கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
விளக்கம்:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
பழமொழி :
சொல்வதை விட செய்வதே மேல்.
Example is better than precept
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும்.
- மால்கம் ஃபோர்ப்ஸ்
பொது அறிவு :
1. கடல்களின் எஜமானி என்று அழைக்கப்படும் நாடு எது?
இங்கிலாந்து.
2. காவல்துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு எது?
பிரிட்டன்
English words & meanings :
Ability - talent திறமை.
Abode - a living place வசிக்கும் இடம்
ஆரோக்ய வாழ்வு :
தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.
ஜூன் 14
சே குவேரா அவர்களின் பிறந்தநாள்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
June 14 - World Blood donor day
ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்
உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
நீதிக்கதை
பதினைந்து வயது சிறுவன் அவன். ஒரு மோசமான விபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டான். ஆனாலும் ஊனத்தை மீறி, எதை யாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் அவனுக்குள் எழுந்தது. அந்தப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு ஜூடோ குரு இருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவரும் புன்சிரிப்போடு அவனைப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டார். "இதுதான் உன்னுடைய முதல் பாடம்' என்று சொல்லி, ஒரு தாக்குதல் முறையைச் சொல்லிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் கடந்தன. அடுத்து..? குருவிடமே கேட்டான். “இந்த ஒரே வித் தையை முழுசாகக் கற்றுக்கொள்!" என்றார் குரு.
சில மாதங்களில் குரு இவனை ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு ரவுண்டுகளில் எதிராளிகளை சுலபமாக வீழ்த்தினான் சிறு வன். அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. மூன்றாவது சுற்றில் புகழ்பெற்ற இன்னொரு வீரனோடு அவன் மோத நேர்ந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் அடி வாங்கினாலும், அவன்தான் ஜெயித்தான்.
இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற ஒரு வீரனை சிறுவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மோசமாக அடி வாங்கி சிறுவன் செத்துவிடுவானோ' என்ற பயத்தில் நடுவரே சிறுவனை விலகிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் குரு, 'விடுங்கள்... அவன் ஜெயிப்பான்" என்றார். போட்டி ஆரம்பித்தது. ஒரு கையில்லாத சிறுவன்தானே என்று அந்த புகழ்பெற்ற வீரன் அலட்சியம் காட்ட, தன் வழக்கமான தாக்குதலில் அவனையும் வீழ்த்தினான் சிறுவன்.
கோப்பையோடு திரும்பும்போது சிறுவன் கேட்டாள்... "ஒரே ஒரு தாக் குதலை மட்டும் கற்றுவைத்திருக்கும் நான் எப்படி ஜெயித்தேன்?"
குரு சிரித்தபடி சொன்னார். “இரண்டு காரணங்கள்... ஒன்று, ஜூடோ விலேயே மிகக் கஷ்டமான ஒரு தாக்குதலை நீ நன்றாகக் கற்றிருந்தாய். இன்னொன்று, இப்படி நீ தாக்கினால் எதிராளி உன்னை மடக்க, உன் இடது கையைத்தான் வளைக்க வேண்டும்: அது உனக்கு இல்லை!"
பலவீனங்களையே பலமாக்கிக் கொண்டால், வெற்றி நிச்சயம்.
இன்றைய செய்திகள்
14.06. 2023
* விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
*தேசிய மருத்துவ தகுதி தேர்வு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை
*சீன எல்லைக்கு அருகே 2.6 பில்லியன் மதிப்பில் சுபன்சிரி நீர்மின் திட்டப் பணியை இந்தியா தொடங்குகிறது.
*மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் -
தமிழ்நாடு அரசு
*வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்.
*இந்தோனேசியா ஓப்பன் பேட்மிட்டன் பி.வி. சிந்து பிரனோய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.
*TNPL நடப்பு சீசனின் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
* Mr. Prbanjan, son of Mr. Jegadish, who is working as a social science teacher in Mel Olakur Government Higher Secondary School, Villupuram district, has secured 720/720 marks in the NEET exam results released today and topped the all India level.
*Chief Minister M.K.Stalin requested our Prime Minister Modi to quit the National Medical Eligibility Test
*India starts work on the Subansiri hydropower project worth 2.6 billion near the China border.
* Retired IPS officer Shakeel Akhtar appointed as State Chief Information Commissioner - Tamil Nadu Govt
* Vadachennai and Vallur thermal power stations have been repaired and 1100 MW power generation has started again.
* In Indonesian Open Badminton, P.V. Sindhu and Pranoi advanced to the second round.
* Coimbatore Kings beat Tirupur Tamilians by 70 runs in the first match of the current TNPL season.
தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் (Mutual Transfer applications) பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6413/ டி1/ 2023, நாள்: 12-06-2023 (Elementary Education - General Transfer Counseling for Teachers for the academic year 2023-2024 - All categories of Teachers working in Panchayat Union / Municipal / Government Primary and Middle School - Receipt of Mutual Transfer applications - Issuance of instructions - Regarding - Proceedings of Director of Elementary Education Rc.No: 6413/ D1 / 2023, Dated: 12-06-2023)...
நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...
நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம் (NEET 2023 Result Released - Tamilnadu Student Top)...
நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
>>> Press Release for Final NTA Score for NEET (UG) - 2023...
இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்பவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழ்நாட்டினர் ஆவர்.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி
தமிழ்நாடு மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு
விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு.ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
இவர் சொந்த ஊர் மேல்மலையனூர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது வசித்து வருகிறார்...
நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...
கனவு ஆசிரியர் நிலை - 2 தேர்வு முடிவு வெளியீடு - அறிந்து கொள்ளும் வழிமுறை (Kanavu Aasiriyar (Dream Teacher) Level – 2 Exam Result Release – How To Know)...
அன்புள்ள ஆசிரியருக்கு,
வாழ்த்துகள் ! கனவு ஆசிரியர் 2023 இன் 3ஆம் நிலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் பகுதி வாரியான மதிப்பெண் விவரங்கள் 15-Jun-23 அன்று EMIS போர்ட்டலில் கிடைக்கும். - TNSED
தாங்கள் கனவு ஆசிரியர் நிலை 2 தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் இது போன்ற குறுஞ்செய்தி தாங்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வரப்பெற்றிருக்கும்.
மேலும் நாளை மறுநாள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண் விவரங்களை EMIS வலைதளத்தில் தங்களது தனிப்பட்ட LOGINல் அறிந்துகொள்ளலாம்..
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
விளக்கம்:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
பழமொழி :
அலைபாயும் மனதால் எதையும் செய்ய இயலாது.
A rolling stone gathers no moss
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவை திறப்பதற்கான சாவியாகும்.
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.
பொது அறிவு :
1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12500.
2.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
தென்னாப்பிரிக்கா
English words & meanings :
derail - upset தடம் புரளுதல் abbreviation - to cut short வார்த்தைகளின் சுருக்கம்
ஆரோக்ய வாழ்வு :
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 டம்ளர் தண்ணீர் (உடலுக்கு ஏற்றப்படி) குடிப்பது நல்லதாகும்.
நீதிக்கதை
திருப்தி வேண்டும்
தெரு சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய் ஒரு நாள் கசாப்பு கடைப் பக்கம் சென்றது.
ஒரு கடைக்காரன் ஏமாந்திருந்த சமயமாகப் பார்த்து அவன் கடையில் வைத்திருந்த பெரிய ஆட்டுத் தொடையைத் தூக்கி வந்து விட்டது.
"இன்று எனக்கு அதிர்ஷ்ட காலம் போலும்! பெரிய இறைச்சித் துண்டு ஒன்று கிடைத்துவிட்டது. இதை யார் கண்களிலும் படாமல் தனியான ஓரிடத்தில் வைத்துச் சாப்பிடப் போகிறேன்" என்று தன் மனத்திற்குள் எண்ணியவாறு நாய் ஓடிக் கொண்டிருந்தது.
வழியில் ஒரு சிறு ஆறு இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு மரப்பாலம் ஒன்று போட்டிருந்தார்கள்.
நாய் மரப்பலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது தற்செயலாக
ஆற்று நீரைக் கவனித்தது.
ஆற்று நீரில் இறைச்சித் துண்டைக் கவ்வி இருக்கும் அதன் உருவம் பிரதிபலித்தது.
ஆற்றுக்குள் வேறொரு நாய் பெரிய இறைச்சித் துண்டு ஒன்றைக் கவ்வியவாறு நிற்பதாக நாய் நினைத்துக் கொண்டது.
அந்த நாயின் இறைச்சித் துண்டையும் பிடுங்கிக் கொண்டால் இரண்டு நாளைக்கு உணவைப் பற்றிக் கவலையே இல்லை என்று நாய் நினைத்துக் கொண்டது.
நீரில் தெரியும் நாயை மிரட்டித் துரத்த எண்ணிய நாய் வாயைத் திறந்து குரைக்கத் தொடங்கியது.
உடனே அதன் வாயிலிருந்து இறைச்சித் துண்டு ஆற்று நீரில் விழுந்து மிதந்து கொண்டே சென்று விட்டது.
உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் பிறர் பொருளுக்காகப் பேராசை கொண்டதன் காரணமாக நாய் கிடைத்த இறைச்சித் துண்டையும்
இழந்து ஏமாற வேண்டி வந்தது.
இன்றைய செய்திகள்
13.06. 2023
*ஜூன் 15-ல் கரையை கடக்கிறது பிபோர் ஜோய் புயல்.
*ஜூன் 15ஆம் தேதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு.
*சிறுவாணி, பில்லூர் அணைகளில் தூர் வாராததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
*ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.
*கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம்.
*திருத்தப்பட்ட விதிகளுடன் கோவையில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) கிரிக்கெட்.
Today's Headlines
* Pibor Joy cyclone crosses the seashore on June 15.
*Opening of multi-specialty Hospital is scheduled for 15th June.
*As there is no proper dredging in the dams there may be a risk of shortage of drinking water in Siruvani and Pillur dams.
*A GO is released to increase the monthly salary of sanitation guards working in rural areas.
*Cricketer Subman Gill was fined.
* Tamil Nadu Premier League (TNPL) cricket started yesterday in Coimbatore with revised rules.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings
01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...