கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.06.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 199


பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.


விளக்கம்:

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.



பழமொழி :

A good face needs no paints


அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை



இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :


நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்


பொது அறிவு :


1. பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் பெயர் என்ன?


விடை: சந்திரன்


2. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?


விடை: செவ்வாய்


English words & meanings :


Beaming-shining brightly, ஒளிரும். courteous - pleasant,மரியாதையான


ஆரோக்ய வாழ்வு :


யோகா வாரம் : நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமலும் நோய் இருந்தால் கட்டுக்குள் இருக்கும். முறையான பயிற்சி அவசியம்.


நீதிக்கதை


ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். அந்த ஓநாயை ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதனை இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ஏன், இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்? என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்தது ஆட்டுக்குட்டி. பார்த்த உடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? நாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும் என்று மெல்லிய குரலில் கேட்டது. பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிட்டால் யார் கலக்கியிருப்பார்கள்? உங்களை  எல்லாம் சும்மா விடக்கூடாது!" என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மௌனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.


இன்றைய செய்திகள்


22.06. 2023


*டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு டெல்லியில் நாளை ஆலோசனை.


*கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தண்ணீரில் அமர்ந்தபடி யோகாசனம் செய்த ராணுவ வீரர்கள்.


*மோசடி அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்.


*கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ் திரில் வெற்றி.


*கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிஸ் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Today's Headlines


* As DGP Shailendrababu retires on June 30, the selection of a new DGP will be held in Delhi tomorrow.


 *Soldiers did yoga, by sitting on water in Thiruvananthapuram, Kerala.


 *Introduction of the new feature in WhatsApp to avoid fraudulent calls.


 *Thriller win for Dindigul Dragons up to the last ball.


 * Kontaveit has announced her retirement from tennis with next month's Wimbledon Grand Slam in London.

 

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 இதழ் (Puthu Oonjal - 16-30 June 2023)...

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 இதழ் - Puthu Oonjal - 16-30 June 2023

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-30 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...


>>> Click Here to Download...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை


குறள் : 198


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.


விளக்கம்:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.



பழமொழி :

A friend in need is a friend indeed


ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்



இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.


பொன்மொழி :


ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். --சார்லஸ் டார்வின்


பொது அறிவு :


1. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காமல் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியும்?


விடை: ஒட்டகம்


2. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?


விடை: 300


English words & meanings :


 Jaundice -a medical condition in which the skin and white parts of the eyes become yellow. மஞ்சள் காமாலை.


Juridical - relating to judicial proceedings and the administration of the law.சட்டம் குறித்த சட்டம் சம்பந்தப்பட்ட


ஆரோக்ய வாழ்வு :


யோகா வாரம்:உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, நல்லசெயல் திறன் உண்டாகும். முறையான பயிற்சி அவசியம்.


ஜூன் 21


உலக இசை நாள்



உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.



பன்னாட்டு யோகா நாள்


பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]


ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். 


நீதிக்கதை


தள்ளாடி ஒரு முதியவர் தன்வீட்டு வாயில் வரை வருவதையும், வாயிலருகில் வந்ததும் ஒரு பேரிடி ஓசை கேட்டுக் கீழே வீழ்ந்ததையும் கண்டார். அவரை உள்ளே அழைத்துவர வாயிலுக்கு ஓடினார். பணி யாட்கள் உதவியுடன் உள்ளே கொணர்ந்து ஒரு அறையில் கிடத்தி அவருக்குச் சூடாகக் காபி கொடுத்தார். சிறிது நேரம் கழித்து முதியவர் கண் திறந்து பார்த்தார். அதற்குள் தமிழ் மகனும் அவரை அடையாளங் கண்டு கொண்டார். அவர் வேறு யாருமல்லர். தனக்கு இளமை யில் உதவிய பெரியவர்தான் என்பதை அறிந்து துணுக்குற்றார்! "ஐயா! தங்க ளுக்கு இந்த நிலை எவ்வாறு வந்தது?'' என வருந்தி வேண்டவே, அம்முதியவர் தமது கடைசி அறச்செயல் தமிழ் மகனுக்கு உதவியதுதான் என்றும், பின்னர், தீயோர் கூட்டத்தில் சிக்கி அறமற்ற செயல்களில் விரும்பி ஈடுபட்டு இந்நிலைக்குத் தள்ளப் பட்டதாகவும் கூறி முடித்தார். தமிழ் மகனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. "ஐயா! நீர் விரும்பிச் செய்த அறச் செயல் வீண் போகவில்லை என்றான்


இன்றைய செய்திகள்


21.06. 2023


*உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச சட்டங்களையும், பிற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்.


