்து தகுதித் தேர்வுக்கு 'டாட்டா' சொல்ல வேண்டும் என்பதே ஆசிரியர்கள் கருத்தாக இருக்கிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...