கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...



 ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...


தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ஆம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.


சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது.  2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.


2009-ஆம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுடன்  பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே  அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200  என்பது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க  அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது. இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு   2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை  ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும்.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக  அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)...

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)... 


புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை.


மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல்.


ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை.


தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை.


புதுக்கோட்டையில் முடி வெட்ட சொன்னதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாரதி சஸ்பெண்ட் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.






தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...

 

 தமிழ்நாட்டில் 4 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3980, Dated: 25-09-2023 - IAS Officers Transfer) வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.3980, Dated: 25-09-2023...



சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ்;


தொழில்துறை ஆணையராக எல். நிர்மல்ராஜ் ஐஏஎஸ்;


சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக அர்ச்சனா பட்நாயக்  ஐஏஎஸ், நியமனம்!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 070833/ சி5/ இ4/ 2019, நாள்: 23-09-2020 (Proceedings of the Director of School Education regarding duties to be followed and records to be maintained by Physical Education Teachers / Directors of Physical Education in Schools Rc.No: 070833/ C5/ E4/ 2019, Dated: 23-09-2020)...


பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 070833/ சி5/ இ4/ 2019, நாள்:  23-09-2020 (Proceedings of the Director of School Education regarding duties to be followed and records to be maintained by Physical Education Teachers / Directors of Physical Education in Schools Rc.No: 070833/ C5/ E4/ 2019, Dated: 23-09-2020)...


>>> Click Here to Download DSE Proceedings...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2023 - தேர்வுக் கட்டணம் செலுத்துச் சீட்டு E-Challanல் செலுத்துதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் ந.க.எண். 012929 /டி (3) / 2023, நாள்: 22.09.2023 (TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE)...


தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2023 - தேர்வுக் கட்டணம் செலுத்துச் சீட்டு E-Challanல் செலுத்துதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் ந.க.எண். 012929 /டி (3) / 2023, நாள்: 22.09.2023 (TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE)...



>>> Click Here to Download DGE Instructions...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : தவம்


குறள் :267


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.


விளக்கம்:


நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.


பழமொழி :

Delay is dangerous


தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி.



பொன்மொழி :


பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார் 


பொது அறிவு :


1. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆப்பிரிக்கா 


2. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?


விடை: 33


English words & meanings :


 purgation- cleansing தூய்மையாக்கல். 

nervation- arrangement of nerves in leaf இலை நரம்பு அமைப்பு


ஆரோக்ய வாழ்வு : 


 கொண்டைக்கடலை: நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது. 


செப்டம்பர் 26


மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்


மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்


1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.


நீதிக்கதை


 The Fox And The Crab நரியும் நண்டும்  கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு.


ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு. வெளி உலக ரசித்தது  நண்டு. கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு.அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி.ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு ,அந்த நரியோட விளையாடி என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு.


ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல,


 இப்ப அந்த நண்ட தின்னுச்சு . தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு.


இன்றைய செய்திகள்


26.09.2023


*கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை -  கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. 


*சென்னை திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட மூன்று மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரயில்.


* ஆந்திர 

தடுப்பணைகள் நிரம்பியது: கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.


* இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளா மாநிலம் முன்னணி: கேரளாவுக்கு மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது.


* ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி :

19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.


* ஆசிய விளையாட்டு 2023 : 

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.


Today's Headlines


*No new cases of Nipah virus in Kerala - Kozhikode is back to normal.


 *Vande Bharat train between Chennai and  Tirunelveli reaches it's destination three hours earlier than omni bus.


 *Andhra Pradesh

 Barrages full: Heavy rains cause flooding in Palaru.


 * Kerala state is leading in providing free treatment: Kerala has been receiving Arogya Manthan award by the central government.  Kerala state  won the award this year too.


 * Asian Games Women's Cricket Final:

 India won by 19 runs.


 * Asian Games 2023 :

 India's Pratap Singh Tomar won bronze in shooting.

 

25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...


 டிட்டோஜாக் உயர் மட்டக் குழுவின் முடிவின் படி பள்ளிக்கல்வித்துறை DPI வளாகத்தில் (13-10-2023) வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது...


>>> 25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...