கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு அமைச்சரவை - அமைச்சர்கள் வரிசை மற்றும் அவர்களுக்கான துறைகள் - பொதுத் (சிறப்பு) துறை அரசாணை (நிலை) எண்.302, நாள்:11.05.2023 வெளியீடு (TamilNadu Cabinet - Inter-se-Seniority of Ministers and Subjects (Departments) - Public (Special) Department G.O.(Ms) No.302, Dated:11.05.2023)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TO BE PUBLISHED IN AN EXTRA-ORDINARY ISSUE OF THE TAMIL NADU GOVERNMENT GAZETTE DATED THE 11`" May, 2023
ABSTRACT
MINISTERS - Inter-se-Seniority of Ministers and Subjects - Orders -Issued.
PUBLIC (SPECIALS) DEPARTMENT
G.O.Ms.No.302, Dated:11.05.2023.
Sobakiruthu, Chithirai -28, Tiruvallurvar Aandu-2054
Read:
1. G.O.Ms.No.266, Public (Special-B) Department, Dated:07.05.2021
2. G.O.Ms.No.267, Public (Special-B) Department, Dated:07.05.2021
3. G.O.Ms.No.382, Public (Special -B) Department, Dated :12.07.2021
4. G.O.Ms.No. 795, Public (Special-B) Department, Dated:14.12.2022
5. G.O.Ms.No. 796, Public (Special-B) Department, Dated:14.12.2022
6. G.O.Ms.No.797, Public (Special-B) Department, Dated:14.12.2022
7. G.O.Ms.No.296, Public (Special -B) Department, Dated :09.05.2023
8. G.O.Ms.No.300, Public (Special-B) Department, Dated:11.05.2023
9. G.O.Ms.No.301, Public (Special'B) Department, Dated:11.05.2023
ORDER:
Consequent on the induction of the new Minister in the Council of Ministers and the allocation of subjects among the Ministers as ordered in the G.Os 8th and 9th read above, the inter-se-seniority of the Council of Ministers of Tamil Nadu and the subjects allocated to them are as below:
தமிழ்நாட்டில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம் - அமைச்சர்களின் துறை மாற்றம் - செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 11-05-2023 (Cabinet Reshuffle in Tamil Nadu Today 11.05.2023 - Ministers Department Change - Press Release No: 17, Date: 11-05-2023)...
*தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு.
*மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.
*மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.
*மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.
*மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education)...
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தகவல் (Block Educational Officer Promotion Counselling - Information from Director of Elementary Education):
*தொடக்கக் கல்வித் துறையில், நேற்று நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வில் அனைத்து காலிப்பணியிடங்களும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன.
*தற்போது தொடக்கக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் எதுவும் காலியாக இல்லை.
*கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் (Total Candidates called for counseling): 345
*கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட பணியிடங்கள் (Total number of vacant shown for counseling): 54
* நிரப்பப்பட்ட பணியிடங்கள் (order Taken): 54
* பதவி உயர்வு துறப்பு செய்தவர்கள் (Relinquished):152
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SSC, RRB, Banking, UPSC தேர்வுகளுக்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-05-2023 - செய்தி வெளியீடு எண்: 876, நாள்: 10-05-2023 (Last Date to Apply for Coaching for SSC, RRB, Banking, UPSC Exams under “Naan Mudhalvan” Scheme: 20-05-2023 - Press Release No: 876, Date: 10-05-2023)...
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர் 2022’ விருது - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023 ('Anbaasiriyar 2022' Award by 'Hindu Tamil Thisai' Newspaper - Last Date to Apply: 02/06/2023)...
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர் 2022’ விருது - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023 ('Anbaasiriyar 2022' Award by 'Hindu Tamil Thisai' Newspaper - Last Date to Apply: 02/06/2023)...
--------------------------------------
அ). அன்பாசிரியர் விருதின் தனித்துவம் யாது?
மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே ‘அன்பாசிரியர்’ விருது.
'இந்து தமிழ் திசை' நாளிதழும், தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களில், மாணவர்கள் மீது பேரன்பும், அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முதன்முதலில் 'அன்பாசிரியர்’ விருதை 2020-ல் வழங்கின.
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் 37 பேர், புதுச்சேரியும் சேர்த்து மொத்தம் 38 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்-2020’ விருது வழங்கப்பட்டது. இதுதவிர ‘அன்பாசிரியர்’ நூல் வெளியீடும் நடைபெற்றது. இந்த நூலின் நாயகர்களான முன்னோடி அன்பாசிரியர்கள் 50 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, கரோனா பெருந்தொற்று காலத்திலும் தங்களது இடைவிடாத ஈடுபாட்டின் வழியாகக் மாணவர்களுக்கு அன்பும் அறிவும் ஊட்டிய அர்ப்பணிப்பு மிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்-2021’ விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு ‘இந்து தமிழ் திசை’யிடம் அன்பாசிரியர் விருது பெற்ற பலருக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் கடந்த ஆண்டுகளில் கிடைத்தது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
அடுத்த கட்டமாக, ‘அன்பாசிரியர்-2022’ விருது வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது.
ஆ). யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள். தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம்.
இ). இணைய வழியில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
பின் வரும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
ஈ). அன்பாசிரியர் தேர்வு முறை
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழக மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ அலுவலத்தில் முதல்கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறும்.
ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும்.
தங்களிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை நேர்காணலுக்கு ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.
மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நடத்தப்படும்.
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் [ 38 + 1 ( புதுச்சேரி) ] 39 பேருக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும்.
உ). விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023
கூடுதல் தகவல்களுக்கு: திரு. டி. ராஜ்குமார் - 98432 25389
>>> விண்ணப்பிக்க வலைதள முகவரி (Website Address)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...