கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :256


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.


விளக்கம்:


புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.


பழமொழி :

Cast no pearls before swine


கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


ஒரு ஆசிரியருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அவரது மாணவர் பாராட்டப்படும்போது. – சார்லோட் ப்ரான்ட்


பொது அறிவு :


1. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?



விடை: பி.டி. உஷா


2. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?


விடை: டேவிட் ஜசன் ஹோவர்


English words & meanings :


 bee master - தேனீ வளர்ப்பவர்

 laird- a person who owns large estate பரந்த நிலப்பகுதிக்குச் சொந்தக்காரர்


ஆரோக்ய வாழ்வு : 


சோம்பு: தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும்  செயல்படும்.


செப்டம்பர் 08


அனைத்துலக எழுத்தறிவு நாள் 


அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்[1] செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..


நீதிக்கதை


எண்ணப்படி தான் வாழ்வு |


 ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான்.


ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான். 


என்ன ஆச்சரியம்! அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான்.நினைப்பதெல்லாம் நடக்கின்றதே இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான். 


மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா  இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்து நம்மை கொன்று விட்டால் என்னவாகும்?” என்று நினைத்தான். 


மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றி அவனை கொன்று விட்டது. 


நீதி : நம் எண்ணத்தின் படி தான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


08.09.2023


*திருவொற்றியூரில் ரூ. 58 1/2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்.


* கோத்தகிரியை சேர்ந்த படுகர் சமுதாயத்தின் விமான பைலட்டாகி சாதனை.


*பூமி நிலவுடன் செல்ஃபி.... கலக்கும் ஆதித்யா L1.


* கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு.


* உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு.


* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* In Thiruvotiyur Rs.  58 1/2 Crore High Level Flyover: Inaugurated by Chief Minister.


 * Achievement of becoming an airplane pilot from Badukar community of Kotagiri.


 *Selfie with earth and moon.... Blending Aditya L1.


 * Crude oil price hike: Petrol, diesel prices likely to increase.


 * Netherlands Team has been announced for World Cup Series.


 * US Open Tennis: Algaras advances to semifinals.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Integration of Alumni with School - Deadline for uploading on website extended to September 30 - State Project Director Proceedings)...


 முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Integration of Alumni with School - Deadline for uploading on website extended to September 30 - State Project Director Proceedings)...


>>> Click Here to Download SPD Proceedings...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools App New Version: 0.0.82 - Updated on 07-09-2023 - Ennum Ezhuthum Module Changes & Bug Fixes & Performance Improvements...

 

 

TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum Module Changes....

*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  07 SEPTEMBER - 2023


*_Version: Now 0.0.82


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


 பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


>>> 07-09-2023 டிட்டோஜாக் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Click Here to Download TETOJAC Resolutions - PDF...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,

 இன்று மாலை சரியாக 5:45 முதல் 7:00 மணி வரை டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் இணையவழிக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில தலைவர் ரக்ஷித் பங்கேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்ய பி.எட்., மாணவர்கள் பயன்படுத்த மாட்டோம் என்ற தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாக இன்றைய தினம் ஆங்காங்கே பி.எட்., மாணவர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்கள் தலைமையில் மதிப்பீடு நடைபெற்றது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் எதிர்ப்பும், திருப்பி அனுப்பிய நிலையும் ஏற்பட்டது. சில இடங்களில் அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுடன் மீண்டும் அப்பள்ளிக்கு சென்று மதிப்பீடை முடித்துள்ளனர் என்ற தகவலும் தரப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க உயர் மட்ட குழு உறுப்பினர்களும் ஒத்த கருத்துடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்வதில் பி எட் மாணவர்கள் பயன்படுத்துவதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த பணிகளில் ஆண்ட்ராய்டு TNSED ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதின் காரணமாக ஏற்படும் பணிச்சுமையையும் அதன் காரணமாக கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதையும் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் திங்கள் மாலை மேற்கண்ட இரு முக்கிய கோரிக்கைகள் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் மாலை 5 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. நம் இயக்கப் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில இணை துணை பொறுப்பாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஆர்ப்பாட்டம் வெற்றியடைய அயராது பாடுபட அன்புடன் அழைக்கிறோம் நன்றி...


------

           *💥டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்:*

       *💥டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.*

     *💥11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.*

*💥பிரதானமான கோரிக்கைகள்:*

*♦️(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.*

*♦️(2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.*

*♦️(3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.*

*♦️(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.*

*♦️(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.*

      *💥மாபெரும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்று கோரிக்கைகளை வென்றெடுத்து தன்மானம்,சுயமரியாதையை மீட்டெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள தயாராவோம்!*

       *💥ஆர்ப்பாட்ட களம் நோக்கி ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!.*

           சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்சி (காணொளி) - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி (Driverless Taxi in America (Video) - Science and Technology Development - Car without Driver)...



 அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்சி (காணொளி) - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி (Driverless Taxi in America (Video) - Science and Technology Development)...


>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3756, Dated: 07-09-2023) வெளியீடு (Transfer of I.A.S., Officers including District Collectors - Ordinance (G.O.Rt.No.3756, Dated: 07-09-2023) Issued)...


  மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3756, Dated: 07-09-2023) வெளியீடு (Transfer of I.A.S., Officers including District Collectors - Ordinance (G.O.Rt.No.3756, Dated: 07-09-2023) Issued)...


>>> Click Here to Download G.O.Rt.No.3756, Dated: 07-09-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken

  தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி "உடனடிய...