*சென்னையில் 295% அதிக மழைப்பொழிவு தற்போது 162 மி.மீ மழைப் பதிவானதாக சென்னை வானிலை மையம் தகவல்.


*சென்னைக்கான புதிய போக்குவரத்து திட்டம் 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு.


* ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களை சந்தித்தார் -  இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.


*உலகிலேயே முதன்முறையாக மாடல் வாரியாக கார்கள் வெளியிடும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு. சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்.


*ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியது.


Today's Headlines


* Prime Minister Modi emphasized that all countries of the world should respect international laws and the sovereignty of other countries.


 Chennai Meteorological Department informed that 295% more rainfall has been recorded in Chennai now with 162 mm of rain.


 *Decided to get feedback from 50,000 people on the new transport plan for Chennai.


 * Railway Minister Ashwini Vaishnav meets local people at the site of the train accident.


 *For the first time in the world, the Chinese government has published the carbon emissions of cars by model.  A program to create awareness among people about environmental pollution.


 *The first Test match of the Ashes series reached its final stage.

 

எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட FA(b) & (S.A.) அட்டவணை...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட வளரறி மதிப்பீடு-ஆ FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A.) அட்டவணை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அடிப்படை திறனாய்வு குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் புதிய செயல்முறைகள் ந.க.எண்: 2411/ F2/ 2021, நாள்: 20-06-2023 (Ennum Ezhuthum – Revised Formative Assessment for Schedule for Class 4 and 5 – FA(b) & Summative Assessment (S.A.) - Communication to All Government and Government Aided Schools on Basic Competency for Class V Students – New Proceedings of Director of State Council of Educational Research and Training, Date: 20-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Ennum Eluththum 4 & 5th std FA(B), SA TEST & Baseline Survey New Schedule...



10ஆம் வகுப்பு - கணக்கு - ஒரு மதிப்பெண் வினாத் தேர்வுகள் - 20 வினாத்தாள்கள் தொகுப்பு (10th Standard - Mathematics - One Mark Question Test - 20 Question Papers Set)...

 

>>> 10ஆம் வகுப்பு - கணக்கு - ஒரு மதிப்பெண் வினாத் தேர்வுகள் - 20 வினாத்தாள்கள் தொகுப்பு (10th Standard - Mathematics - One Mark Question Test - 20 Question Papers Set)...



>>> விடைக்குறிப்புகள் (Answer Key)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Students Pending Request for Online TC - EMIS Team Announcement...

 Students Pending Request for Online TC - EMIS Team Announcement...










>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS : Library Module சார்ந்த வழிகாட்டுதல்கள் (Instructions)...



EMIS : Library Module சார்ந்த வழிகாட்டுதல்கள் (Instructions)...


🖊️ TNSED Schools App - Library Module


🖊️ STEP 1 : School login ( user name : Udise code)


🖊️ Library icon - 3 Headings


Heading 1 - Book Stock

Heading 2 - Delivery Tracking

Heading 3 - Shelf Deleted books


*Heading 1 - Book Stock*

Click ➡️ View Added books

புத்தகத்தின் பெயர் தோன்றும்.


Edit பட்டனை கிளிக் செய்து no of copies, Grade மற்றும் புத்தகத்தின் பெயர் ஆகியவற்றை edit செய்து கொள்ளலாம்.


*குறிப்பு : 1. Shelf  creation - ல் சேர்க்கப்படாத புத்தகங்களுக்கு மட்டுமே delete icon தோன்றும்.


*2. Book Stock -ல் புதிய புத்தகங்களின் பெயர், புத்தகத்தின் எண்ணிக்கை, grade ஆகியவற்றை type செய்து add செய்து கொள்ளலாம்.


3. 🔎Search option பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பெயரை தேடி எடுக்க இயலும்.


