கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA (B) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - TN EE MISSION (Ennum Ezhuthum - Class 1 to 5 - FA (B) Time for conducting all Formative Assessments has been extended upto Friday 08.12.2023 - TN EE MISSION)...

 

 எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA (B) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - TN EE MISSION (Ennum Ezhuthum - Class 1 to 5 - FA (B) Time for conducting all Formative Assessments has been extended upto Friday 08.12.2023 - TN EE MISSION)...




அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் Hi-Tech lab இணையதள வசதிக்கு மாதக் கட்டணம் SMC மூலம் அனுப்புதல் சார்ந்து SPD செயல்முறைகள் (Monthly fee for Hi-Tech lab internet facility operating in Govt High / Higher Secondary Schools is dispatch by SMC - SPD Proceedings)...

 

 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் Hi-Tech lab இணையதள வசதிக்கு மாதக் கட்டணம் SMC மூலம் அனுப்புதல் சார்ந்து SPD செயல்முறைகள் (Monthly fee for Hi-Tech lab internet facility operating in Govt High / Higher Secondary Schools is  dispatch by SMC - SPD Proceedings)...




போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)...



போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)...


தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோப்புகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளும் எளிதாகின. இப்போது கேமராவைப் பயன்படுத்தி கணிதச் சமன்பாடுகளைக்கூடத் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ‘போட்டோமேத்’ (PhotoMath) செயலி மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது!


கூகுள் தயாரிப்பு: கணிதம் மாணவர்களுக்கு பாகற்காய் போல கசக்கும் என்பது பொதுவான மனநிலை. அடுக்கடுக்கான கணக்குகளைப் பார்த்து மலைத்துப் போவோர் உண்டு. ஆனால், கணிதக் கற்றலை எளிமையாக்கி இருக்கிறது ‘போட்டோமேத்’ செயலி. குரோஷியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பம்சத்தைப் பார்த்த கூகுள் நிறுவனம், கடந்த 2022இல் விலைக்கு வாங்கியது. ‘போட்டோமேத்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.


அடிப்படைக் கணிதக் கணக்குகள் முதல் வடிவியல், இயற்கணிதம், கால்குலஸ் வரை பல கணக்கு முறைகளையும் ‘போட்டோமேத்’ செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். செயலியின் கேமராவில் கணிதக் கேள்வியைப் படம் பிடித்து பதில் கேட்டால், நொடிப்பொழுதில் விடைகளைத் தருகிறது ‘போட்டோ மேத்.’ ஒரு கணக்கின் முதல் பகுதியில் தொடங்கி படிப்படியாக விளக்கி, இறுதியில் விடை தருவதால், மாணவர்கள் எளிதாகக் கணக்கைப் புரிந்துகொள்ள முடியும். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘போட்டோமேத்’, கணக்குப் பாடம் படிப்பதற்கென அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. உலக அளவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இச்செயலி வழியே கணிதம் பழகுகின்றனர்.


குறிப்பு எடுக்கலாம்: கற்றுக்கொள்ள மட்டுமல்ல, கற்பிக்கவும் ‘போட்டோமேத்’ பயன்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்களும் திறன்பேசி வாயிலாக பிள்ளைகளுக்குக் கணிதப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். கணிதக் கணக்குகளை கேமராவில் படம் பிடித்து பதில் கேட்கலாம் அல்லது ‘போட்டோ மேத்’ செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கால்குலேட்டர் வசதியைப் பயன்படுத்தலாம். கணக்குகளை அதில் பதிவிடுவதன் மூலம் ‘போட்டோமேத்’ அதற்கான பதில்களைத் தரும். செயலியில் பதிவுசெய்யப்படும் கணக்குகளை ‘புக்மார்க்’ வசதி மூலம் சேமித்துக்கொள்ளலாம்.


தேவையிருப்பின் சேமித்து வைத்த கணக்குகளை மீண்டும் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். கணக்கு முறைகளைப் புரிந்துகொண்டு படித்தால் கணிதம் எளிது. ‘போட்டோமேத்’ செயலியைப் பயன்படுத்தி சந்தேகங்களை விளக்கிப் புரிந்துகொள்ளலாமே தவிர, வீட்டுப் பாடம் முடிக்க அல்லது ‘காப்பி’ அடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது தவிர, கூடுதலாக காணொளி வழி விளக்கங்களுக்கும், கணிதம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் ‘போட்டோமேத் பிளஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். எனினும் பெரும்பாலான பாடங்கள் அடிப்படை ‘போட்டோமேத்’ செயலி யிலேயே கிடைப்பதால் கணிதப் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது இச்செயலி.


