கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு 10-07-2023 முதல் அமல் (Increase in deed registration fee effective from 10-07-2023)...
இன்று முதல் அமலுக்கு வந்த பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு.. முழு விவரம் இதோ..!!👉
பத்திரப் பதிவுக் கட்டணம்..!!
📑 பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பதிவுக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
📑 புதிதாக அமலுக்கு வந்த பதிவுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!!
பதிவுக் கட்டணம்:
📑 தமிழ்நாட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
📑 இந்த பத்திரப் பதிவுகளுக்கு பதிவுக் கட்டணம் 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
📑 அதாவது, பதிவுச்சட்டம் 1908ன் பிரிவு 78இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும், சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரைக் கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
📑 அந்த வகையில் ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும்,
📑 குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்,
📑 அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும்,
📑 தனி மனை பதிவு கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
📑 மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு ரூ.10,000 என்பதை சொத்தின் சந்தை மதிப்புக்கு 1%எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ FA (b) ஒத்திவைக்கப்பட்டுள்ளது (Formative Assessment B for Class IV & V Class - 1 (1.1 - 1.6) & (1.1) of Science & Social Science which was to be held on Wednesday (12-07-2023) has been postponed)...
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ FA (b) ஒத்திவைக்கப்பட்டுள்ளது (Formative Assessment B for Class IV & V Class - 1 (1.1 - 1.6) & (1.1) of Science & Social Science which was to be held on Wednesday (12-07-2023) has been postponed)...
IV-V TEACHER FA(B) REGARDING
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) க்கான வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-07-2023 ஆம் தேதி முதல் தமிழ் , ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்தில் கட்டகம்- 2 மற்றும் அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) மற்றும் கட்டகம் -2 (1.7 - 1.11) & (1.2) ஆகியவற்றுக்கான வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வரும் கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி வரும் வாரங்களில் நடைபெறும். நன்றி.
TEALS (Technical Education And Learning Support) திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் Microsoft நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் சந்தித்து, அமெரிக்க நாட்டு பயணத்தின் போது தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS (Technical Education And Learning Support) திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் Microsoft நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணி - சிறப்புப் பணி அலுவலரின் சுற்றறிக்கை எண்: 01, நாள்: 09-07-2023 (Kalaignar Magalir Urimai Scheme Application Registration Work for Illam Thedi Kalvi Volunteers - Special Duty Officer's Circular No: 01, Dated: 09-07-2023)...
மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...
⚡1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்
⚡2. வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி
விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு...
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும்.
இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து தன்னார்வலர்களுக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
🌸🌸🌸தமிழக அரசின் புதிய திட்டமான 💐💐💐 *கலைஞர் மகளிர் உரிமை திட்டம்* 💐💐💐நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளர்களை பதிவு செய்யும் முழு பணியும், நமது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் தங்களது விருப்பத்தையும், தங்களது விபரங்களையும் மேற்கண்ட *Google form* ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*இந்த திட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த விபரங்கள்*
📌 குறைந்தபட்சம் *10 நாட்களுக்கு* முகாம்களில் அமர்ந்து பயனாளிகளின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
📌 வேலை நேரம் ஆனது *காலை 9:30 முதல் மாலை 5 மணி* வரை .
📌இந்தப் பணியை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் குறிப்பிட்ட *ஊக்கத்தொகை* வழங்கப்படும்.
📌 ஒவ்வொரு தன்னார்வலரும் அதிகபட்சம் *பத்து நாட்களில் 500 பயனாளர்களை* பதிவுகள் வரை செய்ய வேண்டும்.
📌முகாமானது உங்கள் பகுதியில் உள்ள *அரசு பள்ளி கட்டிடம்* அல்லது *ஊராட்சி மன்ற அலுவலகம்* அல்லது *பொதுவான ஒரு அரசு கட்டிடத்தில்* நடைபெறும்.
📌 இந்த முகாம்களில் உங்களுக்கு போதுமான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.
📌 இந்தத் திட்டமானது *உயர்திரு.மாவட்ட ஆட்சியரின்* நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற உள்ள திட்டம். எனவே தங்களுக்கு தகவல் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்படும்.
📌 இந்த பதிவை மேற்கொள்வதற்கு தங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அரசின் மூலமாக வழங்கப்படும். இதில் தங்களது கைபேசியை இணைத்து பதிவை மேற்கொள்ள வேண்டும். எனவே தங்களது கைபேசியில் பயன்படுத்தப்படும் சார்ஜரின் அமைப்பு *B-TYPE or C-TYPE* என்பதை பதிவு செய்ய வேண்டும்.
*இல்லம் தேடிக் கல்வி*
*மாவட்டக் குழு. திருப்பூர்*
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...