4. *Damaged புத்தகங்களை deleted  செய்தல்:*


புத்தகத்தின் பெயருக்கு எதிரே உள்ள delete icon ஐ கிளிக் செய்தால் delete உரையாடல் பெட்டி தோன்றும். அதில் submit ஐ கிளிக் செய்தால்

*புத்தகத்தை நீக்குவதற்கான காரணம் கேட்கும்..*


1.Book Damaged

2.Book lost

3.Book Not Returned

4.Others 


மேலே உள்ள option- ல் உரிய option ஐ தேர்வு செய்து *Yes* கொடுத்தால்


புத்தகம் delete செய்வதை உறுதி செய்ய Reason for deleting book என்பதில் புத்தகத்தை delete செய்வதற்கான காரணத்தை மீண்டும் type செய்து submit செய்தால் deleted successfully என்று தோன்றும்.



*Heading 2 - Delivery Tracking* menu -ல்


🖊️ பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர்பட்டியல் தோன்றும்.

( வ.எண், புத்தகத்தின் பெயர், Received, Damaged)


குறிப்பு : 

Default ஆக received -ல் Yes என்றும்,


Default ஆக Damaged -ல் No என்றும் இருக்கும்.


 ஏதேனும் காரணத்தால் புத்தகம் பெறப்படவில்லை எனில் received -ல் No என்றும்,

புத்தகம் சேதம் அடைந்தால் damaged -ல் NO என்றும் மாற்ற இயலும்.


*குறிப்பு: உரிய மாற்றங்கள் செய்த பின் submit கொடுக்க வேண்டும்.*


*Heading 3 - Shelf Deleted books*


🖊️ வகுப்பு ஆசிரியர் login -ல் library shelf -ல் இருந்து நீக்கப்பட்ட புத்தகங்களின் பெயர் பட்டியல் இருக்கும்.

( வகுப்பு ஆசிரியர் பெயர், வகுப்பு, பிரிவு இருக்கும்)


🖊️ Delete option ஐ பயன்படுத்தி உறுதி. செய்த பின் delete செய்ய வேண்டும்.


( Delete option ஐ கிளிக் செய்தவுடன் 

are you sure? 

மீண்டும் ஒரு முறை கேட்கும்..


Yes என்பதை click செய்து உறுதி செய்ய வேண்டும்.


*Step 2 : வகுப்பு ஆசிரியர் login*


TNSED Schools App: 

(Username : class teacher 8 digit I'd)


Library Icon ➡️ click class➡️ click section➡️Shelf Creation


Shelf creation ல் இரண்டு option உள்ளது.


1.Auto shelf creation & Assign


2.Manual Shelf Creation


1.Auto shelf creation &

 Assign 

என்ற option ஐ கிளிக் செய்தால் ➡️ வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தானாகவே உருவாக்கப்பட்டு inserted successfully என்று தோன்றும்


2.Manual Shelf Creation - என்ற option ஐ கிளிக் செய்தால் 

Selected books, Available books in the library, Total students என்று திரையில் தோன்றும்..


*குறிப்பு :*

*Search menu ஐ பயன்படுத்தி புத்தகத்தின் பெயரை search 🔎 செய்து shelf creation செய்து கொள்ளலாம்.*


🖊️ ஒவ்வொரு புத்தகத்தின் பெயருக்கும் எதிரே enter number of feild இருக்கும்.( அதில் தேவைப்படும் எண்ணிக்கை பதிவிட வேண்டும்)


🖊️ *வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகங்களின் எண்ணிக்கையை தேர்வு செய்து create shelf ஐ கிளிக் செய்ய வேண்டும்.*


🖊️Book shelf உருவாக்கப்பட்டு inserted successfully என்று தோன்றும்.


🖊️வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக புத்தகங்களை சேர்த்து create shelf click செய்தால் books not equal to total students என்ற popup  தோன்றும்.


🖊️வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு கூடுதலாக புத்தகங்களை சேர்க்க முயற்சி செய்தால்   not able to add books என்ற popup  தோன்றும்.


🖊️Shelf creation செய்த பின் book issue என்ற menu தோன்றும்.


Book issue menu வை கிளிக் செய்தால் students list தோன்றும்.


அதில் ஒவ்வொரு மாணவர் பெயருக்கு நேரே புத்தகத்தின் பெயர் மற்றும் delete option இருக்கும்.


*குறிப்பு: மாணவர் பெயருக்கு நேரே உள்ள புத்தகத்தின் பெயர் தொலைந்து இருந்திருந்தாலோ அல்லது book entry தவறுதலாக இருக்கும் பொழுதோ மட்டுமே delete கொடுக்க வேண்டும்.*


🖊️அனைத்து விவரங்களை சரிபார்த்த பின் shuffle remaining/Assigning books என்பதை click செய்ய வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...