>>> PhotoMath செயலியை Install செய்ய இங்கே சொடுக்கவும்...

சத்துணவு குறித்து தினசரி அறிக்கை - SMS அனுப்புதல் சார்ந்து DSE செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 (Daily report on Noon Meal Scheme – DSE Proceedings regarding on sending SMS Rc.No: 57479/ E/ E1/ 2023, Date: 09-11-2023)...



சத்துணவு குறித்து தினசரி அறிக்கை  - SMS அனுப்புதல் சார்ந்து DSE செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 (Daily report on Noon Meal Scheme – DSE Proceedings regarding on sending SMS Rc.No: 57479/ E/ E1/ 2023, Date: 09-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் அனுப்பிட பள்ளிக்கல்வி இயக்குனரின் (DSE) செயல்முறைகள் (Implementation of e-office – Director of School Education (DSE) proceedings to send details of Headmasters and staff)...


அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் அனுப்பிட பள்ளிக்கல்வி இயக்குனரின் (DSE) செயல்முறைகள் (Implementation of e-office – Director of School Education (DSE) proceedings to send details of Headmasters and staff)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e- office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்துவது - சில தெளிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Implementation of e-office in schools and offices under the Commissioner of School Education - Some clarifications and Proceedings of the Commissioner of School Education)...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2023 - School Morning Prayer Activities...
  


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம்:

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.



பழமொழி :
Familiarity breeds contempt

பழக பழக பாலும் புளிக்கும்.



இரண்டொழுக்க பண்புகள் :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :

ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம். ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?

விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
விடை: உருளைக்கிழங்கு



English words & meanings :

tentacles –soft long leg like structure in sea animals like octobus. சிலவகைக் கடல் விலங்குகளில் காணப்படும் கால்கள் போன்ற நீண்டு மெலிதான மென் பகுதிகளில் ஒன்று; உணர்ச்சிக்கொடுக்கு; பற்றிழை.


ஆரோக்ய வாழ்வு :

தாமரைப் பூ : தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ,இருமல் ,சுவாசக் கோளாறு நீங்கும்.



நவம்பர் 17

லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்


நீதிக்கதை

முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர்- ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே 'மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது... பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது... ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது... நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே... வெளியில் கொண்டு வர முடியவில்லை... குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி... குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான்.   அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது. கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான்... அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது. கை வெளியில் வந்து விட்டது என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன.  "நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து...குரங்கைப்போல அகப்பட்டு விடுகிறோம்...



இன்றைய செய்திகள்

17.11.2023

*தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18ம் தேதி கூடுகிறது.

* சந்திரயான் - 3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ அறிவிப்பு.

* அமெரிக்காவில் வசிப்பவர் ஆரோன் பார்த்தலோமி. இவர் பென்சில் சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

* மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

வாட்ஸ் அப் சாட் : ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

*ரோஹித் சர்மா இந்தியாவின் ரியல் ஹீரோ நசீர் ஹுசைன் புகழாரம்.

Today's Headlines

*The special session of the Tamilnadu Assembly will be held on the 18th.

* Chandrayaan-3 rocket part has fallen into sea: ISRO statement

* Aaron Bartholomew is a US resident.  He holds the Guinness record for pencil collection.

* Security arrangements are intense for the  tomorrow's polling in Madhya Pradesh and Chhattisgarh .

*Whats Up Chat*: It is informed that all the history backup information will come under Google Cloud Storage restrictions' terms and conditions.

*Rohit Sharma is India's real hero:  praises  Naseer Hussain.


தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.4704, Dated: 16-11-2023 - Transfer of 6 IAS officers in Tamil Nadu) வெளியீடு...


தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.4704, Dated: 16-11-2023 - Transfer of 6 IAS officers in Tamil Nadu) வெளியீடு...


தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...





◾️ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்

◾️ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம்

◾️ தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்

◾️ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்

◾️ சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்

◾️ ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...